google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரஜினியையும் கமலையும் ஓரம்கட்டும் அஜித்-விஜய்

Monday, December 02, 2013

ரஜினியையும் கமலையும் ஓரம்கட்டும் அஜித்-விஜய்


இந்தப் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்த்த கமலின் விஸ்வரூபம் 2 வரும் பிப்.14 தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது ரஜினியின் கோச்சடையானும் விஜயின் ஜில்லா-அஜித்தின் வீரம் படங்களுடன் மோதவா...? என்று ஆழ்ந்த யோசனையில்..........

http://mathimaran.files.wordpress.com/2008/11/rajini-kamal1-500x3882.jpg?w=500&h=388
அய்யோ..உலகநாயகர் பட்டிமன்றம் போட்டதெல்லாம்   வீணாப் போச்சே.. அம்மாவின்  ஆசியிருந்தும் பொங்கல் தின்ன முடியாமல் போச்சே...பணமே பிரதானமாக உள்ள சினிமா உலகில் இந்தப் பெரிசுகளுக்கு  மரியாதை இல்லாமல் போச்சே.....

http://i.ytimg.com/vi/9hHq2lYof4U/0.jpg
ஒரு காலத்தில்..... எப்படியிருந்தார்கள் இவர்கள்?
நினைத்துப்பார்க்கிறேன்....கண்களில் நீர் முட்டுகின்றது 
1991-நவம்பர் 5........தீபாவளித் திருநாள் அன்று நம்ம சினிமா நாட்டில் சூப்பர் ஸ்டாரின் தளபதியும் உலகநாயகரின் குணாவும் ஒரே நாளில் திரையிடப்பட்டன.......திரையரங்குகளில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள் 

Made with .freeonlinephotoeditor.com

கருப்பு டிக்கட்டுகள்கூட  அதீத விலையில் விற்கும் இப்ப நம்ம வெங்காயம் விலை மாதிரி... ஆனாலும் அங்கேயும் அடி பிடி தகராறுகள் மன்ற டிக்கட்டுகள் என்று கொஞ்சம் ரசிகசிகாமணிகள் கைகளில் இருக்கும்...... அப்படி ஒரு மன்ற டிக்கட்டுக்கு மன்றாடி உதயம் திரையரங்கில் தளபதி படம் பார்த்த கதையை நினைத்தால் இன்றுகூட  சிரிப்பு வருகின்றது......பிறகு இரண்டு நாட்கள் கழித்துத்தான் குணா பார்க்க முடிந்தது (இப்பமாதிரி திருட்டு DVD காலமல்ல அது..VCP காலம் பழைய படங்கள் மட்டுமே கேசட்டில் வரும் ) 

kamal

இதாவது பரவாயில்லை ரஜினி-கமல் ரசிகர்களின் அன்று எப்படி இருந்தார்கள் என்பதை நினைத்தால் இப்ப அஜித்-விஜய் ரசிகர்களை விட பல மடங்கு சினிமா வெறியர்களாக இருந்தார்கள்....... 


                               thanks-YouTube-by Tamil Lahari

தளபதி-குணா படங்களின் கதைதான் தெரியுமே....? 
தளபதி படத்தில் ரஜினி கண்முன் நடக்கும் சிறு தவறுகளை தட்டிகேட்பவர் பிற்பாடு இப்படி பெரிய தவறுகளை தட்டிக் கேட்கும் பெரிய தாதா மம்முட்டியின் நண்பனாக பெரிய அடியாளாகவும் மாறிவிடுவார்..அப்படத்தின் ராக்கம்மா கைய தட்டு.... பாடல் உலக அளவில் அன்று BBC வானொலியில் டாப் 10 இடத்தைப் பிடித்தது....படத்திற்கும் சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர்  விருதுகள் கிடைத்தது

                             thanks-YouTube-by PyramidNetwork

குணா படத்தில் கமல் ஒரு மனநோயாளியாக ஹைதராபாத்தில் உள்ள மனநல காப்பகத்தில் இருப்பதாகவும் மனதில் அபிராமி என்ற ஒரு கற்பனை தேவதையை உருவகப்படுத்தி ரோஷினியை காட்டுக்குள் கடத்திக் கொண்டு போய்விடுவார் 

rajini

அன்று  தளபதி திரையரங்கில் செம ஓட்டம் ஆனால்..  குணா படமோ திரையரங்கில் அவ்வளவாக ஓடவில்லை ஆனாலும் இன்றுவரை கமல் ரசிகர்களின் மனத்திரையில் ஓடிக்கொண்டு இருக்கின்றது  

