இந்தத் தீபாவளிக்கு அஜித்தின் ஆரம்பம், கார்த்தியின் அழகுராஜா இவர்களுடன் போட்டியிடும் விஷாலின் பாண்டிய நாடு படம் கொஞ்சமாவது தேறுமா....? U/A என்று தவிக்கும் படம் பாண்டிய நாடு-வன்முறை நாடா?
பாண்டிய நாடு படத்தின் இயக்குனர் சுசீந்திரன் பழனி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்.....அவரது படங்களில் மதுரை மண் வாசனை மிளிரும் ஆனால் மதுரை கதைக்களம் கொண்ட படங்களில் எல்லாம் மதுரை மண்ணுக்கே சொந்தமான வீரமும் மிளிரும் அது வன்முறையா...? மென்முறையா...? அவரவர் நியதி ஆனால் பாண்டியநாடு படம் பற்றி........
பாண்டிய நாடு படம்.... ஒரு பழிவாங்கும் கதை என்றும் வன்முறையை விரும்பாத இளைஞர் விஷால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வன்முறைக்கு இறங்க நேரிடுகிறது என்றும் சொல்லப்படுகிறது ஆனாலும் வன்முறை காட்சிகளுக்கு வெளிச்சமிருக்காது
விஷாலில் தந்தையாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க ஒர் அதிரடி காதல் திரைப்படத்தின் அம்சங்கள் அத்தனையும் உள்ளது..........
மீண்டும் ஒரு குட்டிப்புலியா? என்று கேட்கத் தோன்றுகிறது.
இயக்குனர் சுசீந்திரனின் முந்தையப் படம்......
வெண்ணிலா கபடிக்குழு மதுரை கதைக்களம் கொண்டு வன்முறை வெளிச்சமின்றி காதலையும் நளினமாக சொன்னது
அவரது நான் மகான் அல்ல........
கொஞ்சம் காதல் கொஞ்சம் கொலை என்றும் த்திரிலிங் படமாக ஆனால்...வன்முறையை இருட்டடித்தது.
அவரது அழகர்சாமியின் குதிரை படமும் எவ்வித வன்முறை காட்சிகளுமின்றிஅருமையான கதையுடன் சிறப்பாக இருந்ததும்...
2011 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான போட்டியில் கலந்துக்கொண்டது
thanks-YouTube-by DiVOTamilmovies
இப்படிப் பட்ட வித்தியாசமான இயக்குனர் சுசீந்திரனின் பாண்டிய நாடு நிச்சயமாக வித்தியாசமான கதையுடன் ஜனரஞ்சகமாக வரும் என்று நம்புவோமாக....
இந்தத் தீபாவளி சினிமா ரேஸில் ஓடும் குதிரைகளில் பாண்டிய நாடு படம் அதன் ஜாக்கி சுசீந்திரனின் இயக்கும் திறமையால்.....
தனித்துவமாக இருக்கும் என்றும் நம்புவோமாக...
இசையில் டி.இமான் இந்தப்படத்திலும் காதுக்கினிய ரம்மியம் மீட்டியுள்ளார்....
அவரது ஒத்தக்கடை...ஒத்தக்கடை...பாடல் இனிமை
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
Follow @PARITHITAMIL |