google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சுமார் மூஞ்சி கும்பிடு பதிவரு...

Saturday, October 19, 2013

சுமார் மூஞ்சி கும்பிடு பதிவரு...



இன்று தமிழ்நாட்டின் அரியாசனத்தில் அமர்ந்திருக்கும் அம்மா அன்று 1969-ஆம் ஆண்டே சினிமா நடிகையாக இருக்கும் போது   அரசியல்வாதியாக ஆசைப்பட்டார்கள்என்றால் உங்களால் நம்பமுடியுமா...........?



அம்மா 10/08/1969 அன்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்யில் 
தான் சினிமா நடிகையான போது எம்.ஜி.ஆர்....சிவாஜி இவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட நகைச்சுவை சினிமா அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டு.....
தான் நடிகையானதே தனது தலைவிதி,ஆனால் அதிர்ஷ்டமான தலைவிதி  என்று மனம்திறந்து சொன்னார்கள்...

http://i1.ytimg.com/vi/2Tap59Hh56A/hqdefault.jpg

  அப்படியாக இருந்த அம்மாவின் தலைவிதியை அன்றேஎம்.ஜி.ஆரும் சிவாஜியும் அறிந்திருப்பார்களோ...?
அந்தப் பேட்டியில்...
அம்மா அவர்கள் கண்ணன் என் காதலன் படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடிக்கும் போது சக்கர நாற்காலியிலிருந்து மாடிப்படியில் உருண்டு விழும் காட்சியில்........
கயிறு கட்டிய  நாற்காலியில் எம்.ஜி.ஆர். பத்து முறைக்கு மேல் அமர்ந்து சரிபார்த்து அதற்குப் பிறகே அம்மாவை அதில் அமர்ந்து நடிக்க அனுமதித்துள்ளார் என்பதைச் சொல்லி எம்.ஜி.ஆருக்கு சக கலைஞர்கள் மீது அதிலும் அம்மா மீது உள்ள அதீத அக்கரையை  அன்றே நினைவுபடுத்தி உள்ளார்.

(அடேங்கப்பா.... இன்றைய தமிழ் நாட்டின் தலைவிதியை மாற்ற வரும் அம்மாவை அன்றே எம்.ஜி.ஆர். அரும்பாடு பட்டு காத்திருக்கிறார்... அவர் ஒரு தீர்க்கதரிசிதான்)

http://www.comedyulagam.com/wp-content/uploads/mvbthumbs/img_10726_mella-varum-kaatru-jayalalitha-sivaji-ganesan-tamil-song-galatta-kalyanam.jpg

அதேப்போல் சிவாஜி அம்மாவின் அம்மாவுடன் நடிக்கும் போது வேடிக்கைப் பார்க்க செல்லும் அம்மா பாப்பாவாக இருக்கும் போதே.... சிவாஜி அம்மாவின்   கன்னத்தைப் பிடித்து "ஏய்....பாப்பா..." என்று கிள்ளி விளையாடுவாராம் அதே பாப்பாஅம்மா கலாட்டா கல்யாணம் படத்தில் சிவாஜியோடு கதாநாயகியாக டூயட் பாடும் போது ... அப்பேற்பட்ட நடிகர்திலகமே சீரியஸாக நடிக்க முடியாமல் சிரித்து 1-2-3-4-5.....டேக் வாங்கிவிட்டாராம்

 (அடேங்கப்பா...அவருக்கும் அன்றே அம்மாவின் தலைவிதி தெரிந்திருக்குமோ...? அவரும் தீர்க்கதரிசிதான்)

இது இப்படியிருக்க அம்மாவுக்கோ அன்றே அரசியல்வாதியாக வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது........

http://liveindia.tv/wp-content/uploads/2011/05/images/13MayKVR01AIADMK_wi_630586f.jpg

திரைப் படங்களில்  நடிக்க வராமல் இருந்திருந்தால் வேறு என்ன செய்திருப்பீர்கள்? 
என்ற கேள்விக்குஅன்றே அம்மா அவர்களின் பதிலோ........

"அரசியலில் தீவிரமாக இறங்கி,பெரிய அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. ஒருவேளை நான் சினிமாவுக்கு வராமலிருந்தால் , இன்று தேர்தலுக்காக அல்லது உப தேர்தலுக்காக எங்காவது மேடையில் பேசி, வெளுத்து வாங்கிக்கொண்டிருப்பேன்!

ஆனால் ஓன்று....இப்படி சினிமாவிற்கு வந்து நடிப்போம் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எல்லாம் "தலைவிதி" தான் ! ஆனால்,கொஞ்சம் அதிஷ்டமான தலைவிதி!"


jayalalitha

அமாம்...அம்மா எந்த சினிமாவை தலைவிதி என்று 1969-ல் சொன்னார்களோ அந்த சினிமாவே அவர்களை அரியாசனத்தில் அமரவைத்து..........


                                       thanks-YouTube-by truthsindia 


 இன்றைய சினிமாக்காரர்கள் எல்லோரும் இந்திய சினிமா 100 கொண்டாட்டத்தில் அம்மாவுக்கு ஆராதனை செய்தது....உண்மையில்  அம்மாவின் தலைவிதி அதிர்ஷ்டமான தலைவிதிதான் 

http://31.media.tumblr.com/28d865a8d0e3b6485d4e5a84b82f8ce3/tumblr_mpviynGYjF1s75ge9o1_500.jpg

நாளைய பிரதமராக அம்மா ஆனாலும் ஆகலாம்....
அம்மாவின்  அதிஷ்டமான தலைவிதி அவர்களை ஆக்கினாலும் ஆச்சரியமில்லை 
ஆதலால்...
 நாளைய பிரதமராக ஆசைப்படும் அய்யாமார்களே 
உங்கள் தலைவிதியை கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.... அப்புறம் தலையில் அடித்துக்கொண்டு உங்கள் விதியை நோகாதீர்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkD4eiR7A5Lmv9kk8lGYz1REP2DMSiDtzsIj_wE30egaSSB3AgiUZXcMr2N57ac9ORWpLrs5ooI3OgycQv_8Tirkj33QJSIgO_WdpujzbfSWRsQAhHviR0vzwBulGyBjuiXGSYjJUYBRA/s1600/544771_417672728258951_100000486829357_1609997_1593569227_N-716031.JPG


(அடேங்கப்பா....இந்தக் கும்பிடுறேன் சாமி பதிவரு நம்மளவிட பெரிய கில்லாடியாக இருப்பானோ.............?  நம்ம அம்மாவுக்கு இப்படி கும்பிடு பதிவு போடுகின்றானே...? என்று அம்மாவுக்கு கும்பிடு போடும்  அய்யாமார்களே யாரும் என்னைத் தவறாக நினைக்க வேண்டாம்....நான் சுமார் மூஞ்சி கும்பிடு பதிவருதான்  

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1