google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நுகம்-சினிமா விமர்சனம்

Sunday, October 20, 2013

நுகம்-சினிமா விமர்சனம்

எப்படி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் கதாநாயகி இல்லாமல் கதை இருந்ததோ  அதே புதுமையாக நுகம் படத்தில் கதாநாயகன் கிடையாது ... மற்றபடி வேறொன்றும் புதுமை கிடையாது.. மிகவும் அறிவுஜீவிகளுக்காக பாமரத்தனமாக எடுத்த திரைப்படம்



ஜெஃபி எழுதி இயக்கிய  நுகம் படம்...... இரண்டு பயங்கரமான வில்லன்கள் பற்றிய த்திரிலர்   பயங்கரவாதமும் மக்கள் மீது அதன் வலிமிகுந்த வலிமையான தாக்கமும் பற்றி என்று சொல்கிறது...செல்கிறது.



சென்னையில் ஒரு மத்திய அமைச்சரை கொலைசெய்ய வந்த இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவன் மனம் மாறி சென்னை நகரை வெடிகுண்டு வைத்து நாசம் செய்யும் அந்த படுபயங்கரமான திட்டத்தை எப்படி தடுத்து நிறுத்தினான் என்பதே கதை 

freeonlinephotoeditor

ஜெய் என்ற கூலிப்படை கொலையாளி ஒரு மத்திய அமைச்சரை கொலை செய்ய அமர்த்தப்பட்டு சென்னை வருகின்றான் அவன் தனக்கு துணையாக கதிர் என்ற ஜோக்காலி கொலைகாரனுடன் கூட்டு சேர்ந்து இருவரும் கொலையை நிறைவேற்ற திட்டமிடுகிறார்கள்  ஆனால் நள்ளிரவில் சில அரசியல் காரணங்களுக்காக அவர்களது வேலை வேறு விதமாக மாற்றப்படுகிறது...


                                               thanks-YouTube 

சென்னை நகரெங்கும் குண்டு வைத்து வெடிக்கச் செய்யும் பயங்கரவாத் திட்டம் அதன் மூலம் இந்தியாவின் அரசியல்-பொருளாதரத்திற்கு நெருக்கடி ஏற்படுத்தும் எண்ணம்.


http://www.middaytimes.com/wp-content/uploads/2012/03/rishkathir-nugam-tamil-movie-photos00.jpg

ஆனால் சந்தர்பவசமாக இனியா மீது காதல் காதல் கொண்ட ஜோக்காலி கொலைகாரன் கதிர் காதல் மயக்கம் மட்டுமல்ல  கொஞ்சம் மனசாட்சி உள்ளவன் அதனால் அப்பாவி பொதுமக்களுக்கு துயரம் உண்டாக்குவதில் விருப்பமின்றி ஜெய்யின் திட்டத்துக்கு எதிர்ப்பு காட்டுகிறான்....அதை தடுத்து நிறுத்தவும் துணிகிறான்.........

அவன் தடுத்து நிறுத்தினானா என்பதை விருவிருப்பான காட்சிகளால்   திகிலூட்டி பார்வையாளர்களை திரையரங்கின் இருக்கை விளிம்புக்கு சில நேரம் வரச் செய்கிறார்....சில நேரம் இருக்கையில் தூங்கி விழச்செயகிறார்

freeonlinephotoeditor

நுகம் படம் பார்க்கும் போது நீங்கள் நகம் கடிப்பது உறுதி ஆனால் கொஞ்சம் பார்த்து கடியுங்கள் விரலைக் கடித்துவிடாதீர்கள் வெளிநாடுகளை வித்தியாசமாக படம்பிடித்த இயக்குனர்...படத்தை புதுமை சொதப்பலாக இயக்கியது  ஏனோ?

மிகவும் அறிவுஜீவிகளுக்காக பாமரத்தனமாக எடுத்த திரைப்படம்  
இரண்டு பயங்கரவாதிகள் போடும் படு பயங்கரமான திட்டம் பார்வையாளர்களுக்கு மட்டும் மெச்சூரிட்டி இல்லாத சிரிப்பூட்டும் திட்டமாக இருக்கிறது

freeonlinephotoeditor

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள அந்த பிரபலமான ஜவுளிக்கடை முன்பு எடுக்கப்பட்ட சில காட்சிகள் தவிர படத்தில் நிறைய காட்சிகள் அபத்தமாக உள்ளது...படத்தில் வரும் ஒரு  கற்பழிக்கும் காட்சி அப்படியே அரைகுறை ஆபாச படக்காட்சியாக உள்ளது.

freeonlinephotoeditor

எல்லாவற்றையும் விட ஏதோ கதைப்புத்தகத்தை புரட்டுவது போல் காட்சி படுத்தும் இயக்குனரின் திறமை....? அதிலும் கிளைமாக்ஸ் காட்சியை முதலில் காட்சி படுத்தி.......கொலைகாரன் ஜெய் பேசும் சோம்பல் வசனங்கள்... இன்னும் சிரிக்க வைக்கும் சீரற்ற அதிபயங்கர காட்சிகள்.... 

அப்படியே கடைசிவரை  திரையரங்கில்  இருந்து படம் பார்த்தவர்களுக்கு இயக்குனர்  நாம் கொடுத்த  காசு...துட்டு...பணம்..MONEY... திருப்பிக்  கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...அவரும் கொடுத்தார்....? அறிவுரை  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1