google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்ன ப்ரோ..எப்படியிருக்கு நாடு?

Tuesday, September 10, 2013

என்ன ப்ரோ..எப்படியிருக்கு நாடு?


(குறிப்பு-இது அரசியல் சந்ம்பத்தமான...சம்பந்தமான  பதிவு..என்ன ஆரம்பமே குளறுபடியா...உளறலாக இருக்குன்னு பார்க்கிறீங்களா ப்ரோ..அப்படித்தான்...  அரசியல் அல்லக்கைகைகள் யாரும் படிக்கவேண்டாம்....)


இவை  இன்று  செப்.10 அன்று உலகளவில் நடந்த நிகழ்வுகள்.......
அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய 3 நாட்களையும் ஒன்றிணைத்து, ஆண்டுதோறும் தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா வேலூரில் நடப்பதாக இருந்தது சென்னை அறிவாலயத்திற்கு மாற்றப்பட்டது 

(என்ன..ப்ரோ இப்படியே போச்சினா..நாளைக்கு கோபாலபுரத்து வீட்டுலையே முப்பெரும் விழாவை வைச்சுக்கிடுவாயிங்களோ...?)


நர்ரேக் கல்லே (21) என்ற இளைஞருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒளிந்திருந்த அவருக்கு மிக அருகில் சென்று பயமூட்ட முயன்றார் உறவினர் பெண் பிரமிளா லால்(18). ஆனால், பிரமிளா லால் ஒளிந்திருந்ததை பார்த்த நர்ரேக், அவரை திருடன் என்று நினைத்து அருகில் வந்ததும் தனது பாதுகாப்பு துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக, அவரது தந்தை காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார்
(என்ன ப்ரோ..இதுதான் விளையாட்டு வினையாகும் என்பதா...?)

http://www.globaltamilnews.net/Portals/0/GlobalResources/SI/images/THirumavalavan-300x238.jpg

கடலூரை அடுத்த புதுக்கடை பகுதியில் கடந்த 1997–ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது..அப்போது தப்பா பேசினதாக இப்போது திருமா-வை கோர்ட்டுக்கு இழுக்கிறார்கள் 
(என்ன...ப்ரோ..பொதுக்கூட்டம்னா எதையாவது பேசத்தான செயவாயிங்க..இனிமே எல்லோரும் சைகையிலே பேசிக்கிடனுமோ..?)

http://cdn.mos.totalfilm.com/images/a/apes-remain-top-of-the-us-box-office-64231-00-470-75.jpg

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக தங்க விண்ணப்பித்தவர்களில் இந்தியர்கள் இரண்டாம்இடத்தில் உள்ளனர்.செவ்வாய் கிரகத்திற்கு ஒரு வழி பயணமாக செல்ல 20,000 இந்தியர்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
 
(என்ன..ப்ரோ..இப்படியே போச்சினா அங்கேயும் இட நெருக்கடி வந்திடும் அதாவது பரவாயில்ல நம்ம தலிவருக யாராவது அப்ளை பண்ணியிருக்கிராயிங்களா...பார்த்துச் சொல்லு ப்ரோ...?)

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் மூலிகை உணவகம் செயல்பட்டு வருகிறது. மூலிகை சாப்பாடு, முடக்கத்தான் தோசை, கீரை வகை சாதங்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மூலிகை உணவுகளுக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது
(என்ன..ப்ரோ ..இவிங்க ஒருபக்கம் தெருவுக்கு தெரு டாஸ்மாக்ல பழரசம் விக்கிறாயிங்க...இப்ப மூளிகனு நம்மள ஆடு மாடு ஆக்கிப்புட்டாயிங்க..நாம மக்களா...மாக்களா...?)

லண்டனில் இளவரசர் ஆண்ட்ரூவை தவறுதலாக தீவிரவாதி எனக் கருதி போலீசார் சுற்றி வளைத்த சம்பவத்தால் பக்கிங்ஹாம் அரண்மனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
(என்ன ப்ரோ...இளவரசருக்கே இந்த நிலையா..? அப்படினா நம்ம நிலைமையே நால்லாயிருக்கு...பரதேசிக்கு ஏது பஞ்சணை..?)   

அண்ணேன்..போதும்னேன் உங்க அறுவை...
ஆளவிடுங்க..அண்ணேன்..நாடு நல்லாத்தான் இருக்கு..?


(என்ன ப்ரோ...இன்னும் நான் முழுசா சொல்லவே இல்ல..இன்னும் அம்மா...அய்யா...கொய்யா...மிய்யா எல்லாரும் இருக்காங்க...அதுக்குள்ளே எடுக்குறீங்க ஓட்டம்..?)


தலைவா...நம்...மக்கு...ச்சே...நமக்கு அரசியல்ல்லாம் சரிப்பட்டு வராது நாம சினிமாவிலேயே காலத்த ஒட்டீடுவோம்...  
 
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1