google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இனியாவது நல்ல படம் நடிங்க நியாயன்மார்களே!

Wednesday, January 01, 2014

இனியாவது நல்ல படம் நடிங்க நியாயன்மார்களே!

ரஜினி,கமல்,விஜய்,அஜித்...போன்ற  நட்சத்திர நடிகர்கள் மட்டுமின்றி  விஜய் சேதுபதி,சிவ கார்த்திகேயன்... போன்ற  வளரும் நடிகர்களே...........இனியாவது நல்ல படம் நடிங்க நியாயன்மார்களே!
  

சமுதாயத்தில் சினிமா பொழுது போக்கு என்ற நிலை மாறி... மக்களின் வாழ்க்கையாக வேரூன்றி விட்டது அரசியல்,கலாச்சாரம்... என்று எல்லாமே சினிமாவானது..அதனால் சினிமா உலகில் இருக்கும் நியாயன்மார்களே! நீங்கள் நல்ல படம் எடுக்காவிட்டாலும் பரவாயில்லை பணத்திற்காக வாயில் விஷம் வைத்து படம் காட்டும் நாகப் பாம்பாக  பயம் காட்டாதீர்கள்....?

கடந்த ஆண்டு வந்த மொத்த படங்களில் ஏதோ ஒன்றிரண்டு தவிர சாதி,மத ஒன்றுமையுடன் சமத்துவமாக டாஸ்மாக் டாக்குமென்டரி போல் படம் காட்டியவர்கள்தான் அதிகம். அத்தனைபேரும் அய்யோ...டாஸ்மாக் நிறுவனத்திற்கு மொத்த ஏஜென்ட்கள் போல போதைப் படங்காட்டி படம் பார்ப்பவர்களையும்  தள்ளாடவிட்டு..... அடங்.....கொய்யால...குடி குடியை கெடுக்கும்னா..? குடியைக் காட்டும்  சினிமா  உங்க குடியை கெடுக்காதா....?

இப்படித்தான் புகைபிடிப்பது பெரிய ஸ்டைல் என்று சினிமா காட்டி ஒரு தலைமுறையையே சீரழித்த இயக்குனர்கள்,நடிகர்கள் என்று ஒரு நாதாரிக்கூட்டம்....இன்று விழிப்புணர்வு செய்கின்றார்கள் நுரையீரல் பஞ்சு போன்றது என்று..........அடங்....கொக்காமக்கா உங்க ஈரல மட்டும் என்ன இரும்பிலா செஞ்சாயிங்க

கடந்த ஆண்டு நான் படம் பார்த்து விமர்சனம் எழுதிய பதிவுகள் அனைத்திலும் அந்த டாஸ்மாக் பக்கிகளைப் பற்றி முடிந்தவரை சுட்டிக்காட்டி எழுதிள்ளேன் அதுவே ஒரு கட்டத்தில் எல்லாப் பண்ணிகளும்  டாஸ்மாக் குட்டிகளாகவே போட...இதைப் பற்றி  எழுதுவதற்கே அசிங்கமாக இருக்கின்றது... அடப்...பரதேசிகளா... உங்க படத்துக்கு வரிவிலக்கு கொடுக்கும் அரசு கஜானாவை நிரப்ப நன்றிக்கடனா இது....?

அய்யா சினிமா உலக நியாயன்மார்களே....நாட்டில் பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்க.... நீங்கள் ஏன் நாட்டைக் கெடுக்கும் இப்படி சமுதாயத்தை சீரழிக்கும் படம் காட்டி பிழைக்கின்றீர்கள்  நாய் விற்ற காசு குறைக்காது என்ற  எண்ணமா...?  இப்பலாம் நாய் விற்ற காசு உங்களைகடித்து குதறிவிடும்

சினிமா உலக நியாயன்மார்களே! இந்த (2014 ) ஆண்டாவது.... நாட்டுக்கு  நல்லது செய்ய நினையுங்க...இந்த புத்தாண்டு தினத்திலிருந்தாவது  புதியதோர் உலகம் காட்ட புறப்பட்டு வாங்க.... 


உங்க கையில உள்ள சினிமாவை சமுதாயத்தை சீரழிக்கும் ஆயுதமாக பயன்படுத்தாமல்.....இனியாவது நல்ல படம் நடிங்க நியாயன்மார்களே!

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1