google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என்றென்றும் புன்னகை-சினிமா விமர்சனம்

Saturday, December 21, 2013

என்றென்றும் புன்னகை-சினிமா விமர்சனம்

(தீர்ப்பு-நளினமான,நாகரீகமான,கவித்துவமான காதல்,நிதர்சனமான தந்தை மகன் உறவு,ஆழமான நட்பு என்று மிகவும் நேர்த்தியான திரைக்காவியம் என்றென்றும் புன்னகை.... மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும்.........)

endrendrumpunagai

காதல்...திருமணம் எதுவுமே வேண்டாம் என்று சபதம் செய்து கொண்ட  மூன்று நண்பர்கள் கெளதம் (ஜீவா) ஸ்ரீ (வினாய்) மற்றும் பேபி (சந்தானம்) இருக்கும் இவர்களின் விளம்பர கம்பெனியில் வேலை விசயமாக வரும் பிரியா (திரிஷா).......இதற்கிடையில் திடிரென்று ஸ்ரீயும் பேபியும் திருமணம் செய்துகொள்ள அவர்கள் மூவரின் நட்பில் பிரிவு..... பிரியாவுக்கு கெளதம் மீது உண்டாகும் காதல்..............

andrea

ஆக....பிரிந்த நண்பர்கள் இணைந்தார்களா...? 
கெளதம் மீது பிரியா கொண்ட காதல் என்ன ஆனது...? 
என்பதை ஓவியம் போல் திரையில் வரைந்திருக்கின்றார்கள் இயக்குனர் அகமதும் அவரது குழுவினரும்  
இதற்கிடையில் இந்த நட்பு-காதல் கதையில் துள்ளியமாக பின்னப்பட்ட மிகப்பெரிய செல்வந்தரும் ஓவியருமான   நாசர்-ஜீவா என்று தந்தை மகன் பாசப் போராட்டம்  


ஜீவாவின் நடிப்பு அமைதியாக எவ்வித ஆர்ப்பாட்டமில்லாமல் இருக்க... அப்படியே சந்தனமும் நகைச்சுவை நடிப்பில் ஜொலிக்கின்றார்...திரிஷாவுக்கு இது இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா சாயல்....ஆண்ட்ரியாவின் வருகை படத்தில் நல்ல திருப்பம் அம்மணியும் விரசத்தை விதைக்காமல்...நாசரின் நடிப்பு அமைதியான கலக்கல்   

படத்தின் சிறப்பான காட்சிகள் என்று தனியாக எதையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு படம் முழுக்க எழுத்தும் இயக்கமும் இசையும் ஒளிப்பதிவும்  நிரம்பிக் கிடக்கின்றன நகைச்சுவைக்கு பஞ்சமில்லை அத்தனையும் சிரிப்பால் அரங்கம் அதிரச் செய்கின்றன.........
"எங்க வீட்டு நாய்க்குட்டி செத்துப்போச்சு எங்க அம்மாவால ஜீரணிக்க முடியல" என்று சந்தானத்தின் மனைவி சொல்ல....
"உங்க அம்மா ஏன் செத்த நாய தின்னாங்க...?" என்று சந்தானம் நக்கலடிக்க .....இப்படி டைமிங் கடி ஜோக்குகள் நிறைய........

endrendrumpunagai

 ஊட்டியில்   ஆரம்பிக்கும் படம்...அதன் அழகான ரம்மியமான காட்சிகளை கண்ணுக்கினிய காட்டி சென்னைக்கு கதை நகரும் போது என்னடா கொடுமை என்று நினைத்த மனம் நோகாமல் ஒளிப்பதிவாளர் மதியின் கேமரா இங்கேயும் அழகான நேர்த்தியான இடங்களைக் காட்டி.... அப்படியே கதை ஸ்விஸ் நாட்டுக்கு பயணித்து நமக்கும்  அதன் பனிப்பொழிவு காட்சிகளை  அனுபவிக்க வைத்து....சபாஷ் மதி என்று முனங்க வைக்கின்றது.

                               thanks-YouTube-by Sony Music IndiaSony Music India

ஹாரிஸ் ஜெயராஜின் காதுக்கினிய பாடல்கள் ரம்மியமான பின்னணி இசை அடடா என்று நம்மை மெய்மறக்க செய்கின்றது.....என்னத்த சொல்ல...பாடல் வித்தியாசமான என்றால் சுவிஸ் நாட்டில் சுட்ட காட்சிகளுடன் வான் எங்கும் நீ மின்ன....பாடல் நம்மை  முனுமுனுக்க வைக்கும்  

இதுவரை நாம் டாஸ்மாக் பக்கிகளையும் அவரகளது காதல்களையும் நிறைய  பார்த்து பழகிவிட்டதால் இந்த மேட்டுக்குடி குடிமக்களின் மேம்போக்கான வாழ்வும் காதலும் நமக்கு வித்தியாசமாக தெரிகின்றது.....

Made with .freeonlinephotoeditor.com

இப்படி சில குறைகள் இருந்தாலும் ........ நளினமான,நாகரீகமான,கவித்துவமான காதல்,நிதர்சனமான தந்தை மகன் உறவு,ஆழமான நட்பு என்று மிகவும் நேர்த்தியான திரைக்காவியம் என்றென்றும் புன்னகை.... மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1