google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தூம் 3-இதுதான்டா சினிமா..?

Tuesday, December 24, 2013

தூம் 3-இதுதான்டா சினிமா..?


















(தீர்ப்பு-அமீர்கானின் தூம்-3 திரைப்படம்....பிரமாண்டத்திற்கு முன்னிலை கொடுத்து கதையை கோட்டை விட்டது....என்ன நான் சொல்றது? ஆனாலும் நம்ம ரஜினி,கமல்,விஜய்,அஜித் ரசிகர்கள் இப்படத்தை பார்க்காமல் இருபது நல்லதுங்கண்ணா... ஏனென்றால்.... )
 


doom3


நம்பகத்தன்மை இல்லாத கதை...தி கிரேட் இண்டியன் சர்கஸ் கம்பெனி நடத்தி திவாலாகும் தனது தந்தையின் தற்கொலைக்கு காரணமான சிகாகோ வெஸ்டெர்ன் பேங்கை கொள்ளையடித்து திவாலா ஆக்க நினைக்கும் மகனின் பழிவாங்கும் நடவடிக்கையும்ஆதாரத்துடன் போலிஸ் கைது செய்ய நினைப்பதுமாக...

dhoom3

படம் ஆரம்பிக்கும் போது பிளாஸ்-பேக் காட்சிகளாக 1990-ஆம் ஆண்டு சிகாகோ நகரில் சர்கஸ் கம்பெனி நடத்தும் இக்பால் ஹரூன் கான் (ஜாக்கி ஷெராப்) தனது சர்கஸ் கம்பெனி சிகாகோ வெஸ்டெர்ன்  பேங்  முதலாளி ஆண்டர்சனிடம் (ஆண்ட்ரு பிக்நெல்)  வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தன் மகன் சாஹிர் (மாஸ்டர் சித்தார்த்) கண்ணெதிரே தற்கொலை செய்வதும்......

2013 ஆம் ஆண்டு அதே நினைவாக அதிர்ச்சியில் விழித்திடும் சாஹிர் (அமீர்கான்) சிகாகோ வெஸ்டர்ன் வங்கியின் பல கிளைகளில் கொள்ளையடித்து....அவைகளில் கொஞ்சம் சிகாகோ நகர மக்களுக்கு வாரி வழங்குவதுமாக.......

படத்தில் காட்டப்படும் முதல் அதிரடி கொள்ளையாக மிக உயர்ந்த கட்டிடத்தில் இயங்கும் வங்கியில் கொள்ளையடித்து கொஞ்சம் டாலரை பணமழையாக பொழிய வைத்து அதி நவீன பைக்கில் தப்பிக்க...அமெரிக்க போலிஸ் வண்டிகள் துரத்த சாமார்த்தியமாக சாஹிர் தப்பிவிடுகின்றார்

dhoom3

கொள்ளையடிக்கும் போது ஒவ்வொரு முறையும் சாஹிர் அடையாளமாக இந்தியில் எழுதிவைத்துவிட்டு செல்வதை வைத்து அமெரிக்க போலிஸ் இந்திய போலிஸ் உதவியை நாட .......
மும்பையில் பல ரவுடிகளை துவசம் செய்யும் மும்பாய் போலிஸ் DGP ஜெய் தீட்சித் (அபிஷேக் பச்சன்) அவருக்கு துணையாக போலிஸ் அலி  (உதய் சோப்ரா) இருவரும் சிகாகோ சென்று சில தடயங்களை வைத்து அங்கே பிரமாண்டமாக சர்க்கஸ் கம்பெனி நடத்தும் சாஹிர் மீது சந்தேகம் கொள்ள...

இரண்டாவது முறையாக மீண்டும் அந்த  வங்கியில் சாஹிர் முன்புபோல் கொள்ளையடித்து பணமழை பெய்ய வைத்து பைக்கில் தப்பிக்க.... விரட்டிச்செல்லும்  ஜெய் தீட்சித் சாஹிரை முதுகில் சுட்டும் அவர் தப்பிவிட...ஆனால் ஜெய் தீட்சித் சாஹிரைத் தேடி சர்க்கஸ் கம்பெனிக்கு வர..... 



அதே நேரம் தி இந்தியன் சர்க்கஸில் புதுசா சேர்ந்த கவர்ச்சி சர்க்கஸ் நாயகி அலியா (கத்ரீனா கைப்) வுடன் சாஹிர் ஆடிப் பாடிக்கொண்டிருக்க... அவரது முதுகில் துப்பாக்கியால் சுட்ட அடையாளம் எதுவுமில்லை....? இங்கே மிகப்பெரிய திருப்பம் வைத்து இயக்குனர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா படத்தின் கதையை சொதப்புகின்றார்

சர்கஸ் கம்பெனி இக்பாலுக்கு இரட்டையர்களாக இரண்டு மகன்கள் சாஹிர்-சமீர் என்று உல்டா புல்டா விட்டு...அப்படியே கதை அலியா  மீது இருவருக்கும் காதல் என்றும் படம் காட்ட....


இரட்டையர்கள் கடைசியாக அந்த வங்கிக்கு முடிவுகட்ட நினைத்து மிகப்பெரிய செயலில் இறங்க.... இந்த முறையும்  இருவரும் பைக்கில் சாதூரியமாக தப்பித்துவிடுகின்றனர் கிளைமாக்ஸில் மிகப்பெரிய அணைக்கட்டின் மேம்பாலத்தில் யாருக்கு அழகி அலியா..?  என்று ஒருபுறம்

இன்னொரு புறம் ஜெய் தீட்சித்  இவர்கள் இருவரும் குற்றவாளிகள் என்பதற்கான ஆதாரம் இருந்தாலும் தான் அவர்களை கைது செய்வதற்கில்லை என்று சொன்னபிறகும் ........ஆனால் சாஹிர்-சமீர் இருவரும் விபரித்த முடிவாக குதித்து மரணத்தை தழுவுகின்றார்கள்

                                     thanks-YouTube-by YRFYRF

என்னடா இவன் முழுக்கதையையும் சொல்லிவிட்டானே என்று நினைக்கின்றீர்களா...? படத்தின் சிறப்பு இந்த கதை அல்ல அதை காட்சிப்படுத்திய விதம் நீங்கள்  DVD-யில் படம் பார்த்தாலும் அதன் சிறப்பை கொஞ்சமேனும் அனுபவிக்க முடியாது


                                           thanks-YouTube-by YRFYRF

IMAX FORMAT-ல் படத்தின் துள்ளியமான காட்சி அமைப்புகள் நாம் நமது திரையரங்கங்களில் உள்ள டிஜிடல் திரையில் கண்டாலும் சிறப்பாக உள்ளது...பிரமிப்பாக உள்ளது DOLBY ATOMS-ல் பதிவிடப்பட்ட ஒலிவடிவம் நமது திரையரங்கில் உள்ள QUBE ஒளியமைப்பிலும் குதுகலமாக இருக்கின்றது.......இத்தகைய பிரமாண்டத்தை பொழுதுபோக்கு சினிமாநேசிகள் யாரும் பார்க்க தவறாதீர்கள்



அதேநேரம் ரஜினி,கமல்,அஜித்,விஜய்....போன்ற நம்ம அதிரடி நாயகர்களின் அதீத அபிமான ரசிகர்கள்  தூம்-3 படத்தை பார்க்காதீர்கள் ஏனென்றால் இப்படத்தில் வரும் பிரமாண்டமான அதிரடி காட்சிகளையும் கண்ணைக்கவரும் (கவர்ச்சி) ஆட்டம் பாட்டத்தையும் கொண்டாட்டத்தையும் நீங்கள் கண்டீர்கள் என்றால் உங்களுக்கு திண்டாட்டம் வரலாம்...அவர்கள் மீது இருக்கும் தீவீரத் தன்மை குறையலாம் 


  
நம்ம ட்விட்டர் அண்ணன்மார்கள் என்ன சொல்றாயிங்க....


பாச பறவை@RainaLancer 
ஆகாயத்தில் பட்டம் பறந்து பார்த்தேன் அன்று ஆட்டோவை பறக்க விடுகின்றர் இன்று #தூம்-3

வாழவந்தான்@sumusuresh 
ஆமிர் கலக்கல்,அபிஷேக் கெத்து,காத்ரீனா குளிர்ச்சி,உதய் ஜாலி + இரண்டாஆஆஆஆஆஆம் பாதி =தூம் 3 முதல்பாதி விறுவிறுப்பு, இரண்டாம் பாதி சற்றே இழுவை!! மொத்தத்தில் ஓகே...அந்த ஐந்து நிமிசத்துல ஆமிர்கான் பார்வை மட்டுமில்ல என் பார்வையும் காத்ரீனாவ விட்டு விலகல!! என்னா ஃபிகர்டா! #தூம் 3

தமிழன்பன் @tamizhanban08 
தூம்3 டைரடக்கரு வில்லன்,மன்மதன் திருட்டு விசிடி பார்த்திருப்பாரு போல!

காப்பி ரைட்டர் !@pisasukutti 
கத்ரீனா ஸ்ட்ரிப் டேன்ஸ், அமீர் நடிப்பு அங்காங்கே தவிர்த்த தூம் 3 - சூரமொக்கை

வெண்ணிலா@Vennillaa 
New: சென்னை எக்ஸ்பிரஸ்,க்ரீஷ் 3 வசூலை முறியடித்தது ‘தூம் 3’.

மின்னல்சுதா@sweetsudha1 
இந்தியாவில் மட்டும் இல்ல, அமெரிக்காவிலும் போலீஸ்காரங்க ஏப்பைசாப்பை தான் போல இருக்கு :-) #தூம்3
ஆமிர்கான் சாப்பிடற காயகல்பம் எந்த கடைல கிடைக்குதாம்? இவருக்கு வயசாகவே ஆகாது போல இருக்கு :-) #தூம்3


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1