google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தலைவா-வுக்கு ஏற்பட்ட கதி ஜில்லாவுக்கும் தொடருமா?

Thursday, October 10, 2013

தலைவா-வுக்கு ஏற்பட்ட கதி ஜில்லாவுக்கும் தொடருமா?


கதியோ,சதியோ,விதியோ தலைவா திரைப்படம் ரொம்பவே நோந்துபோனது ஆனாலும் இளைய தளபதியின் மாஸ் ரசிகர் மக்களின் அமோக ஆதரவால் இன்னும் வெற்றிநடை போடுகிறது....சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் சினிமா தளபதி கட்டமோ...வட்டமோ கட்டப்பட்டு கடைசி இருக்கையில்........அதனால்தான்  இந்தக் கேள்வி...........தலைவா-வுக்கு ஏற்பட்ட கதி ஜில்லாவுக்கும் தொடருமா? 


freeonlinephotoeditor

யாரிடம் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று குழம்பி...இருக்கவே இருக்கார் நம்ம கோடம்பாக்கம் சினிமாக் கோடாங்கி.......
(அடேய்...பதிவரே! யாரைப்பற்றிடா கேள்விகேட்ட...விஜய் என்றால் மூன்றெழுத்து..... வெற்றி என்றால் மூன்றெழுத்து... )

யோவ்...வெங்காய கோடாங்கி விளக்கமா சொல்லுயா...அம்மா என்றாலும் மூன்றெழுத்து அய்யா என்றாலும் மூன்றெழுத்து...அண்ணா என்றாலும் மூன்றெழுத்து...தோல்வி என்றாலும் மூன்றெழுத்து... உன்கிட்ட போய் குறிகேட்க வந்தேன்பாரு.....கேள்விக்கு பதிலைச் சொல்லு...



கோடாங்கியோ நாக்கை கடித்துக்கொண்டு (இந்தத் தடவை குவாட்டர முதல்லயே போட்டுப்புட்டாரோ....? அப்படியொரு ஆட்டம் போட்டு......

(அடேய்...பதிவரே!.........ஆங்....ஆத்தா அகிலாண்டேஸ்வரிக்கு இன்னும் கோபம்  தீரலையடா....அதனாலத்தாண்டா...இந்த சினிமாக்காரங்களை ஆத்தா கட்டம்கட்டுரா....முதல்ல உங்க தளபதிய ஆத்தாவுக்கு ஒரு படையல் போடச்சொல்லுடா.....ஜில்லா படத்தில ஆத்தாவுக்கு கொஞ்சம் ஜால்ரா தட்டச்சொல்லுடா... அரசுக்கு ஆதரவா நாலு டாஸ்மாக் காட்சி வைக்கச்சொல்லுடா....அப்புறம் பாரடா ஜில்லா..ஜல்..ஜல்லுனு சலங்கை கட்டி ஆடும்டா... ம்ம்ம்...ஆங்...அந்த டாஸ்மாக் ஆப்-ப  எடுடா...இந்த ஆத்தா மலையேறப் போகணும்...)


kajal


போடா......ங்...ஆத்தா...னு நானும் ஓடிவந்துவிட்டேன் எனக்கு என்னமோ மனதில் இருக்கும் இந்த உறுத்தல் தீரவில்லை இப்போதெல்லாம் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த இந்த சினிமா அரசியல்வாதிகளுக்கு சினிமாவிலிருந்து அரசியலுக்கு வர நினைக்கும் சினிமாவாதிகளை கண்டாலே அலர்சி...அதனால்தான் இந்த அடாவடிக் கிளர்ச்சி..



சினிமாவில்  நாக்கைக் கடித்து கைநீட்டி வீர வசனம் பேசுவதுபோல் நிஜத்திலும் பேசிவிட்டு அரசியலுக்கு வந்த சில அரைவேக்காடு சினிமாவாதிகள்  ஊரு ஊரா கோர்ட்டில் போய்படும் பேய் அவஸ்தைகள் கண்டு  நெஞ்சு பொறுக்கவில்லை....அவருக்கு?


jilla

அடுத்த சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா....? என்ற கருத்துக்கணிப்பில் இளைய தளபதி என்று வாக்களித்து தங்கள் ஆதரவைக் காட்டிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை தலைவா-வுக்கு ஏற்பட்ட கதி ஜில்லாவுக்கும் தொடருமா? என்ற கேள்விக்கு சதி தொடர்ந்தாலும் .... யாமிருக்க பயமேன் என்று இருக்கிறார்கள் தளபதியின் மாஸ் ரசிகர்கள்......... இங்கு மட்டுமல்ல மாலிவுட்டிலும்.......அதற்கு பக்கபலமாக மோகன்லால் ரசிகர் படைகளும்
ஆக....எந்தத் தடைகள் வந்தாலும் ஜில்லாவின் வெற்றி உறுதி.  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1