இன்றைய கோலிவுட் பர..பர பேச்சு.....?
விஜய் சேதுபதி நடித்த பிட்சா த்திரிலர் திரைப்படத்தை ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளர் அதை ஆங்கிலத்தில் டப்பி....உலக அளவில் வெளியிட முடிவு செய்துள்ளார் அதற்கான பேச்சு ஒப்பந்தங்கள் முடிந்த நிலையில் எழுத்து ஒப்பந்தத்திற்காக பிட்சா தயாரிப்பாளர் சி.வி.குமார் ஏக குஷியில் இருக்கின்றார்
பிட்சா திரைப்படம் இதற்கு முன்பு விசில் என்று கன்னடத்தில் சிரஞ்சீவி சர்ஜா-பிரனிதா முன்னணி வேடத்தில் நடிக்க பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றிப்படமானது
இந்தியிலும் அக்ஷய் ஒபராய்-பார்வதி ஓமனக்குட்டன் முன்னணி வேடத்தில் நடிக்க தயாராகி கொண்டிருக்கின்ற இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது
இப்போது ஆங்கிலத்தில் டப்பிங் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகளவில் விஜய் சேதுபதி கலக்கல் செய்யும் காலம் மிக விரைவில்....
நாளை ஹாலிவுட் நடிகராக பரினமித்தாலும் ஆச்சரியமில்லை
இது........... இப்படத்தில் நடித்த விஜய் சேதுபதியின் யதார்த்தமான நடிப்புக்கும் அதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் திறமைக்கும் கிடைத்த பரிசு
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |