google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜயின் ஜில்லா-சக்ஸஸ் மீட் மர்மம் என்ன?

Monday, January 13, 2014

விஜயின் ஜில்லா-சக்ஸஸ் மீட் மர்மம் என்ன?


(எச்சரிக்கை-இது சினிமா விழிப்புணர்வு பதிவு.தயவு செய்து எந்த சினிமா நடிகர்களின் அதீத ரசிகர்கள் அபிமானிகள் இப்பதிவை படிக்க வேண்டாம் அப்புறம் உங்கள் சினிமா மாயையின் சேதாரத்திற்கு நான் பொறுப்பல்ல.....) 

பொங்கலுக்கு திரைக்கு வந்த அஜித்தின் வீரமும் விஜயின் ஜில்லாவும் எது வெற்றிப்படம் என்று இன்னும் யாரும் தீர்மானிக்க முடியவில்லை வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் இரண்டையும் மாற்றி மாற்றி குழப்புகின்ற நிலையில்...........

விஜய் தனது ஜில்லா படத்தின் 3 நாட்கள் வசூல்  தனது துப்பாக்கி படத்தின் வசூலைவிட அதிகம் என்று சக்ஸஸ் மீட் வைத்து அதன் தயாரிப்பாளர் இயக்குனருடன் அதிரடியாக ஜில்லா வெற்றி என்று அறிவித்ததில் உள்ள மர்மம் என்ன....?

வினியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் ஜில்லா படம் ரொம்ப இழுவை என்றும் அதன் நீளத்தை குறைத்து மாமா...எப்ப ட்ரீட்டு...? என்ற குல்பி பாடல்காட்சியையும் நீக்கிய அப்படக் குழுவினர்  இப்போது ஜில்லா வெற்றி வெற்றி என்று குதுகளிப்பது............

இந்த  குளிர் காலத்தில்கூட தனது ரசிகர்கள் குளிரைப் பொருப்படுத்தாதாமல் தனது கட்-அவுட்களுக்கு பாலாபிசேகம் செய்ததற்கு பாராட்டு மடல் வாசித்தது ஏன்.....?அப்படியே அஜித்தின் வீரம் படத்தின் வெற்றி இந்த சினிமா உலகுக்கு தேவை என்று விஜயும் அப்படியே அவரு அப்பாக்காரு அய்யா சந்திரசேகரு வீரம் ஓடும தியேட்டர்கள்ல ஓடி ஓடி வீரம் படம் பார்ப்பது............ஏன்?
அட..போங்கப்பா....இரண்டு படங்களும் இந்த நாட்டுக்கு செய்த நன்மை என்ன? என்பதை பாருங்கப்பா............

http://chalodesi.com/wp-content/uploads/2013/10/Vijay.jpg

(இவர்  பெயர் சக்தி....மதுரை ஜில்லாவிலேயே ரொம்ப தில்லான ஆளு..அடியாளு...எதுவும் படிக்காமலே D.C ஆனவரு...சக பெண் போலிஸ்  அதிகாரியின் Butt...xxx பிடித்து விளையாடுவதில் கில்லாடி...இவரு நல்லவரா? கெட்டவரா? அது யாருக்கும்  தெரியாத தில்லாலங்கடி.....)


(இவர் பெயர்-சிவன் மதுரை ஜில்லாவில  மிகப்பெரிய தாதா...பல அப்பாவி மக்களின் சாவுக்கு காரணமானவர்...இவரு பையன் கமிஷனர் கைய வெட்டுற பயங்கர சக்திவாய்ந்த அடியாளு....அப்புறம் எதுவும் படிக்காத அடியாளை  போலிஸ் D.C ஆக்கிடுவாரு..எப்படியெல்லாம் படம் காட்டுறாயிங்க பாருங்க....... ) 

http://i.imgur.com/kgYmMao.gif(இவர் பெயர் விநாயகம்....வயது 40-க்கு மேல் இருக்கும் நரைமுடி..தாடி நைட் புல்லா தண்ணியடிப்பார்...காலையில தியானம் செய்வார் 20-வயசு பொண்ண டாவ் அடிப்பார் எதிரில் வருவோரை எகிறி அடிப்பார்....)  
இதனால எல்லோருக்கும் சொல்வது என்னவென்றால்...

" இந்த தமிழ் சினிமா நாட்டில் என் இளைய சமுதாயமே இப்படி எந்த சினிமா நடிகர்களையும்  நம்பி மோசம் போகாதே........

இப்ப மட்டுமல்ல எப்பவுமே  நம்ம கோடம்பாக்கத்து கோமான்கள் சினிமாவில் மட்டும் நடிக்கிறதில்லைங்கோ...நிஜத்திலையும் நல்ல நடிகர்கள் என்பதை தெரிஞ்சிக்குங்க மக்கா....புரிஞ்சிக்குங்க மக்கா.............

உண்மையில்  இந்த பொங்கலுக்கு வந்த சினிமாக்கள் வீரமும் ஜில்லாவும் ஆபாசத்தையும் வன்முறையையும் தவிர இந்த சமுதாயத்துக்கு படம் காட்டியது எதுவுமில்லை........"எச்சரிக்கை-இது சினிமா விழிப்புணர்வு பதிவு.தயவு செய்து எந்த சினிமா நடிகர்களின் அதீத ரசிகர்கள் அபிமானிகள் இப்பதிவை படித்துவிட்டு என்மீது கோபம் கொள்ள வேண்டாம் ....)
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1