ரஜினி,கமல்,விஜய்,அஜித்,தனுஷ்,சிவ கார்த்திகேயன்,விஜய் சேதுபதி,ஆர்யா,சூர்யா,கார்த்தி,விஷால்,ஜெய்,சிவா...என்று நிறைய திரை நட்சத்திரங்கள் இருக்கும் தமிழ் சினிமாவில்...இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் யார்........ ?
குறும்பட இயக்குனர்கள்,டார்க் காமெடி கலக்கல்கள்,நடிப்பு, இயக்கம் என்று புது முகங்களின் வெற்றி....இப்படி 2012-லிருந்து புது எழுச்சி கண்ட தமிழ் சினிமா.....
2013-ஆம் ஆண்டும் வெற்றிகரமாக தொடர்ந்திட....
பல திறம் படைத்த இயக்குனர்கள் மணிரத்தினம்,பாரதிராஜா,அமீர்,ராஜேஷ்....போன்றவர்கள் சொதப்பிட........
நட்சத்திர நடிகர்கள் கமலஹாசன்,விஜய்... போன்றவர்கள் சில புரியாத மாயையில் சிக்குண்டு தடுமாறிட....
சூது கவ்வும்,நேரம்,மூடர் கூடம்...போன்ற புதுமையான டார்க் காமெடி படங்கள் கலக்கல் செய்தன அதிலும் சூதுகவ்வும் படம் வசூலிலும் அதில் நடித்த விஜய் சேதுபதி விமர்சகர்களால் பெரிதும் பாராட்டுப் பெற்றார்......
சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி வரும் 2014-ஆம் ஆண்டுஅதிரடி யதார்த்த நகைச்சுவையில் கலக்க கைவசம் ஆறு படங்கள்........ரம்மி,புறம்போக்கு,ஜிகர்தண்டா,பண்ணையாரும் பத்மினியும்,சங்குதேவன் ,வன்மம்.... என்று
இன்று பல நடிகர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் நடிகர் விஜய் சேதுபதியே இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றார் என்று கோடம்பாக்கம் கோடாங்கி ஓங்கி அடிகிறார் செய்தி உடுக்கையை...டக்க...டக்க.....
அப்படினா...எங்க சிவகார்த்திகேயன் நம்பிக்கை நட்சத்திரம் இல்லையா? என்று கேட்க்கும் ரசிகர்களே....
மெரினாவில் தலையைக் காட்டி கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று ஜோடி சேர்ந்து..தனியாளாக எதிர்நீச்சல் போட்டு எதிர் பாராத வெற்றி என்று கரை சேர்ந்த இவர் ஆரம்பித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் அமோக வெற்றி...ஆனாலும் அண்ணனுக்கு 2014-ல் வரவிருக்கும் மான்கராத்தே...ஸ்வப்ன சுந்தரி படங்களின் வெற்றியைப் பொறுத்தே...
அதனால்....விஜய் சேதுபதியே தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்று............
என்ன நாஞ் சொல்றது...?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி....முடிவு-6/1/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |