google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கத வாங்கலையோ கதை...சினிமாக் கதை!

Thursday, February 27, 2014

கத வாங்கலையோ கதை...சினிமாக் கதை!

அய்யா...அம்மா.... கத வாங்கலையோ கதை! சினிமாக் கதை ...! ரஜினி,கமல், விஜய்,அஜித்... எல்லா நடிகர்களுக்கும்  ஏற்ற சினிமாக் கதை.... என்று   திருவிளையாடல்  சிவன் (சிவாஜி) மாதிரி கூவிக்கிட்டு  கோடம்பாக்கம் வீதிகளில்....

அட.... நம்ம அப்பாடக்கர் பதிவரு........யோவ் சினிமா பதிவர...என்ன இப்ப சினிமா கதையக்கூட தெருவில கூவி விக்க ஆரம்பிச்சிட்டிங்களா....? அது சரி உங்கிட்ட அப்படி என்ன விசேஷமான கத இருக்கு...? கொஞ்சம் ஒன்-லைன்ல அவுத்துவிடு கேட்போம்........

பதிவர்- வாங்க அய்யா... டைரடக்கரா நீங்க....அய்யா...இதுல ஒரு கதைய வச்சு நீங்க  படம் எடுத்தா உங்களுக்கு  பிலிம் பேர் அவார்ட் கிடைக்குமுங்க...


டைரக்டர்-
அப்ப.... இரண்டு கதையச் சேத்து வச்சு எடுத்தா....?


பதிவர்-
உங்களுக்கு தேசிய விருது கிடைக்குமுங்க

டைரக்டர்- 
அப்படி என்னய்யா உன் கதையில செருப்பு...ச்சே...சிறப்பு..? அப்ப எல்லா கதையையும் சேத்து வச்சு எடுத்தா...?

பதிவர்-
ஒரேயடியா...நீங்க போய் சேர்ந்திடுவிங்க....ஹாலிவுட் உலகத்துக்கு அப்புறம் உங்களுக்குத்தான் ஆஸ்கார் விருது........

டைரக்டர்- 
அடேங்கப்பா...அம்புட்டு பெரிய அப்பாடக்கரா நீ....சரி...உன்கிட்ட நம்ம சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ற கதை இருக்கா....?பதிவர்-
இக்கடச்...சூடும்மய்யா.......சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ற சூப்பர் கத....
பேச்சடையான்......
ஒருநாள் சென்னையில இருக்கிற எல்லா மொள்ளமாறி பேய்களும்  ஒன்னு சேர்ந்து  எல்லா  டாஸ்மாக் கடைகளிலும்   துட்டுகுடுக்காம அம்புட்டு பாரின் சரக்கயும்  அள்ளிட்டுப் போயி அம்மா தண்ணீர் கலக்காம அப்படியே ராவா அடிச்சிபுட்டு..........

அப்படியே அம்மா உணவகத்தில ஒத்த ரூபாயும் கொடுக்காம ...த்தா னு திட்டிக்கிட்டு இட்லி,சப்பாத்தினு அம்புட்டையும் தின்னுப்புட்டு எங்கே அம்மா திரையரங்கம்...? என்று மப்புல போயஸ் கார்டன் போய் அம்மா வீட்டு வாசல்லப் பார்த்து விரல நீட்டி  ஆர்ப்பாட்டம் பன்னுராயிங்க........

அம்மாவோ  இது கேப்டனின் சதிவேலை என்று நினைத்து பதிலுக்கு இரண்டு விரலைக் காட்டியும் அடங்காத பேய்களை அடக்க ஓரக்கண்ணால் எதிர் வீட்டுல இருக்கிற  நம்ம சூப்பர்   ஸ்டார் (சின்ன) பேச்சடையானப் பார்க்க...
 உடனே நம்ம சின்ன பேச்சடையானும் கோபம் கொண்டு ஒவ்வொரு பேயாக அடித்து நொறுக்க.....ஆனாலும்   கிளைமாக்ஸில் எல்லா பேய்களும் ஒரே ஒரு பெரிய பேயாய் உருவெடுத்து நிற்க........ அங்கதான் ஒரு ட்விஸ்ட்....நம்ம சூப்பர் ஸ்டார் உடனே அவரோட தாத்தா பெரிய பேச்சடையான நினைக்க.....


உடனே தாத்தா  பெரியப் பேச்சடையான்  லகலக...லகலக  என்று பாய்ந்து வந்து சுவர்களை உடைத்து.... கதம் கதம் என்று இரட்டை இலை முத்திரையை அந்தப் பேய்கள் முன்னாடி காட்டி எல்லாப் பேய்களையும் வதம் செய்துவிடுகிறார்....

kochadaiyaan


டைரக்டர்- 
யோவ்...நிறுத்துயா இந்தமாதிரி பீரியடு சைன்ஸ் படத்தைத்தான் சூப்பர் ஸ்டார் அவரோட செல்ல மகள வச்சு கோச்சடையானு எடுத்துக்கிட்டு இருக்காரு அம்மணியும் நிறைய மணி செலவு செய்து அதென்னமோ  மோஷன் கேப்ச்சர்  பன்னிக்கிட்டு இருக்குது....அவியிங்க ஒவ்வொருத்தரையும் படம் வரைஞ்சி படம் காட்டுரதுக்குள்ள அம்மணிக்கு போதும் போதும்னு ஆச்சு...இப்பத்தான் எப்ரல்ல்ல வரும் என்கிறாயிங்க...இதுல வேற நீ மொள்ளமாறிப் பேய்கள வேற படம் வரைய சொல்லுற...

பதிவர்-
சரிங்க...அய்யா என்கிட்டே இன்னொரு கதயிருக்கு....  உலக நாயகருக்கு ஏற்ற கத.........புஸ்வரூபம்  சொல்லுறேன் கேளுங்க பிடிச்சிருந்தா எடுத்துக்குங்க காசு கீசுலாம் வேண்டாம்...இளைய தளபதிக்கு ஏற்ப ஜொள்ளானு ஒரு கதயிருக்கு....  அப்புறம் நம்ம தலக்குகூட காரம்-னு ஒரு கதயிருக்கு....  

டைரக்டர்- 
யோவ்....புன்னாக்குப் பதிவரே இப்படியே  ஓடிப் போயிடு....இன்னொருவாட்டி கோடம்பாக்கத்தில கத வாங்கலையோ கதைனு  கூவுன மவனே என் நண்பன்  குட்டிபுலி கிட்ட சொல்லி உன் சங்க அருத்துடுவேன்....ஆங்...

பதிவர்-
அட...போங்கையா...இந்த தெரு இல்லனா அடுத்த தெரு...இவரு இல்லனா இன்னொருத்தரு.....அய்யா...கத வாங்கலையோ கத..சினிமாக் கத 

குறிப்பு-இது ஒரு நகைச்சுவைப் பதிவு....ரசிகசிகாமனிகள் யாரும் கோபப்படவேண்டாம்...........

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1