google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரம்மன்-சினிமா விமர்சனம்

Friday, February 21, 2014

பிரம்மன்-சினிமா விமர்சனம்



பிரம்மன்





















சினிமா விமர்சனம்








சுப்ரமணியபுரம் படத்தில்  நட்புக்காக கொலை செய்யும் சசிகுமாருக்கு பிரம்மன் படத்தில் நட்புக்காக காதலை தியாகம் செய்யும்  ஒரு வித்தியாசமான படம்... ஆனால் நமக்கோ இன்னொரு ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை உல்டா பன்னி......... 

http://www.nikhilscinema.com/wp-content/uploads/2014/01/Bramman-Movie-Stills-9.jpg
 

கோயம்புத்தூரில் சிறுவயதிலிருந்தே சினிமா என்றால் உயிராகவும்  வாழ்க்கையாகவும் உள்ள இரண்டு நண்பர்கள்...சிவா (சசிகுமார்) - குமார் (நவீன் சந்திரா) அவர்களில் குமார் சிறுவயதிலேயே சென்னைக்கு போய் மதன்குமார் என்று தெலுங்கு பட பெரிய இயக்குனராகிவிட....சிவாவோ கோவையிலேயே மாடர்ன் தியேட்டர் என்ற திரையரங்கை  நஷ்டத்தில் நடத்த அவருக்கு நண்பராகவும் உதவியாளராகவும் சந்தானம் என்றும் கூத்தடிக்க... அவ்வப்போது சிவா காயத்திரி (லாவண்யா) என்ற கல்லூரி மாணவியை ஜொள்...ள்ளுவிட்டு   காதலிக்க........





















திடிரென்று நஷ்டத்தில் ஓடும தியேட்டருக்கு  5 லட்சம் வரிகட்டவேண்டி பணத்திற்காக தனது பால்ய நண்பன் குமாரைத் தேடி  தேடி சென்னை வரும் சிவாவுக்கு சந்தர்ப்ப வசத்தால் இயக்குனர் ஆகும் வாய்ப்பு கிடைக்கின்றது சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாத சிவா பரோட்டா சூரியுடன் சேர்ந்து சினிமாவை கற்றுக்கொண்டு படத்தை இயக்கப் போகும் வேளையில் இயக்குனர் மதன்குமார் முதன்முதலாக தமிழ்படம் எடுக்க நினைத்து இவரது கதையையும் வாய்ப்பையும் தட்டிப்பறிக்க இவரும் நட்புக்காக எல்லாம் விட்டுக் கொடுத்துவிட......

sasikumar


சோதனையாக  சிவாவின் காதலியையும் தன் நண்பன் குமாருக்கு நிச்சயிக்கப் பட....தன் காதலையும் நட்புக்காக அவர் தானம் செய்ய நினைக்கும் போது....இயக்குனர் மதன் குமாருக்கு சிவாவுடன் தன் பால்ய கால நட்பு நினைவுக்கு வர..............

சிவா-காயத்திரி காதலில் ஓன்று சேர்ந்தார்களா...? என்பதை (மாடர்ன் தியேட்டரில் அல்ல...ஏன்னா அங்க எப்பவும் போஸ்டர் ஓட்டுவது கார்த்தியின் ஆயிரத்தில் ஒருவன் ஆனால் படம் காட்டுவதோ  எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்....)  உங்கள் ஊரில் புதுப்படம் ஓடும தியேட்டரில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........

brahman


வித்தியாசமாக  நடிக்கவேண்டும் என்று நினைத்த சசிகுமாரை வாழ்த்தலாம் அதற்காக  இப்படிப்பட்ட காமெடி கதைகளில் நடித்தால் உங்கள் சினிமா எதிர்காலமும் காமெடியாகத்தான் இருக்கும் சரியான போக்கு இல்லாத கதை என்பதால் சந்தானம்,சூரி...இவியிங்க ஆட்டம் எல்லாம் போங்கு ஆட்டமாக தெரிகின்றது 













                                 
                                             thanks-YouTube by southmovie99

  DSP யின் இசையில் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக  இருந்தாலும் அவைகள் படமாக்கப்பட்ட சுவிஸ்,வெனிஸ்,இத்தாலி... காட்சிகள்குளுமையாக இருந்தாலும் எதுவும் கதையுடன் இணையாததால் (சூரியே...படத்தில் கிண்டலடிப்பது போல்...) நமக்கும் எதுவும்  லயிக்கவில்லை

brahman

வன்முறைக் காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல் காமெடியாக படம் கொடுக்க நினைத்த இயக்குனர் சாக்ரடிஸ் பாராட்டுக்குரியவர் ஆனால் காமெடி துணுக்கு காட்சிகளாலும் காதல் டூயட் பாடல்களாலும் கஷ்டப்பட்டு இழுவையாக இழுத்துக்கொண்டு போகும் பிரம்மன் படம் கிளைமாக்ஸ் வரை கதை எதை நோக்கி போகின்றது என்று சொல்ல மறந்துவிட்டார்...நட்புதான் என்றால் அதைச் சொல்லும் அழுத்தமான காட்சிகள் எதுவும் இல்லை...காதலும் அப்படித்தான்...ஆனால் சாக்ரடிஸ் என்ற பெயருக்கு ஏற்ப வாழ்க்கை தத்துவம் நிறைய பேசுகின்றார் 


பிரம்மன்-இடைவேளை வரை கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா இடையில் கொஞ்சம் பாக்கியராஜின் தாவணிக்கனவுகள் கடைசியில் பார்த்திபனின் ஹவுஸ்புல் ...ஆக மொத்தத்தில் சசிகுமார்-சாக்ரடிஸ் அன் கோ தலையில்  இந்தப் பிரம்மன் எழுதிய கதை...........




சுப்ரமணியபுரம் படத்தில்  நட்புக்காக கொலை செய்யும் சசிகுமாருக்கு பிரம்மன் படத்தில் நட்புக்காக காதலை தியாகம் செய்யும்  ஒரு வித்தியாசமான படம்...


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1