இந்திய அரசியலில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நரேந்திர மோடியின் திருச்சி இளந்தாமரை மாநாடு.....
மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் மோடியின் பேச்சுக்கள் அத்தனையும் தமிழ் மொழி மீதும்...தமிழக மக்கள் மீதும்...தமிழக மீனவர்கள் மீதும் அதீத அக்கறையுடன் உள்ளது.
குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் ஏன் தூக்கிச்செல்கிறது? தமிழக மீனவர்களை ஏன் இலங்கை தூக்கிச்செல்கிறது. மத்தியில் இருக்கும் பலமில்லாத ஆட்சியால்தான். குஜராத்தாக இருக்கட்டும், தமிழகமாக இருக்கட்டும், கர்நாடக,கேரளா மீனவர்கள் நிம்மதியாக இருக்கவேண்டுமானால் மத்தியில் தற்போது இருக்கும் ஆட்சி மாறவேண்டும்.
இன்னும் அவரது பேச்சில் காந்திஜி,ராஜாஜி,நாமக்கல் கவிஞர்,அப்துல் கலாம் போன்றவர்கள் பெயர் அடிபடுகிறது (அண்ணேன்...அம்மா பெயர் சொல்லவில்லையே...? சூப்பர் ஸ்டார் பெயர் சொன்னா இன்னும் சூப்பராயிருக்கும்...?)
இது போன்ற கூட்டத்தை தமிழகத்தில் அவர் பார்த்ததில்லை இந்தக் கூட்டம் மத்தியில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்கும் என்கிறார்
(அய்யோ...மோடி அய்யா...எங்க ஆட்கள் அய்யா வந்தாலும் கூடுவாயிங்க...அம்மா வந்தாலும் கூடுவாயிங்க...)
(அண்ணேன்...அந்த காலத்தில் மன்னர்கள் படையெடுத்து வந்தது போல் இந்த காலத்தில் இவர்கள் படையெடுக்கிறார்கள்...இந்தக் கூட்டம்கூட அண்ணன் சூப்பர் ஸ்டார் மேடையில் தோன்றினாலும் தோன்றுவார் என்று நினைத்து வந்த கூட்டமாக இருக்கும்....பேசாமல் இவரும் கோச்சடையானில் நடிக்கிறார் என்று ஒரு புரளியைக் கிளப்பினால் இன்னும் கூட்டம் அதிகமாக இருந்திருக்கும்)
அய்யோ...நியாயன்மார்களே! எனக்குத்தான் இவியிங்க அரசியலில் எதுவும் புரியமாட்டேங்கிறது....
உங்கள் பார்வையில்...
உண்மையில் இந்தக் கூட்டம் அவருக்கு வெற்றியைத் தருமா...? மத்தியில் ஆட்சிமாற்றத்தை உண்டாக்குமா...?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.........
(குறிப்பு-இந்தக் கருத்துக்கணிப்பு உண்மை நிலையை தெரிந்துகொள்ளவே..
மற்றபடி எவ்வித அரசியல்...மதம்...சார்ந்ததுமல்ல)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |