google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சினிமாவில் சில மன்மதக்குஞ்சுகள்

Sunday, November 10, 2013

சினிமாவில் சில மன்மதக்குஞ்சுகள்





















அந்தக் காலத்து  பாகவதர் முதல் எம்ஜிஆர்,சிவாஜி,ஜெமினி... என்று  தொடர்ந்து இன்றைய ரஜினி,கமல்,விஜய்,அஜித்,சிம்பு,விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன் என்று நீண்டுகொண்டு போகும் இந்த காதல் மன்மத நடிகர்களுக்குத் தமிழ் சினிமா உலகில்  பஞ்சமில்லை......


(அண்ணேன்...நான் அவர்கள் சினிமாவில் நடிப்பதைத்தான் சொல்கின்றேன் அவர்கள் நிஜவாழ்க்கையில் அவர்களின் நடப்பையோ நடிப்பையோ சொல்ல வரவில்லை.......).



இதுபோன்ற எத்தனையோ மன்மதக்குஞ்சு நடிகர்களைப் பாலிவுட் சினிமாவும் பல பார்த்திருந்தாலும்  கஹோ நா....ப்யார் ஹை படம் வந்த 2000-ஆண்டில் இன்றய கிரீஸ் கதாநாயகன் ஹிரித்திக் ரோஷனைப் போன்று இளம் யுவதிகளின் ராஜகுமாரனாக யாரும்  நம்ம கோலிவுட்டில் போற்றப்படவில்லை

இங்கே தமிழ்நாட்டில் நடிகைகளுக்குக் கோயில் கட்டி பூஜிக்கப்பட்ட  அளவுக்கு எந்த நடிகர்களும் போற்றப்படவில்லை ஆனால்  அதற்கும் மேலாக அவர்களை அரியாசனத்தில்அமரவைத்து அழகு பார்த்து..........தமிழனே சிறந்த சினிமா அடிமை  என்பதை உலகுக்கு முதன்முதலில் உன்னதமாக உணர்த்தினார்கள் 


அன்று மன்மதலீலையை வென்றார் உண்டோ...? என்று  பாடி நம்ம தாத்தா பாட்டிகளை மதிமயங்கச் செய்த பாகவதர் வருடக்கணக்கில் தன் படங்களை அரங்கில் ஓடச்செய்து பணத்தை வாரிக் கொண்டார்
புரசித்தலைவர் மட்டும் சும்மாவா....பச்சைக் கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ...? என்று நடைபோட்டார்....அவருக்கு நம்ம தாய்க்குலங்கள் நாட்டையே தாரைவார்த்தார்கள் 

இப்படி நிறையச் சொல்லிக்கொண்டு போகலாம் இல்லாதவர்களைப் பற்றிப் பேசி ஆகப்போவது என்ன...? இப்போ இருக்கின்ற நடிகர்களில் ரஜினிக்கும் கமலுக்கும் வயசாகிப்போச்சு என்று சொன்னால் என்னை ஓசியில் ஏசித் தீர்ப்பார்கள் அவர்கள் அல்ல...அவர்கள் ரசிகர்கள்


                                   thanks YouTube-by MissDilbarak  

அடேய்...புண்ணாக்குப் பதிவரே இப்பதாண்டா எங்க தலிவரு எந்திரன்ல உலக அழகிஐஸ்வர்யாவோட ஆகா..ஓகோ...கிலிமாஞ்சாரோ..னு ஒரு குத்துப்போட்டாரு...


                             thanks-YouTube-by TamilMovz

அப்படித்தான் காதல் இளவரசனாக இருந்த உலகநாயகரும் அவ்வப்போது காதல் செய்வது போர் அடிக்குனு சொன்னாலும் இன்னும் காட்டு காட்டுன்னு காட்டுகின்றார்...அப்படியே கதாநாயகி அசந்தா..........? உதட்ல முத்தம் கொடுக்கிறேன்னு கடிச்சிப்புடுறார்...........


                                     thanks-YouTube-byanushya ravi·

இப்பம் (மன்மதக்) கொடிகட்டி பறக்கும் இளவட்ட நடிகர்களில் இளைய தளபதி இன்னும் மன்மதத் தலைவராக  யார் இந்த சாலையோரம்  பூக்கள் வைத்தது...?-னு  அமலா பாலிடம்   ஆட்டம் போட்டு அசத்துகிறார் 


                                thanks-YouTube-by Prince Pictures

கர்ஜனை செய்து காதைக் கிழித்த  சூர்யா என்ற சிங்க நடிகரும் அஞ்சலியோடு போட்ட ஆட்டம் இன்னும் கண்ணுக்குள்ளே நிக்குது
ஆனால் தல...யோ ஆட்டம் போட்டதுலாம் போதும் என்று போதைத் தாரகை நயன் இருந்தும்  புதுமையா நடிக்க ஆரம்பிச்சிருக்கிறார்....

இதுபோல் காதல் கூத்தடிப்பதில் மியாவ்..மியாவ் பூனை விக்ரமும் அம்பிகாபதியான தனுஷும் காதல் இறக்கை கட்டி பறக்கும் ஆர்யாவும்விதிவிலக்கல்ல இன்னும் கொஞ்சம் மன்மதக் குஞ்சுகள் இருக்கிராயிங்க சினிமாவிலும் நிஜத்திலும் அவ்யிங்க போடுற சிம்பாட்டம்...ச்சே..சிலம்பாட்டம் சகிக்கல...


                           thanks-YouTube-by thinkmusicindia

போதாக்குறைக்கு இப்ப புதுசா ரெண்டுபேரு..........
அதில ஒருத்தரு சுமார் மூஞ்சிக் குமாரு....அசத்தலா  காதலுக்குப் பிரேயர் பாட்டெல்லாம் பாடுறாரு.........


                                 thanks-YouTube-by Vijayarajah Jabi

இன்னொருத்தரு வருத்தப்படாத சங்க வாலிபரு......ரிப்பன்...கொண்ட ஊசிக்கெல்லாம் குஷியாப் பாடுறாரு...........

(அண்ணேன்...இப்ப சினிமாவுல காதலும் ரொம்ப மாறிப்போச்சு...விரசம் வீராசாமிலாம்........டாஸ்மாக் போதையில   தள்ளாடி...தள்ளாடி.....இப்ப காதலும் ரொம்பப் போதையாச்சு....)

அது சரி பதிவுலக நியாயன்மார்களே..........

இப்ப இருக்கின்ற தமிழ் சினிமா நடிகர்களில் 
யார் நம்பர்-1 காதல் மன்மதக்குஞ்சு.....?





(யோவ்...புண்ணாக்குப் பதிவரே எப்ப பார்த்தாலும் கருத்துக்கணிப்பு எதற்கெடுத்தாலும் கருத்துக்கணிப்பு....அட... தேர்தல் கருத்துக்கணிப்பு மாதிரி உனக்கும் தடை  போட்டாத்தான் நீ அடங்குவ....ஆங்...
 ஐந்து முதலமைச்சர்களை சினிமாவிலிருந்து தேர்வு செய்த பிறகும் சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்று எவனாவது இனியும் சொன்னால் அவனை மிதிக்கதான் வேண்டும்..........சக்கரக்கட்டி  )

யாரது சக்கரக்கட்டி அண்ணனா....
அண்ணேன்........
சினிமாவில் இதெல்லாம் சாதாரணம்...அண்ணேன் 
(இப்பதிவு.....அண்ணன் சக்கரக்கட்டி அவர்களின்......

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா ?

என்றப் பதிவின் தாக்கம்..........நன்றி



           
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1