google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கிராண்ட் மஸ்தி (இந்தி)

Monday, September 16, 2013

கிராண்ட் மஸ்தி (இந்தி)

(குறிப்பு-கிராண்ட் மஸ்தி போன்று ஒரு படத்தை இச்சை,கொச்சை,பச்சை,எச்சை.... என்று இதுவரை இப்படி விமர்சகர்கள் யாரும் கடித்து குதறியதில்லை.... )

http://kshitijummat.com/wp-content/uploads/2013/09/Grand-Masti.jpg

2004 ஆம் ஆண்டு வந்த மஸ்தி என்ற படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ள கிராண்ட் மஸ்தி.........முழு நீள...சாரி...நீல... வயது வந்தோருக்கான காமெடிப் படம்.......ஆனால் படம் காமெடியோ இல்லையோ விமர்சர்கள் கடிக்கும் கடி...........நல்ல காமெடி    

freeonlinephotoeditor

இந்திரகுமார் இயக்கிய கிராண்ட் மஸ்தி படத்தில் விவேக் ஓபராய், அஃப்தாப், ரித்தேஷ் தேஷ்முக்,புருனா அப்துல்லா,கரிஷ்மா தன்னா,சோனாலி குல்கர்னி,மரியம் ஜகரியா..இப்படி ஏகப்பட்ட கவர்ச்சிக் காளையர்களும் கவர்சிக் கன்னியர்களும் நடித்துள்ளனர்... 

freeonlinephotoeditor

கதை-கல்லூரியில் ஒன்றாக படித்த மூன்று இளைஞர்கள் தங்கள் திருமணத்திற்குப் பிறகு ஓன்று சேர்ந்து அடிக்கும் கில்மா காமக் கலாட்டாக்கள்............மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை 

freeonlinephotoeditor
படமுழுக்க உதட்டு முத்தங்கள்...இரட்டை அர்த்த வசனங்கள்... நிறைந்து கிடக்கின்றன அபத்தமான காட்சிகள் இல்லைஎன்றாலும் 
விரசமான வசனங்கள் விதண்டாவாத கழிசடை கன்றாவிகள் நிரம்பிக் கிடக்கின்றன... 


freeonlinephotoeditor

உதாரணத்திற்கு ஓன்று சொல்வதென்றால்....ஒருவர்  மருந்துக் கடையில் ஒரு காண்டம் பாக்கெட்-டைக் காட்டி "இதை நான் பாலோடு சாப்பிடனுமா...? அல்லது தண்ணீரோடு சாப்பிடனுமா...? என்று கேட்க......அதற்கு ரித்தேஷ் வாழைப் பழத்தோடு சாப்பிடு என்று சொல்கிறார்.

freeonlinephotoeditor

படத்தைப்பற்றிய விமர்சனங்கள் அனைத்தும் காட்டுத்தீயாக பற்றி எரிகிறது."நடிப்பு கிடையாது நகைச்சுவை அச்சுறுத்துகிறது இசை பரிதாபகரமாக உள்ளது.இந்தப் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று ஒரு சிறு காரணமும் இல்லை" என்று நினைப்பதுடன் இந்தப் படத்தை தவிர்க்கவேண்டும் என்று வேண்டுகிறார் பாலிவுட் படங்களின் சிறந்த விமர்சிகர் அனுபமா சோப்ரா 
 
freeonlinephotoeditor

முஹர் பாஸு தனது மதிப்பீடாக...0.5/5 ரேட்டிங் கொடுத்துவிட்டு 'திரைச் சீலையில் ஒரு குப்பை" என்று காறித் துப்புகிறார்.
அபிஷேக் மண்டே தனது மதிப்பீடாக 0 ரேட்டிங் கொடுத்து படத்தில் ரசிப்பதற்கு எதுவுமில்லை என்றும் பெண்கள் தரக்குறைவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆதங்கம் கொள்கிறார்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO1RgEg8EIcICFnKLe5m7vfb6y1T6RTDBoeZH5PNzshOl_TVrZYRKP9u-RtvYjih26crySVslCFlDwQHGvSk5Idm2Up4C48esu7SbL7lbg_IEn_fjzcFMDeG1e7lsz0nHKyH0dJCHJAXV2/s1600/TuBhiMoodMein1.jpg

அதேநேரத்தில் சுபாஷ் கே ஜா,சுஜேஷ்...போன்றவர்கள் இப்படத்தை உண்மையான brainless நகைச்சுவை படம் என்றும் இந்திய திரைவானில் இந்திரகுமாரின் துணிச்சலான முயற்சி என்றும் பாராட்டுகிறார்கள்

freeonlinephotoeditor

இன்னும் சிலர் சினிமா என்பது பொழுது போக்குவதற்குதானே தவிர அது நீதிக்கதைகள் சொல்லி பாடம் நடத்துவதற்கு அல்ல..திரையரங்குகள் போதனை செய்யும் பள்ளிக்கூடம் அல்ல என்றும் இப்படத்திற்கு வரிந்துக் கட்டிக்கொண்டு பரிந்துரை செய்கிறார்கள்   

https://i1.ytimg.com/vi/tixvSa7EjxA/hqdefault.jpg
ஒரு பக்கம் சமீபத்தில்தான் மும்பையில் ஒரு பெண் நிருபர் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டும்..இன்னொரு பக்கம் டெல்லி பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு தண்டனையை தீவிரப்படுத்தியுள்ள நீதிமன்றம்......நாடு இப்படியிருக்க...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEii3WCS44y7-SEA0FQXEBdWUHEqu7sKygp7ZBdZ_kEZupiqcAfl4r29mWUXnLl6S5ma6EA7lF7FjzXT48iZ8ger6MPu2PcBlgN-cZOU0aH6tYDGVmPqyCEOrQjx-qt8g5EDQF0ObYN2WoY/s1600/Grand-Masti.jpg

முதலில் இப்படத்திற்கு பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் விதித்திருந்த வெளியீடு மீதான தடை உத்தரவை நீக்கிகொண்டு படம் குறிப்பிட்ட நாளில் வெளியானது

https://pbs.twimg.com/media/A_k7Ss5CUAAhDUJ.jpg:large

எல்லாவற்றிலும் கொடுமை என்னவென்றால் படத்தின் துவக்கம் முதல் நாளே சென்னை எக்ஸ்பிரஸ் போன்று அமோக அறுவடை...இரண்டே நாளில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில்  26 கோடி வசூலித்து இவ்வருடத்தின் நான்காவது மிகப்பெரிய வசூல் படவரிசையில் உள்ளது.....போகிற போக்கைப் பார்த்தால் தேசிய விருது கொடுத்தாலும் கொடுப்பார்கள் போலத் தெரிகிறது.


                                 thanks-YouTube-by T-Series

(அண்ணேன்..நம்ம சென்னை மால் தியேட்டரிலும் இந்தக் கொடுமைதான் அண்ணேன்...இங்கே சுற்றி இந்திக்காரர்கள் நிறைய இருப்பதால் மூடர் கூடம் + மத்தாப்பு ஒரே திரையரங்க பங்கு போட்டுக்கொள்ள...கிராண்ட் மஸ்தி ஒரே அரங்கில் நாலு காட்சிகளாக வயதுக்கு வந்தவர்கள்...வராதவர்கள்...வந்தும் வராதவர்கள்...என்று அரங்கு நிறைந்து ஓடுகிறது...)

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1