google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நய்யாண்டி-சினிமா விமர்சனம்

Friday, October 11, 2013

நய்யாண்டி-சினிமா விமர்சனம்



(தீர்ப்பு-மிக சாதாரணமான கதை...சொதப்பலான இயக்கம்...அசந்தால் மலையாள கில்மா படம் போல் ஆய்...இருக்கும் நய்யாண்டி...தனுஷின் யதார்த்தமான நடிப்பால் கொஞ்சம் தேறியிருக்கிறது....இதற்குத்தான் நஸ்ரியாவின் தொப்புள் விவகாரம் மலிவான விளம்பரமாக.... கேடுகெட்ட சினிமா உலகம்)

freeonlinephotoeditor

படத்தின் கதை மாலிவுட்  மேலபரம்பில் யான் வீடு என்ற படத்தின்  தாக்கம் என்று இயக்குனர் சற்குணம் டைட்டிலில் சொல்கிறார்...ஆனால் படத்தைப் பார்த்தால் இப்படம் மலையாள தாக்கமல்ல......தமிழாக்கம் போல் உள்ளது...ஆப்.... மலையாள கில்மா படம் பார்த்த போதை பீலிங்.... ஆனால் படத்தில் அப்பிடி எந்த கில்மா காட்சிகளும் சல்லடை போட்டாலும் இல்லை....(கதைதான் அப்படி) அப்புறம் ஏன் கமிஷனரிடம் போனார்கள்...? நல்லவேளை CBI...FBI வரை இந்த தொப்புள் விவகாரத்தை கொண்டுபோகவில்லை 

http://www.kollywoodtoday.net/wp-content/uploads/2013/09/IMG_6689.jpg

கதை-கும்பக்கோணம் குத்துவிளக்கு வியாபாரி பிரமிட் நடராஜனுக்கு மூன்று திருமண வயதில் ஆண் பிள்ளைகள்...மூத்தவன் ஸ்ரீமானுக்கு 40 வயது..அடுத்தவன் சத்யனுக்கு 38 வயது....இப்படி இருவரும் திருமணமாகாமல் ஜொள்ளு விட்டுக்கொண்டு அலைய..அவரது கடைசி மகன் சின்ன வண்டு (தனுஷ்) பாட்டி வீட்டுக்கு கோயில் திருவிழாவுக்கு வந்த  பொள்ளாச்சி பணக்காரர் மகள் வனரோஜா (நஸ்ரியா) வை விழுந்து விழுந்து 1 மணிநேரமாக காதலிக்க.........

முதலில் பிகு பண்ணிய வனரோஜா பொசுக்கென்று சின்ன வண்டு மீது காதல் கொள்ள..அய்யோப் பாவம் அவளோ அவளது தந்தையால் மதுரை தாதா மாப்பிளைக்கு நிச்சயிக்கப்பட...நம்ம சொட்ட வாளக்குட்டி சின்னவண்டு வீடு புகுந்து அம்மணியை தூக்கிவந்து அவர் வீட்டுக்கும் தெரியாமல் தாலிகட்டி...தன் வீட்டிலேயே வேலைக்காரியாக சேர்த்து வைக்க....

freeonlinephotoeditor

மூத்த அண்ணன்கள் இருவரும் வனரோஜாவை தம்பி மனைவி என்று தெரியாமல் ஜொள்ளுவிட்டு....மனைவியாக்கிக் கொள்ள லவ்வோ லவ்வுன்னு முயற்சி செய்ய......

ஒரு கட்டத்தில் அடுக்கி வைத்த குத்துவிளக்குகள்  மத்தியில் சின்ன வண்டும் வன ரோஜாவும் போட்ட குத்தாட்டத்தில்.....அம்மணி கர்பமாக அந்த நேரம்பார்த்து மதுரை தாதாவும் வந்து அம்மணியை காரில் கடத்திச் செல்ல....
ஆக....சின்ன வண்டு தன் மனைவி வன ரோஜாவை மீட்டாரா...?  குத்துவிளக்கு வியாபாரி தன் கடைசி மகன் சின்ன வண்டுவின் திருட்டு திருமணத்தையும்   வன ரோஜாவை தன் மருமகளாகவும்  ஏற்றுக்கொண்டார்களா..?  என்பதை தெரிந்து கொள்ள திரையில் பாருங்கள்.... (ஸ்ஸ்..அப்பாடா...அடேய்..தம்பி அண்ணனுக்கு மூணு சாயா சொல்லு.....)

