google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கோச்சடையான்-வெற்றி முன்னோட்டமா?கருத்துக்கணிப்பு

Tuesday, September 10, 2013

கோச்சடையான்-வெற்றி முன்னோட்டமா?கருத்துக்கணிப்பு

கோச்சடையானின் இந்த 1.14 நிமிட முன்னோட்டக் காணொளி வீடியோவை அது வெளியான ஒரே நாளில் YouTube-ல் மட்டும் 9,23,846 மக்கள் பார்த்துள்ளனர் மற்றும் லைக் செய்துள்ளனர்
(அண்ணேன்..இப்படி எல்லோரும் டீசர் பார்த்தத வச்சு அம்புட்டு பேரும் படம் பாப்பாயிங்களா...? அப்படி பார்த்தா சூப்பர் ஸ்டார் ஹோலிவுட் ரேன்ஜ்-க்கு எங்கேயோ போயிடுவாரு..)   



ரூபாய் 100-கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் கோச்சடையான் திரைப்படம் அவதார் மற்றும் டின் டின் போன்ற ஹாலிவுட் படங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதல் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் வரும் படத்தின் டீசருக்கே இவ்வளவு எதிர்பார்ப்பு என்றால்...ஆச்சரியமாக உள்ளது

                                 thanks-YouTube-by Eros NowEros Now

இந்த
டீஸர் கோச்சடையான் படத்தின் கதை எதையும் தெரியப்படுத்தாமல் அதே நேரத்தில் இரண்டு ரஜினிகாந்த் உருவங்களைக் காட்டி அனைவரையும் கவர்வதாக உள்ளது என்று
எழுதுகிறது dnaindia.com
இந்த முன்னோட்டம் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்சை விட அவரது ரசிகர்களால் அதிகம் நேசிக்கப்பட்டதாக சொல்கிறது indiatoday.in 
(அண்ணேன்...இவ்வியிங்கதான் டீசர் வெளிவர லேட்டானதுக்கு சங்கு ஊத்தினாயிங்க...இப்ப இவியிங்கதான் ஆகா...ஓகோ எங்கிறாயிங்க...இந்த மீடியாக்காரங்கள நம்பவே முடியாது...)   

freeonlinephotoeditor

  கோச்சடையான் இயக்குனர் சௌந்தர்யா........
"இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அசல் 3D படம்.(photorealistic 3D film) புதிய தொழில் நுட்பத்தில் நடிகர்களின் முகங்கள் ஸ்கேனிங் செய்யப்பட்டு தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகே படம் உருவாக்கப்படுகிறது" என்று சொல்லுகிறார்

freeonlinephotoeditor

மேலும் கோச்சடையானில் வரும் ரஜினிகாந்தின் உருவம் முகபாவனைகளும் முடி..தாடி..அலங்காரமும் ரஜினியின் பாட்ஷா மற்றும் தளபதி படங்களில் அவரது தோற்றத்தின் சாயல் என்றும் சொல்கிறார்

freeonlinephotoeditor

  கோச்சடையான் திரைப்படத்தின் முன்னோட்ட படக்காட்சி......
"ஹீரோக்கள் இருக்கிறார்கள்...
சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள் 
ஆனால்...ஒரே ஒரு ரஜினிகாந்த் மட்டுமே "
என்று பீடிகையுடன் பந்தாவாக வெளிவந்துள்ளது.........இந்த முதல் டீசரில்  ரஜினிகாந்தை இரட்டை வேடத்தில் வீரராக காட்டியுள்ளதாகவும்

http://www.bollywood.nl/wp-content/DP-2013-e1360438358305.jpg


இனி வரும் அடுத்த டீசரில்... தீபிகா படுகோனே-வை அழகான இளவரசி வதனா தேவியாக காட்டப்போவதாகவும் சௌந்தர்யா தனது ட்வீடரில் தெரிவித்துள்ளார்...(ஆக...சினிமா மக்களே எல்லோரும் தயாராயிருங்க...விரைவில் இன்னொரு கவர்ச்சிப் படக்கூத்து முன்னோட்டம் அரங்கேறப்போகிறது)

ஆனால் என் பார்வையில்.......இந்த முன்னோட்டத்தைப் பார்க்கும் போது சிறுவயதில் எங்க ஊர் கோயில் திடலில் டென்ட் போட்டு பாக்கூத்து (பாவைக்கூத்து) பார்த்த நியாபகம் வருதே... 

freeonlinephotoeditor

(ஆமான்னேன்...அதேதான் அவிங்க மாட்டு தோலில் படத்த வரைஞ்சு குச்சில கட்டி ஆட்டுவாயிங்க..வெள்ளை சேலைய திரையாக கட்டி பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில கூத்து காட்டுவாயிங்க...இப்ப காலம் மாறிப்போச்சுலா...அதுதான் இவியிங்க கம்புட்டருல படத்த வரைஞ்சி சினிமாவா காட்டுராயிங்க...கவர்ச்சிப் படக்கூத்து )  
 
http://timesofindia.indiatimes.com/photo/18747037.cms


எது எப்படியோ...கோச்சடையானின் முன்னோட்டத்திற்கு கிடைத்துள்ள ஆதீத வரவேற்பு அப்படக் குழுவினருக்கு பூஸ்ட் குடித்தது போல் உடனடி சக்தி கிடைத்துள்ளது....
(LED HD டி.வி.திரையில் 3-D யில் டீசரை பார்த்தப்போது...
ரஜினி சுவரை உடைத்துக் கொண்டு வரும் காட்சியும் குதிரையில் வரும் காட்சி..கடைசியில் அவர் ஸ்டைலாக நடந்து வரும் காட்சி அருமையாக உள்ளது....)         
கோச்சடையானின் முன்னோட்டம்
வெற்றியின் முன்னோட்டம்           

                                ..........பரிதி.முத்துராசன் 
உங்கள் பார்வையில்..........

கோச்சடையான் டீசரின் வெற்றி கோச்சடையான் படத்திற்கும் வெற்றி தருமா?

 வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி முடிவு-12/09/2013



இங்கே....
கோச்சடையான்-
கோபத்தில் கொந்தளிக்கும் ட்வீட்டர்கள்


(கோச்சடையான் படம்...... இன்னும் தோசையே சுட்டு முடிக்கவில்லை அதற்குள் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு நம்ம ட்வீட்டர்கள் தொல்லை தாங்கமுடியவில்லை...மேலும் )

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1