google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய் சேதுபதி Vs சிவகார்த்திகேயன்-ஜெயிக்கப் போவது யாரு?

Sunday, September 15, 2013

விஜய் சேதுபதி Vs சிவகார்த்திகேயன்-ஜெயிக்கப் போவது யாரு?





(குறிப்பு-தமிழ் திரையுலகில் ரஜினி,கமல்,விஜய்,அஜித்...போன்ற நட்சத்திர நடிகர்கள் அல்லாது.... இன்று அனைவராலும் நேசிக்கப்படும் நடிகர்களாக வளர்ந்து வரும் விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன் பற்றி....)



வித்தியாசமான கதைக்களம்..ஏற்றிவிடும் ஏணிகள் இல்லாது திறமை ஒன்றையே நம்பிக்கையாக...உச்சத்தை எட்டிப்பிடித்த நடிகர்கள்...இன்று விமர்சிகர்களால் the two young guns of Kollywood என்று பாராட்டப்படும் விஜய் சேதுபதியும் சிவகார்த்திகேயனும் ஆவர்.


vijaysethupathi

கூத்துப்பட்டறையில் கணக்கராக வேலை செய்த விஜய் சேதுபதி...தனக்கு கிடைத்த சிறு வேடங்களில்.......புதுப்பேட்டை,லீ,நான் மகான் அல்ல,வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் நடித்து பிட்ஸா,நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் போன்ற படங்களில் தன் திறமையைக் காட்டி சூது கவ்வும் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று.......



விரைவில் வரவிருக்கும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அனைவருக்கும் உருவாக்கி வைத்துள்ளார்


sivakarthikeyan

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இது அது எது? போன்ற நிகழ்சிகள் மூலம் நம்மையும் சிரிக்கவைத்து தன் திறமையை வளர்த்துக் கொண்ட சிவகார்த்திகேயன்..... மெரீனா,3,கேடி பில்லா கில்லாடி ரங்கா..போன்ற படங்களில் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தி... எதிர்நீச்சல் படம் மூலம் யதார்த்தமாக நடித்து இன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அசைக்க முடியாத நடிகராக வளர்சியடைந்துள்ளார் 



இவர்கள் இருவரும் தங்கள் வேறுபட்ட திறமையால் தங்களை திரையுலகில் நிலை நாட்டியவர்கள் திரையுலகில் இவர்கள் வந்த பாதையும் போகும் பாதையும் ஒன்றுதான்......மிகைப்படாத நடிப்பு. 



ரஜினி-கமல்  அஜித்-விஜய் இவர்கள் மாறுபட்ட  கோணங்களில் தங்களுக்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார்கள் ஆனால் இவர்கள் இருவரின் கதைக்களங்களும் நடிப்பும் யதார்த்தமாகவும் ஜனரஞ்சிதமாகவும் ஒரே மாதிரி இருக்கிறது............

இவர்கள் இருவரும் நிலைப்பார்களா? இவர்கள் இருவரும் ரஜினி-கமல் போன்று காலத்தால் பேசப்படுவார்களா...? 

இவர்கள் நட்சத்திரங்களாக நிலைப்பார்களா...? அல்லது இருவரும் மின்மினி பூச்சி போன்றவர்களா...? 

இவர்களுக்குள் நடக்கும் இந்த ஓட்டப்பத்தயத்தில் இருவரும் வெல்வார்களா..?

காலம்தான் பதில் சொல்லவேண்டும் என்பதில்லை இவர்களின் இனிவரும் படங்கள்தான் பதில்சொல்லும் என்பதில்லை...எல்லாம் அறிந்த நீங்களே சிறந்த நீதிபதிகள்.........


உங்கள் பார்வையில்........
விஜய் சேதுபதி Vs சிவகார்த்திகேயன்-ஜெயிக்கப் போவது யாரு?   

வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1