http://timesofindia.indiatimes.com/photo/22573406.cms

இயக்குனர் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் இது மலையாள படத்தின் தாக்கம் என்று....அது சரி சற்குணம் அண்ணேன்...படம் ஆரம்பித்து ஒருமணி நேரமாக படத்தில் எந்த வித ஆக்சனும் இல்லையே...படம் நகர பாட்டும் ஆட்டமும் போட்டு பார்த்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு(எனக்கு) எதுவும் மண்டையில் ஏறவில்லை.......

படத்தில் நடிப்பவர்கள் சிரிக்க....பார்ப்பவர்கள் விழிக்க அண்ணன் தனுஷ் வரும் காட்சிகளில் மட்டும் ரசிகர்கள் கைவலிக்க.. கை தட்ட.......... இப்படிப்பட்ட மலையாளத்து படத்தை காப்பி அடிப்பதை விட நீங்க நாலு தமிழ் படங்களை பார்த்து நல்ல கதையாக எடுத்திருக்கலாம்.   
நஸ்ரியாவையாவது கொஞ்சம் மேக்கப் போட்டு பார்க்கிறமாதிரி காட்டியிருக்கலாம்.

தனுஷ்..........ரஞ்சனா போன்ற காவியக் காதல் படங்களில் நடித்த தாங்கள் இப்படி சொதப்பல் காதல் கதை உள்ள படங்களில் நடித்தால்...தாங்கள் கொஞ்சம் ரூம் போட்டு யோசியுங்கள்...ஆனாலும் தங்களின் யதார்த்தமான நடிப்பு இல்லையேல் இப்படத்திற்கு கொடுத்த காசு வேஸ்ட்......தங்களின் கிணறுதாண்டும் காட்சி...பனைமரம் TO பனைமரம் தாவும் காட்சி...இப்படி சில படத்திற்கு உயிர்வூட்டுகின்றன 

freeonlinephotoeditor

நஸ்ரியா நசீம்.....அம்மணி இப்படி பட்ட கதை உள்ள படத்தில் நடித்துக்கொண்டு அப்புறம் டூப்-தொப்புளைக் காட்டினார்கள்... முதுகை காட்டினார்கள் என்று சொல்வதைப் பார்த்தால்.......படத்தில் உங்களைப் பார்க்கும் போதெல்லாம் போலிஸ் கமிஷனர் கையில் துப்பாக்கியோடு திரையின் ஓரத்தில் நிற்பது போல் பிரமை.......?

படத்தில் சூரியின் (தனுஷின்) மாமா நடிப்பும் சிங்கம் புலியின் தங்கப் பல் காமெடியும் இமான் அண்ணாச்சி கடலை மிட்டாய் கடையும் ஏதோ பரவாயில்லை மற்றபடி யாரும் பெரிதாக இல்லை வில்லன் அறிமுகத்தில் கரண்ட் போஸ்ட் கம்பத்தில் ஒரு கொலை மற்றபடி எந்த வித அழுத்தமான தாக்கமும் இல்லை

படத்தின் இசை....கிப்ரான்....மற்றபடி பெரிதாக சொல்லும்படி இல்லை...டெட்டி பியர் ...பெரும் அக்கப் போர்....பாடல்களில் மட்டும் வேல்ராஜ் கேமரா கண்ணைச் சிமிட்டுகின்றன......வெளிநாட்டு காட்சிகளை நல்லாவே சுட்டு வந்துள்ளார்...சின்ன வண்டு பனைமரத்தில் கல் குடிக்கும் காட்சியும் பிரமாண்டம் 

naiyaandi


நய்யாண்டி...தனுஷின் யதார்த்தமான நடிப்பால் கொஞ்சம் தேறியிருக்கிறது....இதற்குத்தான் நஸ்ரியாவின் தொப்புள் விவகாரம் மலிவான விளம்பரமாக....கேடுகெட்ட சினிமா உலகம்

  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1