அஜித்தின் வீரம் திரைப்படத்தில் தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையமைப்பு அதிரடி சரவேடியாகவும் அதே நேரம் அமுத தேனருவியாகவும் மிளிர விவேகாவின் வார்த்தைகளில் 5 முத்தான பாடல்கள்............
1-நல்லவன்னு சொல்லுவாங்க
thanks-YouTube by timesmusicsouth
மின்னலடிக்கும் வார்த்தைகளில் அதிரவைக்கும் இடியோசை போன்று DSP யின் குரலில் அஜித்தின் குரலுக்கு ஏற்ப அமைந்துள்ள இப்பாடல் ஏற்கனவே டீசர் மூலம் பிரபலமானது ஆங்கில வரிகளுடன் தொடங்கும் இப்பாடல் மேற்கத்திய இசையில் தல அஜித்தின் அறிமுகப் பாடலாக இருக்கலாம் என்று............
2-இவள்தானா....
டிஎஸ்பி-யின் உயிரோட்டமான மெல்லிசையில் சாகர்-ஸ்ரேயா கோஷல் பாடிய டுயட் இப்பாடல் வேறுபட்ட இன்னிசை கருவிகளின் இசைப் பொழிவில் அமைந்த இனிய மெலோடி.......
ஸ்ரேயா கோஷலின் போதையூட்டும் குரல் மெல்லிசை விரும்பிகளுக்கு நல்ல தேர்வு....
இப்பாடல் அஜித்-தமன்னா இடையே இப்படத்தில் நிதியென ஓடும் மெல்லிய காதல் சலசலப்பு
3-தங்கமே தங்கமே
அட்னான் சாமி-பிரியதர்ஷினி பாடிய இப்பாடல் படத்தின் டெம்போ குறையாமல் இருந்தாலும் கேட்பவரின் ஈர்ப்பை எட்டவில்லை அதேநேரம் இப்பாடலில் வரும் புல்லாங்குழல் மெல்லிசை மனதை ஈர்க்கின்றது
4-ஜிங் ஜக்கான்...ஜிங் ஜக்கான்
புஸ்பவனம் குப்புசாமி-மாலினி மணிமாறன் பாடிய இப்பாடல் கிராமிய நாட்டுப்புற பாடல்.....இதற்கு முந்தைய டிஎஸ்பி-யின் ரிங்கா ரிங்கா போன்ற ஆட்டம் போட வைக்கும் தெலுங்கு இசைப்பாடல்களிலிருந்து வேறு பட்டது புஸ்பவனம் குப்புசாமி-மாலினி மணிமாறன் இப்பாடலுக்கு நல்ல தேர்வு என்பது இசைப்பிரியர்கள் கருத்து
5-ரத கஜ....வீரம்
பாடகர்கள்...ஆனந்த்,தீபக்,கவுசிக்,ஜகதீஷ் பாடிய இப்பாடல் படத்தின் தீம் பாடலாக உள்ளது தல ரசிகர்களுக்கு இதைவிட சிறந்த தலைப்பு பாடல் எதுவும் இல்லை என்பது போல்....
டிஎஸ்பி-யின் இசைக்கருவிகளின் வலுவான ஒருங்கிணைப்பாக சுனாமியாக எழும் இசை அலைகள் படத்தின் தீவிரத்தை பிரதிபலிக்கும் இசை காட்டாற்று வெள்ளம்
வீரம் படப்பாடல்கள்................
thanks-YouTube by timesmusicsouth
வீரம் படத்தின் பாடல்களை கேட்டு ரசித்தீர்களா....
உங்கள் பார்வையில்...........
வீரம் படத்தின் பாடல்கள் எப்படியிருக்கு....?
வீரம் படப்பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..........முடிவு-28/12/2013
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |