google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: 1 நேனொக்கடினே(தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Tuesday, January 14, 2014

1 நேனொக்கடினே(தெலுங்கு)-சினிமா விமர்சனம்

இங்கே ஜில்லாவின் ஜொள்ளு இல்லை வீரத்தின் தில்லு இல்லை ஆனால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அற்புதமாய் படம் காட்டும் உளவியல் திகில் திரைப்படம்..மகேஷ் பாபுவின் 1 நேனொக்கடினே 




































1 நேனொக்கடினே படத்தின் கதை....ஒரு விபத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ராக் ஸ்டார் இளைஞன் கவுதம் (மகேஷ் பாபு) தன் சுய அடையாளத்தை தேடியும் சிறுவயதில் தனது பெற்றோர்களை  கொன்ற மூன்று கொடியவர்களை பழிவாங்குவதுமான இப்படம் ஹாலிவுட் The Bourne Identity படத்தின் தாக்கத்தின் உல்டா என்றாலும்  இயக்குனர்  சுகுமார் கதையில் நிறைய எதிர்பாராத திருப்பங்கள் வைத்து சுவராஸ்யமாக படத்தைக் கொண்டுசெல்கின்றார் 


mageshbabu

முதல்  பத்து நிமிட காட்சிகள் அதிரடியாக கலக்க....இடையில் தேவையில்லாமல் இயக்குனர் சில உளவியல் விளக்கம்  கொடுத்து படத்தை தடுமாற விட்டாலும் ஒரு பழிவாங்கும் கதைக்குள்ள அத்தனை திகில் காட்சிகளாலும் படத்தை நகர்த்துகின்றார் வணிகரீதியான மசாலாக்கள் கலந்ததே தெரியாமல்...... கடைசியில் வரும் கால் மணி நேர கிளைமாக்ஸ் இதுவரை நாம் திரையில் பார்க்காதது

Made with FreeOnlinePhotoEditor.com

கவுதம் வாழ்வில் புலனாய்வு பத்திரிகையாளர் சமீரா(Kriti Sanon)வின் வரவுஅவரது பெற்றோரைக் கொன்றவர்களை கண்டுபிடிக்கவும் அவரது பழிவாங்கும் நடவடிக்கைக்கும் உதவுகின்றது 

















நாசர்,ஷிண்டே,ரவாட்..இப்படி நிறைய நடிகரால் இருந்தாலும் படம் முழுக்க மகேஷ் பாபுவை சுற்றியே கதை உலாவுகின்றது  அவரது மகன் கவுதம் கிருஷ்ணா 7 வயது குழந்தை நட்சத்திரமாக வந்து அனைவரின் இதயத்திலும் இடம் பிடிக்கின்றார்

Made with FreeOnlinePhotoEditor.com

படத்தின் நீளம் அதிகம் அதே நேரம் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு ஆயினும் ஒரு சிறந்த படம் பார்த்த திருப்தி உறுதி.........
படம் முழுக்க UK,BANGKOK,GOA...போன்ற இடங்களில் அதிக பொருட்செலவில் ரத்தினவேலுவின் பிரமாண்டமான ஒளிப்பதிவில் பிரமிப்பை ஊட்டுகின்றது ஆதலால் இப்படத்தை திரையரங்கில் மட்டுமே பார்ப்பது இப்படத்தின் இப்பிரமாண்டத்தை நீங்கள் உணரமுடியும்

http://www.andhrawishesh.com/images/reviewslideshows/1Nenokkadine/1-Nenokkadine-Movie-Stills-04.jpg

இப்படத்தின் சிறப்பு.....இன்று டோலிவுட்டின் மாஸ் நட்சத்திரம் மகேஷ்பாபு எந்த காட்சிகளிலும் கதையின் தன்மைக்கு மீறிய நம்ம கோலிவுட் மாஸ்...மரணமாஸ் நடிகர்கள் போல் அலப்பறை இல்லாமலும் கோமாளித்தனங்கள் இல்லாமலும் நடித்திருப்பது.........


(அண்ணேன்......லாஜிக்னா என்ன விலை? என்கிற அவியிங்களே திருந்திட்டாயிங்க....இவியிங்க என்னடானா காசுகொடுத்து படம் பார்க்கப்   போற நம்ம மண்டைய சொறியிராயிங்க...உரிக்க உரிக்க ஒண்ணுமில்லாத சினிமா வெங்காயங்க.....)

அதாவது  பரவாயில்ல.....
இப்ப இந்தச் சினிமா நாட்டுல முக்கிய செய்தியும் 
முக்காதச் செய்தியும்...................





சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா...  இவியிங்க  இருண்டு பேரும் மறுபடியும் ஒண்ணா ஆட்டம் போடுறாயிங்களாம்....(சரி...நம்மளும் கூட்டத்தோட கோவிந்தா போடுவோம்............வாழ்க சிவகார்த்திகேயன்-ஸ்ரீதிவ்யா  )


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1