(குறிப்பு-இது நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படத்திற்கு தலைவர் (கலைஞர்) விமர்சனம் எழுதினால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை நகைச்சுவைப் பதிவு.....)
என் உயிரிலும் மேலான உடன்பிறப்பே!
இங்கே தலைவா என்று ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கக்கூட தம்பி விஜய்க்கு இந்த நாட்டில் அனுமதியில்லை..
அதனால் அவருக்கு தொல்லையோ தொல்லை
உடன்பிறப்பே! அறிந்தாயா தமிழ்நாட்டில் என்ன ஆட்சி நடக்கிறது என்று..? அப்படி என்னதான் இருக்கிறது தலைவா-திரைப்படத்தில்...?
அண்ணா என்று ஒருவர் ஒன்றிரண்டு கொலைகள் செய்து மும்பையில் தாராவி தமிழர்களுக்கு தலைவராகி....தாராவியையும் தமிழர்களையும் காப்பாற்றுகிறார்....அதைப் பிடிக்காத அண்ணாவின் எதிரிகள் போலிஸ் உதவியுடன் அவரைப்பிடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் கோழைகளாய்.....ஆஸ்திரேலியாவில் உள்ள அண்ணாவின் மகன் தம்பி விஜயை............
.இங்கே தமிழ்நாட்டில் தெருவுக்கு தெரு டாஸ்மாக்கில் நல்ல தண்ணி விற்பதுபோல் அன்றி....உண்மையிலேயே தம்பி விஜய் ஆஸ்திரேலியாவில் நல்ல தண்ணி வியாபாரம் செய்கிறார்....அதை எப்படியோ தெரிந்துகொண்ட மும்பை போலிஸ் அமுல்...பால் என்ற பெண் ASP போலிஸ் அதிகாரியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி அவரது காதல் வலையில் சிக்கவைத்து.. மீண்டும் மும்பைக்கு கூட்டிவந்து அண்ணாவை கைது செய்து வெடிகுண்டு வைத்து கொன்றுவிடுகிறார்கள்
அண்ணாவை கொன்றவர்களை சும்மா விடமுடியுமா...? அதனால்தான் அவரது மகன் விஜய் எதிரிகள் அனைவரையும் கொன்று அவரே அண்ணாவாகி தமிழர்களைக் காக்க தலைவராகிறார்....இது தவறா?
(தலீவரே...இந்த விமர்சனத்தைப் படிச்சு நம்ம உடன்பிறப்புகள் பாதிபேரு மயக்கத்தில கிடக்கிறாயிங்க...இப்படினு தெரிஞ்சிச்சுனா நான் அறிவிக்கை விட்டுயிருக்க மாட்டேன் இன்னும் கொஞ்ச நாளைக்கு தடையிலே கிடையா கிடக்கட்டும்னு விட்டுயிருப்பேன்.. கொஞ்சம் மாத்திச் சொல்லுங்க...)
யாரது..தம்பி அன்பழகனா...நான் தலைவாவுக்கு தடையா..? என்று அறிவிக்கை விட்டதும் தம்பி நீ....யாமிருக்கப் பயமேன் என்று வீறாப்புடன் படத்தை திரையிட துணிந்த நீயா...இப்படி பேசுவது...?
என் உயிரிலும் மேலான உடன்பிறப்பே! அண்ணாவின் பெயருக்காகவும் தலைவாவின் பெயருக்காகவும் எல்லோரும் தம்பி இளைய தளபதியின் தலைவா படம் பார்த்து வெற்றி பெறச்செய்யுங்கள்...
தம்பி இளைய தளபதி அவர்களே நீங்கள் வரும் தேர்தலில் கழகத்தின் பெரிய தளபதியுடன் இணைந்து...தம்பி வடிவேலு போன்று அண்ணாவின் தம்பியாகிய எனக்கு பிரச்சாரம் செய்திடவேண்டும் ...வாழ்க அண்ணா நாமம்
(அண்ணேன்...நேத்து பத்து பழைய புரட்சிதலைவர் படம் பார்த்தேன் அதிலருந்து பெருந்தலைவா (தலைவா-பார்ட் 2 ) அப்படின்னு ஒரு கதை ரெடி..அதிலபாருங்க உங்க பேரு காமராசு.... பெரும்தலைவா.....ஆ..ஆஆஆ..னு ஒரு பாட்டும் இருக்கு ஹி...ஹி..இதெப்படி இருக்கு)
(நீங்கதான் பெருந்தலைவா படத்துக்கும் பைனான்ஸ் பண்ணுறீங்க
இந்தக் கதைய இரண்டே நிமிசத்தில ஒ.கே பண்ணிட்டேன்
ஒருதடவ நான் முடிவு பண்ணிட்டா அப்புறம் நானே சொன்னாலும் கேட்கமாட்டேன்......ஆங்... )
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |

