google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆஸ்கர் விருதும் இந்திய சினிமாக்களும்

Saturday, January 18, 2014

ஆஸ்கர் விருதும் இந்திய சினிமாக்களும்











இவர்களை வைத்து என்ன ஆஸ்கர் விருது படமா? எடுக்க முடியும் என்று சமீபத்தில்  ஒரு படத்தயாரிப்பாளர் சொன்ன வாக்கு....அப்படியே பலித்துவிட்டது இந்திய சினிமாவுக்கு  100 ஆண்டுகள் அனுபவம் இருந்தப் பிறகும் இன்னும் அது உலக சினிமாத்தரத்தை எட்டவில்லை........ 

beach

 
ஆஸ்கர் விருது சினிமா உலகில் உள்ளவர்களின் லட்சியம் கனவு ஆகும் ஆனால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு அது என்றும் கனவாகவே உள்ளது 

ஆஸ்கர்  விருதுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளன அவைகளை பூர்த்தி செய்யும் படங்களும் நடிகர்களும் மட்டுமே.....
இந்த  வருடம் இந்தியாவிலிருந்து 13 திரைப்படங்கள் பரிந்துரைக்கப் பட்டன ஆனால் அவைகளில் ஒன்றுகூட ஆஸ்கர் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது மிகப்பெரிய அவமானம் 
























உலகில் உருவாக்கப்படுகின்ற மொத்த சினிமாக்களில் இந்தியாவில் மட்டும் பாதி படங்கள் என்ற எண்ணிக்கையில்....கடந்த வருடம் 1500 படங்களுக்கு மேல் இந்தியாவில் வெளிவந்துள்ளன..ஆனால் இன்றுவரை ஒரு இந்தியப் படத்திற்கு கூட அந்த மதிப்புமிக்க ஆஸ்கர் சிலையை கொண்டுவரும் தகுதியில்லை 


Slumdog Millionaire,Gandhi,Life of Pi...போன்ற படங்கள் அதில் நடித்தவர்கள் ஆஸ்கர் விருது வாங்கவில்லையா? என்று நீங்கள் கேட்கலாம்....உண்மையில் சோகம் என்னவென்றால் மேற்கூறிய படங்கள் எதுவும் முழுமையான இந்தியன் மூளையில் உருவானது எதுவுமில்லை என்பதுதான் உண்மை 


ஆனாலும் இதுவரை இந்த மதிப்பிற்குரிய விருதைப் பெற்ற இந்தியர்கள் ..........
பானு அதையா (சிறந்த ஆடை வடிவமைப்பு - காந்தி, 1983), சத்யஜித் ரே (கவுரவ விருது, 1992); குல்ஸார் (சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான - ஸ்லம்டாக் மில்லியனர், 2008); ஏ ஏ. ஆர். ரகுமான் (சிறந்த உண்மையான இசை / சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான - ஸ்லம்டாக் மில்லியனர், 2008) மற்றும் ரெசுல் பூக்குட்டி (சிறந்த ஒலிக்கலவை - ஸ்லம்டாக் மில்லியனர், 2008)................அவர்களை வாழ்த்தி மகிழ்வோம் 


உலகிலேயே அதிக சினிமா படங்கள் எடுக்கும் ஒரு நாடு இந்த வருடம் பரிந்துரைத்த 13 படங்களில் ஒன்றுகூட வேற்று மொழி...வேற்று நாடு... இப்படி எந்தப் போட்டிக்கும் பரிந்துரைக்கப்படாதது அவமானம்  எதிர்பார்க்கப் பட்ட The GoodRoad படமும் கோவிந்தாவானது........



ஆஸ்கர் விருதுக்கு அமீர்கான் 2 முறை பரிந்துரைக்கப்பட ஆனால்  6 முறை பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகர் நம்ம உலகநாயகர் என்று ஒரு பெருமை நமக்கு உண்டு......... சாகர்,நாயகன்,தேவர் மகன்,குருதிப்புனல்,இந்தியன், ஹேராம்...என்று படங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் 

viswaroopam2


நாயகன் இந்த நூற்றாண்டின் சிறந்த படமென்று உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கடைசி கட்டத்தில் நாமினேஷன் ஆகாமல் போய்விட்டது....வரும் விஸ்வரூபம் 2 வாவது ஆஸ்கார் வெல்லுமா? 

இப்போதைக்கு  நமக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் உலகநாயகர் கமல் மட்டுமே...ஆனால் சினிமாவில் எந்த புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கும் என்று எவருக்கும் தெரியாது திடிரென்று நம்ம நடிகர்கள் யாரேனும் அதீத முயற்சி எடுத்து சாதனை பண்ணலாம் 



(அண்ணேன்...இங்க படமா எடுக்குராயிங்க...? படம் எடுத்து எப்படி நாட்ட பிடிப்பது என்று அலையிராயிங்க....நல்ல பாம்பு போல் வாயில் விஷத்தை வைத்துக்கொண்டு படம்காட்டி  பயம் காட்டுறாயிங்க.... போங்க அண்ணேன்...ஏதோ படம் பார்த்தோமா? ஒரு விமர்சனப் பதிவு எழுதினோமா...? அப்படின்னு போயி முக்காடு போட்டு தூங்குங்க.. அண்ணேன்..........)

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1