google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வீரம்-சினிமா விமர்சனம்

Friday, January 10, 2014

வீரம்-சினிமா விமர்சனம்யதார்த்தமான கிராமத்து நகைச்சுவையும் காதலுமாக துவங்கிய அஜித்தின் வீரம் சினிமா சக்கரைப் பொங்கலாக இனிக்கும் என்று நினைத்தால்.................

வீரம் படத்தின்  கதை....... தன் காதலியின் குடும்பத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளிடமிருந்து அவர்களுக்கே தெரியாமல் தனியாளாக நின்று  அவர்களை காப்பாற்றும் ஒரு வீரமிக்க மனிதனின்  வீரக் கதை 

சந்தோசத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்...துக்கத்தை யாரிடமும் சொல்லாதே என்ற மாபெரும்  வாழ்க்கை தத்துவத்தை திரையில் அதிரடியாக காட்டும்......... தல அஜித்தின் வீரம் ஒட்டன்சத்திரம் விநாயகம் பிரதர்ஸ் ட்ரான்ஸ்போர்ட் ஓனர் விநாயகம் (அஜித்) திருமணம் செய்தால் தன் மனைவி தன் நான்கு தம்பிகளை பிரித்துவிடுவாள் என்று பிரமச்சாரியாக வாழ்கின்றார் ஆனால் அவரது தம்பிகளோ ஆளுக்கு ஒரு ஜோடியுடன் அலைய தங்கள் கல்யாணத்திற்கு தடையாக இருக்கும் அண்ணன் விநாயகத்திற்கு கல்யாணம் செய்விக்க சந்தானத்தின் துணையுடன் அவரது பாலர் பள்ளி காதலி பெயரில் உள்ள  கோப்பெருந்தேவியை (தமன்னா) தேடிப்பிடித்து காதலிக்க வைக்கின்றார்கள்........

GlitterPhoto

காவேரிப்பட்டினத்திலிருக்கும் தன் காதலி கோப்பெருந்தேவியின் தந்தை ஊர் பெரிய மனிதர் அஹிம்ஷாவாதி நாசரை சந்திக்க சென்ற விநாயகம் அங்கே அவரது குடும்பத்தினர் அவரது எதிரி ஆடலரசு மூலம் பெரிய ஆபத்தில் இருப்பதை அறிந்து அவர்களுக்கு தெரியாமலேயே எதிரிகளை அடித்து துவசம் செய்து...........

விநாயகம்  தன் காதலியின் குடும்பத்தை காப்பற்றி தன் காதலில் வென்றாரா..? என்பதை அறிந்துகொள்ள வெள்ளித்திரையில் காண்க.....


தல அஜித்..........முதல் பாதியில் பெப்பர் அன்ட் சால்ட் தாடியுடன் வரும் தல...இரண்டாம் பாதியில் மீசைக்கு கருப்பு சாயம் பூசி தாடியில்லாமல் செம கலக்கல் ஆனால்... ஆரம்பம் படம் போன்று யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் படம் முழுக்க தல.தல.தல.........தலபுராணம் தல ரசிகர்களுக்கு முழு விருந்து....காரசாரமான பொங்கல் விருந்து 

படத்தில் சந்தானத்தை மிஞ்சும் காமெடியில் தல நல்லாவே கலக்குகின்றார் அதிலும் பாடல் காட்சிகளில் கோட்டு சூட்டுடன் அவரது கோமுட்டித்  தனமான ஆட்டத்துடன் காதல் நடிப்பு செம கலக்கல் கதிகலங்க வைக்கும் அதிரடி காட்சிகளிலும் தூள் பரத்துகின்றார்.....

ரயிலில்  போடும் சண்டைகட்சிகள்...காரில் துரத்தும் அதிவேக காட்சிகள்...திருவிழாவில் சிறுமியை எட்டுவரை எண்ணிடச் சொல்லி எட்டுபேரை பந்தாடுவது...நாசர் வீட்டில் நள்ளிரவில் நுழையும் எதிரிகளை இருட்டில் துவசம் செய்வது......இப்படி ஏகப்பட்ட த்திரில் காட்சிகள் அரங்கில் அமைதி நிலவுகின்றது......பயத்தில்  

veeram

டி.எஸ்.பி.யின் பின்னணி இசை ரொம்ப தூக்கல்...ஆனால் படத்தோடு ஒட்டிப்போகின்றது பாடல்களில் வெற்றியின் ஒளிப்பதிவில் இவள்தானா...? பாடல் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அருமை 


அண்ணேன்.........தமிழில் டப்பிய தெலுங்கு படம் மாதிரி இருக்குங்க... அண்ணா.......தல-ய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விஜய் சேதுபதி மாதிரி ஒரு காட்சியில பேசவச்சு... நல்ல காமெடி செய்த நீங்க இன்னும் கொஞ்சம் காரம் தூக்கலா போட்டிருந்தா வீரம் நம்ம கும்கிவீரன் மாதிரி ஆகியிருக்கும்  

சிறுத்தை சிவா அண்ணேன்..  தல அஜித்துக்கு வீரமாக நீங்க செய்த  பொங்கல் ரொம்ப காரம்.....உறைப்பு அதிகம் ஆனாலும் தல ரசிகர்கள் மட்டுமன்றி எல்லோரும் ஒருதடவை பார்க்கலாம்

 

யதார்த்தமான கிராமத்து நகைச்சுவையும் காதலுமாக துவங்கிய அஜித்தின் வீரம் சினிமா சக்கரைப் பொங்கலாக இனிக்கும் என்று நினைத்தால் அதுவோ அப்படியே ஆந்திரா குண்டூர் சில்லி மசாலா போட்ட அதிரடி காரப் பொங்கல்........

பதிவுலக  நண்பர்களே! நீங்கள் படம் பார்த்தவ்ராக இருந்தால் அல்லது படம் பார்த்துவிட்டு............................
அஜித்தின்  வீரம் எப்படியிருக்கு....? 
வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.......முடிவு-17/1/2014

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1