(தீர்ப்பு-விழா....கிராமத்து காதலை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தும் சினிமாத்தனங்கள் இல்லாத சினிமா..... திரையில் ஒரு நாவல் படித்த உணர்வுடன் வித்தியாசமான கதைக்களம் வித்தியாசமான சினிமா....?)
இயக்குனர் பாரதி பாலகுமாரனின் விழா படத்தின் கதை........மதுரை சுற்று வட்டார கிராமங்களில் சாவு வீடுகளில் தப்பு அடிக்கும் ஒருவனுக்கும் ஒப்பாரி பாடும் ஒருத்திக்கும் உள்ளத்தில் அரும்பும் காதல்... எப்படி பல சிக்கலுக்கிடையில் வெற்றி பெற்றது என்பதை சித்தரிக்கின்றது
விழா படம் ஆரம்பிக்கும் போது கிராமத்து பெரிசும் பன்னையாருமான விஜய சேதுபதி மரணம்....அங்கே தப்பு அடிக்கும் சுந்தரம் (மகேந்திரன்) ஒப்பாரி பாடவரும் ராக்கம்மா (மாளவிகா மேனன்) இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்ள.....
இதற்கிடையில் இறந்த பெரிசு ஊருக்கு குளம் வெட்டிதருவதாகவும் பள்ளிக்கூடம் கட்டிதருவதாகவும் வாக்குறுதி கொடுத்து விட்டு சாக, அவரது மனைவி சின்னாத்தாஅதற்க்கு பணம் கொடுக்காமல் சண்டித்தனம் பண்ணுவதும்......
இன்னொரு காதலாக காட்டப்படும் நகரத்தில் படித்த பெரிசு பேரன் பாண்டி-கயல் விழி காதலை சுந்தரமும் அவனது நண்பர்களும் சின்னாத்தா விருப்பத்திற்கு மாறாக ரகசியமாக நடத்தி வைக்க.......
கோபம கொண்ட சின்னாத்தா சுந்தரத்தை கொலை செய்ய அடியாட்களை அனுப்புவதும் ஆனால் சுந்தரத்திற்கு ஊரில் உள்ள இன்னொரு பணக்காரர் மணிமாறன் (யுகேந்திரன்) பாதுகாப்பு தர.....
அதேநேரம் சின்னாத்தாவின் சகுனிதனத்தால் சுந்தரத்தின் காதலி ராக்கம்மா மனிமாறனுக்கு நிச்சயிக்கப்பட...சுந்தரம்-ராக்கம்மா காதல் என்ன ஆனது...? இருவரும் காதலில் சேருவார்களா...?என்று பரபரப்பு.... கிளைமாக்ஸ்
கிளைமாக்ஸ்...யாரும் எதிர்பாராதது...ரொம்ப நகைச்சுவையானது
மகேந்திரன் நடிப்பு கதாபாத்திரத்திற்கு ஏற்ப உடல்வாகும் அதே நேரம் காதல் காட்சிகளில் நல்ல முக ஜொலிப்பு...சண்டைக்காட்சிகளில் ஆவேசம் எடுபடாத முகபாவம்........மாளவிகா மேனன்...ஒப்பாரி பாடுவதும் காதலிப்பதுமாக வந்து போகிறார் வேறு பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை....சின்னாத்தாவாக நடித்துள்ளவர் சினிமாவுக்கு கிடைத்த கிழட்டு வில்லி
படத்தின் மிகப் பெரிய பிளஸ்-பாயின்ட் பாடல்களும் இசையும்தான்... கிராமத்து இசைக்கருவிகளால் ஜேம்ஸ் வசந்தன் நல்லதொரு இசை சித்திரம் படைத்திருக்கின்றார் மதுர என்னும் மாநகரம்..பாடலும் செத்துப்போ.... என்ற காணாபாலாவின் பாடல் நகைச்சுவையாக இருக்க நெஞ்சடைச்சு நின்னேனே...சோகம் மிளிர்வதாகவும் மற்றவை காதல் களிப்பாகவும் உள்ளது
படத்தின் சிறப்பான காட்சிகளாக...கிராமத்தில் லேப்-டாப்புடன் அலையும் காதல் தண்டபாணியின் பேஸ்புக் கலாட்டாக்கள்.....ரவுடி கிழவிகள் பாய்ந்து தாக்கும் அதிரடி நகைச்சுவை சண்டைக்காட்சிகள்....செத்துப்போ பாடலில் வரும் கிராமத்து கிழவர்களின் இளமை துள்ளாட்டங்கள்...
thanks-YouTube-Paartha Jans
உதிரி என்ற குறும்படத்தின் நெடும்படம் என்பதால் நிறைய திணிக்கப்பட்ட கதாபாத்திரங்கள்.....காட்சிகள் என்றும் கதையும் ஒரே சீராக செல்லாமல் நிறைய கிளைக் கதைகளுடன்.......... ஆனாலும்
கிராமத்து காதலை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தும் சினிமாத்தனங்கள் இல்லாத சினிமா....விழா திரைப்படம்
திரையில் ஒரு நாவல் படித்த உணர்வுடன்..... வித்தியாசமான கதைக்களம்......வித்தியாசமான சினிமா பார்க்க விருப்பமுள்ளவர்களுக்கு
வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.......
கிராமத்துக் காதலை பாரதிராஜா முதற்கொண்டு எத்தனையோ இயக்குனர்கள் எத்தனையோ வித விதமாக காட்டியுள்ளார்கள்......ஆனால் ஆபாசமாகவும் விபரீதமாகவும் காட்டாமல் நல்லதொரு நகைச்சுவையாகவும் த்திரிலராகவும் காட்டியுள்ள விழா படத்தின் இயக்குனர் பாரதி பாலகுமாரனை பாராட்டலாம்
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |