google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வீரமா? ஜில்லாவா?அட போங்கப்பா நீங்களும் உங்க சினிமாவும்

Monday, January 20, 2014

வீரமா? ஜில்லாவா?அட போங்கப்பா நீங்களும் உங்க சினிமாவும்


வரிசையா வீரம்,ஜில்லா, நெனக்கொடினே,  எவ்வடு...என்று  கோலிவுட்-டோலிவுட் படங்களா பார்த்து இப்ப சினிமா தியேட்டர் பக்கம் போகவே பயமாயிருக்கு..அதுதான் இப்படி.........

இங்கே 2013 ஆண்டு ஹாலிவுட்டை கலக்கிய நிறைய படங்களில் கதையம்சமும் தொழில்நுட்பமும் உள்ள முதல் மூன்று திரைப்படங்கள்...
1-டான்ஜோஅன்செயின்ட் (DJANGO UNCHAINED)-

 


அமெரிக்காவின் டார்க் காமெடியும் அதிரடி சாகசங்களும் நிறைந்த டிரான்டினோவின் எழுத்து இயக்கத்தில் சக்கப்போடு போட்ட படம்
இப்படத்தின்  கதை....தப்பி வந்த அடிமை சிறைபிடிக்கப்பட்ட  தன் மனைவியை மீட்டு வரும் சாகச நிகழ்வு.
                                        thanks-YouTube by moviemaniacsDE
சிறந்த நடிப்பு,அருமையான ஒலிப்பதிவு,சீரான இயக்கம்...என்று இப்படம் துவக்கம் முதல் கடைசிவரை படம் பார்ப்பவர்களை மெஸ்மரிசம் செய்யும் 

2-தி பிளேஸ் பியான்ட் பைன்ஸ் (The Place Beyond The Pines)-




இது டெரக் இயக்கத்தில் பிராட்லி கூப்பர்-ரியான் கோஸ்லிங் இணைந்து  நடித்துள்ள உணர்ச்சிகரமான படம்... ஒரு  மோட்டார் சைக்கிள் ஸ்டன்ட் ரைடர் எப்படி பேங்க் கொள்ளையனாக மாறுகின்றான் என்பதையும் தந்தை-மகன் உறவு பற்றியும் இரண்டு கோணங்களில் படம் காட்டப்பட்டுள்ளது


                              thanks-YouTube by PlaceBeyondthePines
ஒரு  படத்தின் புதுமை,அதில் நடித்துள்ளவர்கள் நடிப்பு, உணர்வுகளின் வலி... எப்படி படம் பார்ப்பவர்களை முழுமையாக தன்னுள் ஈர்த்துக் கொள்கின்றதற்கு எடுத்துக்காட்டு இப்படம்

3- தி கிரேட் கேட்ஸ்பி (The Great Gatsby)



எப்.ஸ்காட் பிட்ஜெரால்ட் எழுதிய நாவலின் 3-D திரைப்படமாகும்
 மிகப் பெரிய செல்வந்தர்களைப் பற்றி...அதில் ஒருவரான இளம்மில்லியனர்  கேட்ஸ்பியின் ஆசா பாசங்கள்,பிரமைகள், ஏக்கங்கள்,ஏமாற்றங்கள் இவற்றின் உணர்வுப் பூர்வமான  பிரதிபலிப்புகள்  பற்றி படம் காட்டும் படம் இதில் நமது BIG-B அமிதாப் அவர்களும் ஒரு கதாப்பாத்திரத்தில் தோன்றுவது சிறப்பு
                                 thanks-YouTube-by moviemaniacsDE
 

பஜ் லுஹர்மான் இயக்கத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் பிரமிப்பூட்டும் நிகழ்வுகள்,த்திரிலிங் ஒலிப்பதிவு...ஒரு ஷேக்ஸ்பியர் நாடகத்தை பெரிய திரையில் பார்த்த பிரமிப்பை ஊட்டும் என்கின்றார்கள் விமர்சகர்கள் .............


அதுசரி...அண்ணேன்...
எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்களே...
நம்ம  தமிழ் படங்களை விட்டுவிட்டு நம்ம உலகநாயகர் சொன்னமாதிரி ஊர விட்டு எங்கேயோ ஓடிட்டீங்களே
அத நினைச்சாத்தான் கவலையா இருக்கு...அண்ணேன் 


அது  வேற ஒண்ணுமில்ல தம்பி வரிசையா வீரம்,ஜில்லா, நெனக்கொடினே,  எவ்வடு... என்று  கோலிவுட்-டோலிவுட் படங்களா பார்த்து இப்ப சினிமா தியேட்டர் பக்கம் போகவே பயமாயிருக்கு.. அதுதான் இப்படி யூ-டியுப்ல படம் பார்த்துக்கிட்டு அலையிறேன் பணத்துக்கு பணமும் மிச்சம்... 


அப்புறம் இவியிங்க படத்த பற்றி எப்படி வேணும்னாலும் எழுதலாம்  யாரும் சண்டைக்கு வரமாட்டாயிங்க...ஆனால்....
இங்க வீரம் நல்லா இருக்குனா ஜில்லா-காரங்க  த்தூ...ங்குறாயிங்க...  
ஜில்லா  நல்லா இருக்குனா வீரம்-காரங்க  த்தூ...ங்குராயிங்க...  
 இரண்டும் நல்லாயிருக்குனா எல்லாரும்....த்தூ...த்தூ...ங்குறாயிங்க  
வீரமா? ஜில்லாவா? அட...போங்கப்பா நீங்களும் உங்க சினிமாவும்...


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1