http://img.youtube.com/vi/Qw27f5NzjUQ/0.jpg

அப்போதெல்லாம் இப்பமாதிரி நிறைய தொலைக்காட்சிகளின் தொல்லை இல்லை (சன் தொலைகாட்சி 1993-ல் தான் துவக்கப்பட்டது)   ஒரே ஒரு தொலைகாட்சி.....தூரதர்சன் மட்டுமே அதுவும் அதன் சேவையை 6 மணிக்குத்தான் சங்கு ஊதி துவக்குவார்கள்
அதில் ஞாயிறு 6 மணிக்கு ஒரு பழைய படம்  வெள்ளிக்கிழமை 7 மணிக்கு புதுப்பாடல்கள் ஒளியும் ஒலியும் வசதிப்படைத்தவர்கள் வீடுகளில்தான் தொலைக்காட்சி பெட்டிகள் இருக்கும் மற்றபடி தொலைகாட்சி விற்பனை கடைகளில் வைத்திருக்கும் பெட்டிகளில்தான் இல்லாதவர்கள் பார்க்கவேண்டும் டி.வி.கடைவாசல்களில் மிகப் பெரிய கூட்டம் இருக்கும்  

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh08VqftXh3yJCsUI7itXxuLgzh4oIVUeanAGjJEkr9ddMj5DL_4D01G9SZyuIo7hkLo8iJlj8U1OybJtOhBymb2LVWghGQ3DfWEJZpWhl6n1-t-uVWF0ufRGAepROHoizAFduGhwKivOi/s1600/1186707_525424724194030_380199524_n.jpg

அப்படி ஒரு வெள்ளிகிழமை ஒளியும் ஒலியும் காண சென்னையில் உள்ள ஒரு டி.வி.கடை வாசலில் கூடியிருந்த கூட்டத்தை கணக்கிட முடியாது முதலில் சில படப்பாடல்களைப் போட்டு வந்தது....குணாவின் கண்மணி அன்போடு...... பாடல் கடைசியில் ரஜினியின்  ராக்கம்மா கையத்தட்டு........அப்போது கூடத்தில் யாரோ.....யாரையோ என்னமோ  சொல்ல வந்தது அடி பிடி தகராறு கடை கண்ணாடியெல்லாம் உடைந்தது அதுமட்டுமா...?



(சூப்பர் ஸ்டார் அண்ணேன்...இவியிங்க இரண்டு பேருகிட்டயும் மோதுனா சரிப்படாது...நான் காதலர் தினத்துக்கு விஸ்வரூபம் எடுக்கலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.......அப்ப நீங்க?
ஆமாம்...தம்பி உலகநாயகரே நானும் அதுதான் ஆழ்ந்த யோசனையில் இருக்கேன்....நாட்டுல பெரியவங்கள யாரும் கண்டுக்கிறதுள்ள...ஆங்...)    

இந்த தகராறு தொடர்ந்து அன்றிரவு 10 மணிக்காட்சியில் இவர்களின் ரசிகர்களும்   குணா-தளபதி இவர்கள் இருவர் படமும் ஓடிக்கொண்டிருந்த அருகிலிருந்த ஒரு காம்ப்ளெக்ஸ் தியேட்டரில் மோதிக்கொண்டார்கள் அதன் தொடர்ச்சியாக தியேட்டர் வரிசையில் இருந்த சில கடைகளின் எனாமல் போர்டுகள் உடைக்கப்பட்டன


(இந்த இரண்டு பெருசுகளையும் இந்தப் பொங்கலுக்கு நாம நல்லா பாடம் காட்டலாம்னு பார்த்தா....ஹா...ஹா...இரண்டும் தப்பிச்சுப் புட்டாயிங்களே.........)





எப்படியிருந்த இவியிங்க இப்படி ஆகிட்டாங்களே...


(அண்ணேன்.....நம்ம கிரிக்கட் சூப்பர் ஸ்டார் சச்சின் மாதிரி இவிங்க இரண்டு பேரும் பேசாம ஒய்வு எடுத்துக்கிட்டு........அப்படியே நம்ம பெருந்தலைவர் சொன்னமாதிரி இளந்தலைமுறை நடிகர்களுக்கு வழிவிட்டுப்புட்டு சமூகப் பணி அல்லனா அரசியல் பணி ஆற்றப் போயிடலாம்...என்ன அண்ணேன் நான் சரியாத்தானே சொல்றேன்...?)


அட..போடா புண்ணாக்கு தலையா...ஆசை யாருக்குடா விட்டுப்போகும் சினிமாவுல பணத்துக்கு பணம்...நடிக்கும் போது கூட கட்டிப்பிடித்து நடிக்க விதவிதமா சின்னப் பொண்ணுங்க....வாழ்க்கையே ஜாலியோ ஜாலி அவ்வளவு சீக்கிரத்தில அத விடமுடியுமா ...?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1