மோடி சொன்னதும்...........
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நடந்த தனது முதல் கூட்டத்தில் பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்தையும் துப்பாக்கி கலாச்சாரத்தையும் விடவேண்டும் என்று அறிவிக்கை விடுத்தார்....
ஹரியானாவில் உள்ள முன்னாள் வீரர்களின் மாபெரும் பேரணியில் பேசிய அவர்.......... பாக்கிஸ்தான் அது சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிரான அதன் போர் மனப்போக்கையும் பயங்கரவாதத்திற்கு ஆதரவையும் கைவிடாததால் அந்த நாடு எவ்வித முன்னேற்றத்தையும் காணவில்லை என்ற அவர் போர் முனையில் வெற்றிக்கான முடியாத பாக்கிஸ்தான் அப்பாவி குடிமக்களைக் கொல்வதாகக் தெரிவித்தார்
மோடி சொல்லாததும்.......
இதனால் இந்திய நாட்டில் உள்ள ஒட்டு சீட்டு வைத்திருக்கும் நியாயன்மார்களே நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் உங்கள் வாக்குகளைப் பாரதிய ஜனதா கட்சிக்கு ஓட்டுப் போட்டு என்னைப் பிரதமராக்கினால்...அடுத்த நாளே முன்னாள் இன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரையும் படை திரட்டி நானே தலைமைதாங்கி பாக்கிஸ்தானை பிடித்து இந்தியாவோடு இணைத்து......... அதனால் கோச்சடையான் ரஜினி கோபப்படாமல் படத்தில இரண்டு பன்ச் அடிச்சி எனக்கு பிரதமராக ஆதரவு செய்யவேண்டும்
(ரஜினி அண்ணேன்...அவரு சரியாத்தான் சொல்லுறாரு......நீங்க என்ன சொல்லுறீங்க....நம்ம கோச்சடையான பாக்கிஸ்தான்ல டப்பு பண்ணி ரிலீஸ் பண்ணுன்னா..அப்புறம் அவியிங்க யாரும் இந்தப் பக்கமே தலைவச்சி படுக்கமாட்டாயிங்க.. உங்க மாமுல் பன்ச் டயலாக்கை எடுத்துவிடுங்க....
"மோடி பிரதமராகவில்லை என்றால் இந்தியாவை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது")
கோச்சடையான் ரஜினி சொல்லாதது...
அட..போய்யா புண்ணாக்குப் பதிவரே! நானே கோச்சடையான்....... பணம் போச்சடையானா? என்று மூச்சடையானா முழிக்கிறேன்... அம்மா.. சௌந்தர்யா வாம்மா....மின்னல்...இன்னும் கோச்சடையான் பொம்மைக்குக் கையக் கால அசைக்கனுமா...? நம்ம படையப்பா டைரடக்கர கூட்டிக்கிட்டு வாம்மா....
"வெற்றிக்கொடி கட்டு.. கோச்சடையப்பா!
அரசியல் ஒரு சாக்கடையப்பா......"
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |
