google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜில்லா-சினிமா விமர்சனம்

Saturday, January 11, 2014

ஜில்லா-சினிமா விமர்சனம்


 சுறாவின் காமெடி மேனரிசம், தலைவாவின் அப்பா பாசம்,அழகிய தமிழ் மகனின் பாப்பா சென்டிமென்ட்,பகவதியின் பாய்ச்சல்,கில்லியின் கீச்சல், போக்கிரியின் போலிஸ் நேர்மை... இப்படி விஜயின் ஜில்லா-முழுக்க முழுக்க சினிமா தளபதி தன் படை வீரர்களுக்கு படைத்த பொங்கல் திரைவிருந்து.

jilla

கதை  ஒருவரியில் சொல்வதென்றால்.........தப்பு செய்யும்  ஒரு பெரிய தாதாவை அவரது தப்புக்கு உடந்தையாக இருந்த ஓர் அடியாளே நல்லவராக திருத்தும் அதிரடி புதுமையான கதை 
மதுரையில்  எல்லா தப்பு தன்டாக்களும் செய்யும் பெரிய தாதா சிவனின் (மோகன்லால்) தத்து பிள்ளை சக்தி (விஜய்) அவருடன் சேர்ந்து கொண்டு எல்லா தப்பு தான்டாக்களும் செய்துகொண்டும்  சிவனுக்கு வரும் ஆபத்துக்களை  ஜில்லாவாக  தில்லா அழிக்கின்றார்....


 
ஒரு கட்டத்தில் சிவனுக்கு வரும் ஒரு நேர்மையான போலிஸ் கமிஷனரின் அதிரடி கைது பயத்தால் அவர் எதுவும் படிக்காத சக்தியை...தனது தந்தை சாவுக்கு காரணமான போலிசை பிடிக்காத சக்தியை...காக்கி சட்டை என்றாலே கோணி ஊசியால் But.xxx-ல் குத்தும் சக்தியை....சிவன் தன் சக்தியால் போலிஸ் A.C  ஆக்கி.....காக்கி சட்டை போட வைத்து.......தனது தப்பு ஜிகர்தன்டா வேலைகளுக்கு உடந்தையாக்குகின்றார்

ஆனால் சக்தியோ சிவனின் அடாவடிகளால் ஏற்பட்ட தீ விபத்தில் பொதுமக்கள் இறந்துபோவதை அறிந்து நேர்மையான போலிசாக மனம் மாறி  அந்த சிவனை எதிர்க்கின்றார்...திருத்த நினைக்கின்றார்..........

GlitterPhoto

சிவனுக்கு  வரும் ஆபத்து எதனால்...? யாரால்....? என்று ஒரு மிகப்பெரிய ட்விஸ்ட் படத்தில் உள்ளது அதை சொன்னால் சுவராஸ்யம் குறைந்துவிடும் என்பதாலும்.......சிவன் திருந்தினாரா...? என்பதை தெரிந்து கொள்ள சினிமா தளபதியின் படைவீரர்களே  எல்லோரும்  திரையரங்கில் பார்த்து திண்டாடுங்கள்... ச்சே... கொண்டாடுங்கள் இன்னும்  படத்தில் சிரிப்பு போலிஸாக பரோட்டா சூரியும் இருக்க....காதலுக்கு ஜில்லுனு ஜிகர்தன்டா மாதிரி காஜல் அகர்வால் இருக்க...விஜய்- காஜல்-சூரி இவர்கள் அவ்வப்போது கிளுகிளுப்பூட்டும் காமெடியாக ஒருவருக்கொருவர் But...xxx பிடி விளையாட்டு விளையாட....அரங்கம் அதிரும் சிரிப்புக்கு பஞ்சமில்லை பின்னணி இசையில் இமானின் ஜில்லா...ஜில்லா...அலப்பறை தாங்க முடியல.. அண்ணேன்... அம்புட்டு இனிமை அதாவது பரவாயில்ல கண்டாங்கி..கண்டாங்கி... பாட்டுல ஒரு கண்டாங்கி சேலையைக் கூட காட்டாம ஜாப்பான் குடைய வச்சிருக்கும் அம்மனிகளைப்  படம் காட்டிப் புட்டாயிங்க  


எது  எப்படியோ.......வாங்கண்ணா...வணக்கமங்கண்ணா...
 ஒருவாட்டி ஜில்லா பார்த்திட்டிங்கனா  அப்புறம் வாழ்க்கையில எந்த ஜில்லாவிலும் நீங்க மசாலா படமே பார்க்க  மாட்டிங்க.... நீங்க போதும் போதும் என்கிற அளவுக்கு உங்களுக்கு  பொங்கல் படைக்கிறோம்..அட வாங்கண்ணா....ABCDEFG....என்று அனைத்து தரப்பினரையும் கவரும் ஜில்லா 


 

இப்படி பெரிய தாத்தா...சாரி...தாதாக்களை திருந்த வைக்கும் சமுக அக்கறை கொண்ட கதையை இயக்கிய  நேசனுக்கும் அதற்கு உயிரோட்டம் கொடுத்த மாலிவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கும் இளைய தளபதி விஜய்-க்கும் இப்பிரமாண்டத்தை சாதித்த சூப்பர் குட் குழுவினருக்கும் நன்றியோ நன்றிங்கோ....

GlitterPhoto

அய்யா ஜில்லா படம்காட்டிய பட்டணத்துப்  பெரிசுகளே....
நீங்க எல்லோரும் தவறாமல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கட்டாயம் கலந்துக்கனுமுங்கோ....இது இப்படிப்பட்ட பெரிய தாதாக்களால் பாதிக்கப்பட்டு மதுரையிலும் அதைச் சுற்றிலும்  வாழும் பதினெட்டு பட்டி நாட்டாமை வேண்டுகோள்.......ங்கோ


 என்னது......... எல்லோரும் ஜப்பான பொங்க வைக்க போயிட்டீங்களா.... அய்யாமர்களே... அப்படியே ஜில்லா-2 சுட்டுட்டு வாங்க 
jilla

 உங்கள் பார்வையில்.........
நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால்....அல்லது படம் பார்த்துவிட்டு..............
விஜயின் ஜில்லா-படம்  எப்படியிருக்கு.....?
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-17/1/2014
பரிதி.முத்துராசன் @PARITHITAMIL

(TOI) Times Of India RATING FOR JILLA-..........3.5/5 

IMDB RATING FOR JILLA-----------------7/10

(TOI) Times Of India  RATING FOR VEERAM............ 3/5

IMDB RATING FOR VEERAM---------7.4/10

(PMR) Parithi Muthurasan RATING............As You Like It on 17/1/2014 poll result
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1