google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 6 - ஒரு கலைப்படம் அல்ல (ஜெயமோகன்)

Thursday, September 19, 2013

6 - ஒரு கலைப்படம் அல்ல (ஜெயமோகன்)


ஆகா..ஓகோ  என்று சொல்லும்  சாதாரணப் பாமர ரசிகனுக்குப் புரியாமல் இப்போதெல்லாம்  அறிவுஜீவிகள் மால் தியேட்டரில் பிஸ்சாவைப் பியித்து விழுங்கிக்கொண்டே நைஸ்...பைன்..வாவ்... என்று பிதற்றும் படங்களே தரமான படங்கள் என்று நினயிக்கப் படுகின்றன 



6- படம் அந்த வகையைச் சேர்ந்த படங்களின் வரிசையில் வருகின்ற படமா? ட்ரைலரைப் பார்த்தால் வித்தியாசமாக உள்ளது புகைப்படங்களைப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது.... உண்மையிலையே.... வாவ்..வோவ் 

freeonlinephotoeditor

உயிரைக்கொடுத்து நடித்திருக்கிறேன் என்று இப்போதெல்லாம் சில நடிகர்கள் பிதற்றுவது திரையரங்கில் போய்ப் படத்தில் அவர்கள் நடிப்பைப் பார்த்தால்...அடக் கன்றாவியே...அவிய்ங்க ஹீரோயினுடன் அட்டை போல் ஒட்டிக்கொண்டு ...அதைத்தான் சொல்லியிருப்பாயிங்களோ  தாங்க முடியவில்லை.... ஆனால்..நடிகர் ஷாம் இந்த 6 - படத்தில் உண்மையில் உயிரைக் கொடுத்து நடித்துள்ளது ட்ரைலரைப் பார்த்தாலே தெரிகிறது 

freeonlinephotoeditor

நடிகர் ஷாம் அடையாளம் தெரியாத அளவுக்கு.....பலநாட்களாகத் தூங்காமல் விழித்திருந்து வரவழைத்த வீங்கிப் பிதுங்கிய விழிகள்....ஒரு பக்கம் சிக்ஸ் பேக்ஸ் கட்டான உடல் இன்னொரு பக்கம்  நீண்ட முடி தாடியுடன் நோஞ்சான் உடம்பு என்று ஆரோக்கியமற்ற ஆபத்தான வழிமுறைகளில் மருத்துவக் குழுவினர் கவனிப்புடன் இப்படத்தில் உண்மையில் உயிரைக் கொடுத்து நடித்துள்ளார் என்பது அப்பட்டமாக இப்பட முன்னோட்டத்தில்...

http://kollytalk.com/posters/wp-content/uploads/2013/08/6-Movie-Pre-Release-Poster.jpg

இவை எல்லாவற்றையும் விட இயக்குனர் முகவரி துரையின் 6 படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன்.....
‘6’ ஒரு கலைப்படம் அல்ல. அனைத்து ரசிகர்களுக்குமான ஓர் உணர்ச்சிகரமான படம்தான்.ஆனால் நான் எழுதியவரை அதற்குள் ஆத்மார்த்தமான ஒரு வாழ்க்கைச்சித்திரம் இருக்கிறது. அடிப்படையான மனித துயரத்தின் சில மகத்தான கணங்கள் இருக்கின்றன."


6

படத்தின் கதையாக.....ஒருவன் தன் அடையாளத்தைத் தேடி, தான் யார் என்பதைத் தேடி இந்தியாவின் 6 மாநிலங்களில், 6 வருடங்கள், 6 மாதங்கள், 6 வாரங்கள் அலையும் ஒரு வித்தியாசமான கதை. 
படத்தின் கதையைப் போலவே பூனம் கௌர்வுடன் இணைந்து நடித்துள்ள  நடிகர் ஷாமும் 2011-ல் படத்தைத் தொடங்கிப் பல சிரமங்களுக்கிடையில் இப்போதுதான்  (செப்-20) வெளிவருகிறது.


                              thanks-YouTube-bysaregamasouth saregamasouth

ஆனால்...படம் வெளிவரும் காலகட்டம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையும் மாறி தங்க மீன்கள்...மூடர் கூடம் போன்ற வித்தியாசமான படங்களை வரவேற்கும் காலகட்டம்.......6 - படம் அனைத்து வெற்றியும் பெற .........வாங்க....திரையரங்கில் பார்த்து வாழ்த்துவோம் 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1