வலைத்தளங்கள்,முகநூல் பக்கங்கள்,டிவிட்டர்கள்....மட்டுமன்றி எங்கு பார்த்தாலும் இன்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் அரசியல் அதிரடி சினிமா.....ஆம் ஆத்மி
இந்த அதிரடி சினிமாவை உண்ணாமலும் உறங்காமலும் கிடந்தது திரைக்கதை எழுதி தயாரித்தவர் அன்னா ஹசாரே.......ஆனாலும்
அவருக்கே அல்வா கொடுத்துவிட்டு.......
தனியாக தயாரித்து அந்த சினிமாவுக்கு ஆம் ஆத்மி என்று பெயரிட்டு அதிலே முன்னணி கதாநாயகனாக நடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்
முதலில் டில்லியில் திரையிடதரிகிடத்தோம் போட்டஇந்த ஆம் ஆத்மி திரைப்படத்தில் வில்லனாக நடித்த காங்கிரஸ் கூட்டத்தினரே வேறு வழியில்லாமல் அமோக ஆதரவு கொடுக்க..........
இன்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது
இயக்குனர் ஷங்கரையும் அவரது முதல்வன் திரைப்படத்தையும் மிஞ்சி விட்ட ஆம் ஆத்மி படத்தின் சிறப்பான காட்சிகள்......
அதன் கதாநாயகர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்க மெட்ரோ ரயிலில் பயணித்தார்.......வரலாற்று சாதனை
தனக்கு அளிக்கப்பட பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை பயம்காட்டுவதை விரும்பாதவர் (மக்கா...பார்த்து உங்க ஊரு டீக்கடையில் யாரும் முக்காடு போட்டுக்கிட்டு டீ குடிச்சா....நல்லா பாருங்க அவரு அரவிந்த் கெஜ்ரிவாலாக இருக்கலாம்)
இப்படி நிறைய சிறப்பான காட்சிகள் இருக்கும் இப்படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை
கட்சினா அடிக்கடி கட்டிபிடிச்சி சண்டை போடணும் அதற்கு சரியான ஆளு நம்ம விஷால் தம்பிதான்னு...தமிழ்நாட்டு ஆம் ஆத்மி தலைவரே வருக... என்று யாரோ முழங்க இப்பதான் ஒரு படம் ஒழுங்கா ஓடிச்சு....நம்ம விஷாலுக்கு அதற்குள்ள யாரோ திரி வச்சிட்டாயிங்க அவருதான் தமிழ் நாட்டு ஆம் ஆத்மி தலைவருனு(அடப் பாவிகளா...இப்படித்தான் தலைவா விஜயையும் தள்ளாட விட்டாயிங்க...)அவரும் அலறிக்கொண்டு ஆம்மாவது அமம்மாம்மாவது..அம்மா காதுல விழுந்திடப் போகுது ஆளவிடுங்கயான்னு அலறிக்கிட்டு ஓடிட்டாரு.........
சினிமானா கவர்ச்சி வேண்டாமா...? ரொம்ப பப்ளிமாஸ் மாதிரி வீங்கி விட்டதால தமிநாட்டு மச்சாங்க நம்மள சினிமாவிலிருந்து கழட்டி விட்டுப்புட்டாயிங்க.. அவிங்கள சும்மா விடக்கூடாதுன்னு முடிவு பன்னி நம்ம நமீதா அம்மணியும் அரசல் புரசலாக ஆம் ஆத்மியை தமிழில் ரீமேக் பன்னுனா நான்தான் கதாநாயகி என்று ஒரு கீச்சு கீச்ச..........நமீதா தமிழ்நாட்டு ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் என்று யாரோ புரளியைக் கிளப்ப அவசர அவசரமாக தமிழ் தெரிந்த டில்லி ஆம் ஆத்மிகாரங்க இல்லைன்னு அறிவிக்க வேண்டியது ஆனது
இப்படி இன்று ஓடிக்கொண்டிருக்கும் ஆம் ஆத்மியின் டில்லி முதல்வன் படம் வெற்றிகரமாக நன்கொடை வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் கலக்கிக் கொண்டிருப்பதால்.... (அதிலும் ஜனவரி முதல் தேதியே ஒருநாள் வசூல் 41 லட்சம்) மிக பெரிய பட்ஜெட்டில் வரும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி பிரதமர் என்று படம் எடுக்க முடிவு செய்து இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளது அதிலும் அரவிந்த் கெஜ்ரிவாலே கதாநாயகர்
இப்படம் அதிரடி விரைவு தயாரிப்பில் இருப்பதால் நடிகர்கள் நிறைய தேவைப்படுகின்றது அல்லக்கை நொள்ளக்கை செல்லாக்கை எல்லாரும் வரிசையில் வாருங்கள்......
பழம் பெரும் நடிகர் மன்மோகன் சிங்கும் அவரது கூட்டணியினரும் மட்டுமின்றி இன்னொரு காவி நடிகர் மோடியும் அவரது கூட்டணியினரும் இதற்கு முன்பு நல்லாவே நடித்து படங்கள் வெளியிட்டாலும் புது முக நடிகர் இயக்குனர் கெஜ்ரிவாலைக் கண்டு நடுநடுங்குவது ஏன் என்று தெரியவில்லை
எது எப்படியோ...விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு.................
இந்த நாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சியும் அதன் ஆம் ஆத்மிக்களும் தேவையா?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி..... முடிவு-9/1/2014
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL |






