இன்றோடு (4/12/2013) இளையதளபதி விஜய் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 21 ஆண்டுகள் நிறைவடைகின்றது தனது முதல் படம் நாளைய தீர்ப்பு முதல் இதுவரை 56 படங்கள் நடித்து முடித்துவிட்ட விஜய்........
21 ஆண்டுகளாக அவர் கடந்து வந்த இந்த தமிழ் திரையுலகப் பாதையை நினைத்துப் பார்த்தால்.......வெற்றியின் சிகரத்தை அவர் அவ்வளவு எளிதாக அடைந்துவிடவில்லை என்பது தெரியும்
1-தனது தந்தையார் இயக்கிய விஜயகாந்த் படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றினாலும் முழு கதாநாயகராக நடித்த படம்
4/12 /1992 அன்று வெளிவந்த நாளைய தீர்ப்பு
2-தல அஜித்துடன் அவர் இணைந்து நடித்த படம் ராஜாவின் பார்வையிலே...
3-விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம்தான் விஜய்-க்கு முதன் முதலாக வணிக ரீதியாக வெற்றி தந்து அவரை தமிழ் திரையுலகில் நடிகராக அங்கீகரித்தது
4-நடிகர் திலகத்துடன் அவர் நடித்த ஒன்ஸ் மோர் படம் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது
5-இயக்குனர் மணிரத்தினம் தயாரிப்பில் அறிமுக நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்தப் படம்.......நேருக்கு நேர்
6-அவர் காதல் நாயகராக நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் அவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகர் விருது பெற்று தந்தது.
7-2000 ஆம் ஆண்டிலிருந்து பொழுதுபோக்கு கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்திய விஜய்..........இயக்குனர் சூர்யாவின் குஷி படம் மூலம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மன்னர்கள் வரிசையில் இணைந்தார்
8-நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த பிரண்ட்ஸ் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் பிளாக் பஸ்டர் படமானது அவரையும் நட்சத்திர நடிகராக்கியது
9-அவர் 2003-ல் வெளிவந்த திருமலை படத்தின் மூலம் அதிரடி நடிகராக மாறினார்
10-அவரது கில்லி திரைப்படம் 2004-ல் 200 நாட்களுக்கு மேல் அரங்கை விட்டு ஓடாமல் அடம் பிடித்து அந்த வருடம் அதிக வசூல் அறுவடை செய்த படம் என்ற பெருமை பெற்றது.
11-பேரரசு இயக்கத்தில் அவர் நடித்த இரண்டு படங்கள்...திருப்பாச்சி-சிவகாசி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள்
12-பிரபுதேவாவின் இயக்கத்தில் வந்த போக்கிரி 2007-ஆம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
13-கதாநாயகனாகவும் வில்லனாகவும் முதல் முறையாக இரண்டு வேடங்களில் விஜய் நடித்த த்திரிலர் திரைப்படம் அழகிய தமிழ்மகன் மிகப் பெரிய தோல்வியை தழுவியது.
14-மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த அவரது 50-வது திரைப்படமான சுறா மிகப் பெரிய தோல்வியை கொடுத்து அவருக்கு 6 கோடி வரை இழப்பீடு வழங்கச் செய்தது
15-அவரது காவலன் திரைப்படமும் வெற்றிப்படமாக கருதப்பட்டாலும் அரசியல் பிரச்சனைகளால் அவருக்கு 4 கோடி வரை இழப்பீடு செய்தது
16-அதே நேரம் 2012 பொங்கல் வெளியீடாக வந்த ஷங்கரின் இயக்கத்தில் அவரது நண்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் அவரது நடிப்பு உலகநாயகரால் பாராட்டப்பட்டது.
17-அவரது திரையுலக வரலாற்றிலேயே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த துப்பாக்கி திரைப்படம் 185 கோடிக்கு மேல் வசூலித்து கோலிவுட்டில் சினிமா வரலாற்றிலேயே சிவாஜி,எந்திரன் படங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது
18-அதேப்போன்று கோலிவுட் வரலாற்றிலேயே முதல் முறையாக ஏன் என்று தெரியாமலேயே தமிழ்நாட்டு திரையரங்குகளுக்கு மட்டும் வராமல் அடம்பிடித்து அலைக்கழிக்கப்பட்ட படம்...........தலைவா
19-இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் 2014-பொங்கல் வெளியீடாக வர காத்திருக்கும் படம்......மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள அவரது 57-வது படம்.............ஜில்லா
20-தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி சமுக நற்பணிகள் செய்யும் விஜய்......... ஹீரோவா? ஜீரோவா? என்ற குறும்படத்தில் நடிகர் சூர்யாவுடன் தோன்றி குழந்தைகள் கல்வி விழிப்புணர்வு செய்தார்
thanks-YouTube by raul ghetto
21-இளையராஜா,தேவா,வித்யாசாகர்,யுவன் சங்கர்ராஜா,தேவிஸ்ரீ பிரசாத்,ஹாரிஸ் ஜெயராஜ்,GVP.....போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பல திரையிசைப் பாடல்கள் பாடி.....இவரது கூகிள் கூகிள் பாடல் மூலம் விஜய் தான் ஒரு சிறந்த பாடகர் என்றும் நிருபித்துள்ளார்.
பல தடைகற்களை தகர்த்தெறிந்து 22-வது ஆண்டாக கோலிவுட்டில் வலம் வரும் விஜய்-க்கு நமது வலைதளத்தின் மூலமாக அவரும் அவரது ஜில்லாவும்........உலகளவில் மீண்டும் அவர் சாதனை புரிந்திட வாழ்த்துவோம்
(குறிப்பு-இங்கே குறிப்பிட்டுள்ள கருத்துக்களில் ஏதேனும் தவறு இருந்தால் பொறுத்தருள்க......)
***************************************************************************
விரைவில்...............
தகராறு-சினிமா விமர்சனம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |