இந்த உலகத்திலேயே அரசியலுக்கு அடுத்து எந்த படிக்காத முட்டாளும் எளிதாக படம் காட்டி தன் வாழ்க்கையை வளமாக ஓட்டக்கூடிய ஒரே நாடு....தமிழ்நாடு
ஹாலிவுட் படங்களை அரையும் குறையுமாக நகலெடுத்து...டப்பிங் செய்து...ரீமேக் பன்னி...இப்படி இந்த ரகசிய சூத்திரங்களை அறிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்தக் கேடம்பாக்கத்து சினிமா மாயாவிகள்
காப்பிங்-டப்பிங்-ரீமேகிங் இதுவே இன்றைய தமிழ் திரைப்படங்களின் வெற்றி ரகசியம் கடந்த ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற எந்த தமிழ் படமானாலும் அவைகள் ஏதேனும் ஒரு வெளிநாட்டு படத்தின் அல்லது வெளிநாட்டு டாக்குமென்டரி படத்தின் முக்கிய காட்சியையோ அல்லது ட்விஸ்ட்டையோ சுட்டு சொந்தச் சரக்காக காட்சிப் படுத்தியதாகத்தான் இருக்கும்.......
இவியிங்க பண்ணுறது எப்படியிருக்கு என்றால்........
நம்ம சூப்பர் ஸ்டார் பாட்ஷா படத்தில் சொல்வதுபோல்.........
"நீ ஒரு கதைய வச்சு ஒரு படம்தான் எடுப்ப....யே..யே...நா ஒரேயொரு கதைய வச்சே அதே கதையில நூறு படம் எடுப்பேன்.....ஆங்..."
இன்னும் நம்ம உலகநாயகர் வார்த்தையில் நாயகன் படத்தில் சொல்வதுபோல்...
"இந்திக்காரன் காப்பியடிக்கிறான்....தெலுங்குக்காரன் காப்பியடிக்கிறான்..அவன நிறுத்தச் சொல்லு...நான் நிறுத்துறேன்"
இந்த காப்பி குடிக்கும் பழக்கத்திற்கு இன்றைய ஜொலிக்கும் நட்சத்திர நடிகர்கள் அஜித்,விஜய் யாரும் விதிவிலக்கல்ல....
வசனம்,கதை,மியுசிக்,பாடல் வரிகள்,BGM...என்று சுட்டுக்கொண்டு வரும் நம்ம கோலிவுட் சினிமா சித்தர்கள் படத்தின் போஸ்டரைக் கூட விடுவதில்லை
உங்கள் பார்வைக்கு சில ஹாலிவுட் படங்களும்அதை காப்பியடித்த கோலிவுட் படங்களும்...........
CRASH.....................வானம
SEVEN......................அந்நியன்
CHARLIE'S ANGEL............. 3-ரோசஸ்
STATE OF PLAY..............கோ
THE THOMAS CROWN AFFAIR..........கண்களால் கைது செய்
SLEEPING WITH ENEMY...................அவள் வருவாள?
BIG..........................................................நியூ
9 TO 5.........................................மகளிர் மட்டும்
GOODBYE LOVER.............பந்தயம்
NO MAN OF HER OWN............நெஞ்சில் ஒரு முள்
JUDGEMENT NIGHT..................சரோஜா
BICENTENNIAL MAN..................எந்திரன்
SERENTIPITY..............................ஜெஜெ
OMEN..........................................ஜென்மநட்சத்திரம்
DERAILED..............................பச்சைக்கிளி முத்துச்சரம்
MRS.DOUBTFIRE...................அவ்வை சண்முகி
WHAT IS ABOUT BOB?................தெனாலி
MEMENTO...................................கஜினி
THE KILLER...............................ரிஷி
CELLULAR...................................வேகம்
DISCLOSURE...............................இந்திர விழா
SWIMFAN............................வல்லவன்
500 DAYS OF SUMMER..............விண்ணைத்தாண்டி வருவாயா
ADDICTION TO LOVE......அழகாய் இருக்கிறாய் பயமா இருக்கிறது
COMING TO AMERICA......மை டியர் மர்த்தாண்டேயன்
HARDCORE.........................மகாநதி
................................................................
.................................................................
இப்படி பட்டியல் நீளமாக போய்க்கொண்டிருக்கின்றது நீங்கள் களவாண்ட சினிமா பட்டியல்.....அனுமார் வால் மாதிரி.....இதுலவேற தமிழ் சினிமா உலகத்தரத்திற்கு போயிடுச்சுன்னு....பீத்திக்கிராயிங்க
இப்படியே போனா ஹாலிவுட்காரங்க உங்க மூச்சில...இல்ல இல்ல இப்படி சொல்லுற எங்க மூஞ்சியில காறி துப்புவாயிங்க....
அடக் கோடம்பாக்கத்து சினிமா கோமான்களே இன்னும் நீங்கள் அப்பாவி தமிழர்களை ஏமாற்றியது போதும்
அடக் கோடம்பாக்கத்து கோலிவுட் சினிமா களவாணிகளே........ கொஞ்சம் சொந்தமா யோசியிங்கப்பா
thanks some source taken from meandmythinkingcap
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |