(குறிப்பு-இந்திய சினிமா தனது நூற்றாண்டு கொண்டாட்டத்தில்... இந்தியாவில் தமிழகமும் அதன் கோலிவுட் திரையுலகமும்தான் முன்னணியில் உள்ளது...அதைப் பற்றிய பதிவு)
இன்று உலகிலேயே இந்தியாதான் அதிக அளவில் திரைப்படங்களை 35 மொழிகளில் உற்பத்தி செய்யும் மிகப் பெரிய கனவுத் தொழிற்சாலை..அதிலும் தமிழ் கோலிவுட் திரைலகமே முதலிடம்.... உலகில் தமிழனே மிகுந்த அறிவாளி என்பதின் அடையாளமா ? அல்லது நல்ல சுகவாசி..பொழுது போக்குவாதியா?
இந்தியாவில் 2011-ல் தயாரிக்கப்பட்ட 1.255 படங்கள் 2012-ல் 1.602 படங்களாக வளர்ச்சி அடைந்துள்ளதாகத் திரைப்படச் சான்றிதழ் (CBFC) மத்திய வாரியம் மூலம் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
அவைகளில் கடந்த ஆண்டு 262 திரைப்படங்கள் தயாரித்துத் கோலிவுட் முதலிடத்திலும்
தெலுங்கு திரைப்படத் துறை 256 படங்களில் இரண்டாவது இடத்திலும்
பாலிவுட் 221 திரைப்படங்களில் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
இவைகளில் .சோதனை முறையாக வலுவான திரைக்கதையை மட்டுமே நம்பி எந்த பெரிய நட்சத்திர நடிகர்களும் இன்றிக் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படங்களே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கண்டவைகள்......
கடந்த ஆண்டு நிறையப் படங்கள் வந்தாலும் பெருமைப்பட எதுவுமே இல்லை...வந்தவைகளில் பொருளாதார அடிப்படையில் வென்றவைகள் 10 சதவீதம் மட்டுமே.
இவைகளில் 35 மொழிகளில் CBFC சான்றிதழ் பெற்ற 1,602 படங்களில் இன்னும் திரையரங்குகளில் வெளிச்சத்துக்கு வராதவைகள் அதிகம்..அவைகளில் கதி...அரோகதி.
ஆயினும் நம்ம தயாரிப்பாளர்கள் கையில் திருவோடு ஏந்தி தெருவோடு போனாலும் அவர்களைவிட்டுத் திரைப்படம் எடுக்கும் ஆசை போகவில்லை.....சினிமாப் போதையின் அடிமைகள் அவர்கள்.
இந்தச் சினிமா சூதாட்ட உலகில் கோடிகளில் புரண்டவர்கள் தெருக்கோடிக்கு வந்தாலும் இழந்ததை மீட்க...
விட்டதைப் பிடிக்க...மீண்டும் மீண்டும்
ஆயிரம் தோல்விகள் சந்தித்தாலும் "அடுத்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் கிளிக்" என்ற நபிக்கையோடு....அடக்..கன்றாவியே..என்ன சினிமா உலகமடா இது...?
இப்படியே நாடு போனால்...
சைனாக்காரன் நாலு சினிமா படம் காட்டினால் நாட்டையே அவனிடம் கொடுத்துடுவாயிங்களோ...?
thanks-YouTube-by John Rajesh
இந்தக் கேடுகெட்ட சினிமா உலகில்
தமிழ்தான் முன்னோடியாக இருப்பதால்..
இதில் கொடுமையிலும் கொடுமை....
இன்று தமிழ் இனத்துக்குப் பாடுபட வரிசையில் நிற்பவர்கள் எல்லோரும் சினிமாக்காரர்கள் என்பதுதான்....
நிழலிலும் நிஜத்திலும் நல்ல நடிகர்கள்
*****************************************
இங்கே....................காதல் யுத்தம்
காதலர்களே!
கொஞ்சம் கேளுங்கள்.....
நம்ம நாட்டு பிளாட்டோ
தந்தை பெரியார்
சொல்வதையும் கேளுங்கள்...............மேலும்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
