google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: சினிமா புரட்சியாளர்கள்

Wednesday, January 22, 2014

சினிமா புரட்சியாளர்கள்


நடிகர்களுக்காக பன்ச் பேசி படமெடுக்கும் மசாலா சினிமா மாயாவிகள் மத்தியில் அசலான சில சினிமா புரட்சியாளர்களை  அடையாளம் காட்டியது 2013-தமிழ் சினிமா உலகம்.......
சூது கவ்வும்,ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,ஹரிதாஸ்,தங்க மீன்கள்,மூடர் கூடம்,நேரம்..போன்ற படங்களால்  2013-ஆம் ஆண்டு கோலிவுட் திரையுலகம் சில துணிச்சலான திறமையாளர்களை கண்டது.

வணிகரீதியாக மசாலாத்தனங்கள்,அதிரடி,இரட்டை அர்த்த காமெடி,கவர்ச்சி,குத்துப்பாட்டு...என்று எல்லோரும் ஒரே வழித்தடத்தில் பயணிக்க இவர்கள் மட்டும் தங்கள் தனித்திறமையை நம்பி கரடுமுரடான பாதையில் பயணித்து  தமிழ் திரையுலகுக்கு புதிய பாதையை உருவாக்கி வைத்துள்ளார்கள் 

நடிகர்களுக்காக படம் என்பதை மாற்றி படத்துக்காக நடிகர்கள் என்ற இந்த தமிழ் சினிமாவின் தைரியசாலிகளின்  பயணம் எப்படி இருந்தது.....?

1-(சூது கவ்வும்) நலன் குமாரசாமி 




இன்றைய நவீன  வாழ்க்கையின் அன்றாட யதார்த்தமான நிகழ்வுகள் அதன் அபத்தங்கள்...பற்றி இயக்குனர் ஒர் இருண்ட காமெடியின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டாலும்....சீரான திரைக்கதை,மந்தமான தருணங்களை மிருதுவாக்கும் நகைச்சுவை,அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் சமத்துவ முக்கியத்துவம் போன்றவகைகளால் பெரிதும் போற்றப்பட்டார் இப்படத்தின் வெற்றிக்கு விஜய் சேதுபதியின் நடிப்பும் பெரிதும் உதவியது 

2-(ஓநாயும் ஆட்டுக்குட்டியும்) மிஷ்கின் 




 ஓர் இருண்ட,அபாயகரமான,வாழ்க்கையின் தத்துவார்த்தலில் பாதிக்கப்பட்டு துரத்தப்படும் ஒரு மனிதனின் துரத்தல் பற்றிய....திகில் திரைப்படம்   மூலம் இயக்குனர்-நடிகர் மிஷ்கினின் மீண்டும் மறுபிரவேசமாக தான் ஒரு சிறந்த இயக்குனராக நிருபித்தார் இளையராஜாவின் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் இன்றியும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நாயகிகள்  இன்றியும் புதுமைகள் செய்தார் 

3-(ஹரிதாஸ்) GNR குமாரவேலன் 




ஆட்டிஸம் பற்றிய விழிப்புணர்வு செய்தியுடன் அதேநேரம் காட்சிக்கு காட்சி லாஜிக் நிறைந்த தந்தை-மகன் உறவுகளின் உணர்வுப் பிரதிபலிப்பாக இயக்குனர் குமாரவேலன் தமிழ் திரையுலகமே பெருமைப்படும் ஓர் திரைக்காவியத்தை படைத்தார் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்த கிஷோரின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது 

4-(தங்க மீன்கள்) ராம் 




இயக்குனர்-நடிகர் ராம் திரையில் படைத்த தந்தை-மகள் உறவுகளின் உணர்வுப் பிரதிபலிப்பு என்று ஒருபுறம் மறைமுகமாக இன்றைய போலித்தனமான கல்வியல் முறைகள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும்  ஒருவித குற்ற தாக்கத்தையும் காட்சிபடுத்திய படம் 

5-(மூடர்கூடம்) நவீன் 



 

அடிப்படையில்  டார்க் காமெடியாக இருந்தாலும் புத்தரின் பழமொழி-It is better to travel well than to arrive என்ற தத்துவார்த்த ரீதியில் சொல்லப்பட்ட இப்படம் குத்துப்பாட்டு,கவர்ச்சி, அதிரடி...போன்ற சினிமாத்தனங்கள் இல்லாமல் இன்றைய சமுதாயத்தையும் அரசியலையும் எள்ளி நகைத்த நையான்டி சினிமா 

6-(நேரம்) அல்போன்ஸ் புத்தரன் 




ஒரே நாள் நிகழ்வாக காட்டப்பட்ட இப்படம் காதல்,நகைச்சுவை,திருப்பங்கள்... நிறைந்த திகில் படம் மேலும் குழப்பமில்லாத சீரான திரைக்கதை... வித்தியாசமான இயக்கம்...யதார்த்தமான நடிப்பு என்று பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது 

இப்படி 2013-தமிழ் சினிமா வழக்கமான நடிகர்களின் அலப்பறையின்றி சில துணிச்சல் மிகுந்த இயக்குனர்களால் புதிய பாதையையில் விடியலை நோக்கிய இவர்களின் பயணம்...... இந்த ஆண்டும்  தொடருமா? 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1