google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வெண்மேகம்-சினிமா விமர்சனம்

Wednesday, February 26, 2014

வெண்மேகம்-சினிமா விமர்சனம்


வழக்கமான அதிரடி மசாலா,ஜொள்ளு காதல்,அழவைக்கும் காமெடி...படங்களாகப் பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு வித்தியாசமான யதார்த்தமான கதைக்கருவுடன் வந்துள்ள படம் வெண்மேகம்....



சமுதாயத்தின் இருண்ட பக்கங்களின் மறைந்திருக்கும் ஓர் அவலத்தை வெள்ளித்திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டும் படம் வெண்மேகம்....

படம் ஆரம்பிக்கும் போதே.........

ஜோதி (ரோஹினி) என்ற பெண் தன் பருவம் அடைத்த பள்ளிச் சிறுமி- மகள்  பூஜா (ஜெயஸ்ரீ) வைக் காணவில்லை என்றும் ஒரு ஆர்ட்டிஸ்ட் பெயிண்டர்  அரவிந்த் (விதார்த்) வுடன் ஓடிப்போயிருக்கலாம் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதாக...........


venmegam

அரவிந்தோ  ராஜி (இஷாரா நாயர்) என்ற இளம் பெண்ணைக் காதலிக்க சிறுமி பூஜாவும் அரவிந்தைக் காதலிக்க என்று பிளாஷ் பேக் காட்சிகளாக நகரும் படம்....

ஒரு கட்டத்தில் பூஜாவின் காதல் அவளது தாய் ஜோதிக்கு தெரியவந்து கண்டித்ததில்...... பூஜா வீட்டைவிட்டு விசாகப்பட்டனம் போன அரவிந்தை தேடி ஓடிப்போகின்றாள்......

பழி அரவிந்த் மீது விழ.......பூஜா மீதுள்ள பாசத்திலும் அரவிந்தும் பூஜாவை தேடி அலைகின்றான்........ஆறு மாதத்திற்குப் பிறகு வைசாக்கில் ஒரு கொடிய கூட்டத்தில் பூஜாவை ஒரு பரிதாபமான கோலத்தில் கண்டுபிடித்து அவளை  எப்படி மீட்கின்றான் என்பதே கதை.......

(இது ஒரு காதல் த்திரிலர் திரைப்படம் என்பதாலும் இதற்கு மேல் தொடர்ந்தால் படம் பார்க்க நினைப்பவர்களுக்கு த்திரிலிங் இல்லாமல் போய்விடும் என்பதாலும் இத்துடன் கதை சொல்வதை...........)

venmegam

சமுதாயத்தில்  சமுக விரோதிகள் பெண்களுக்கு செய்யும்அவலமாக இதுவரை எந்த சினிமாவிலும் காட்டப்படாத ஒரு கொடுமையை கருவாக எடுத்து  ராம் லட்சுமணன் என்ற  இரட்டை இயக்குனர்கள் தெள்ளத்தெளிவான திரைக்கதை வசனம் இயக்கம் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் அசத்தியிருக்கின்றார்கள்  


சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இதற்காக அவைகளை மறக்கலாம்.........தீதும் நன்றும் பிறர தர வாரா.....நல்ல முடிவு 
என் குழந்த உங்க குழந்தய பெத்துத் தருவா.....கலங்கடிக்கும் வசனம்   
இங்க வருர கோழி எதுவும்   குஞ்சு பொரிக்காம போகாது....வில்லத்தனமான வார்த்தைகள் 

விதார்த்  அடக்கமான நடிப்பு....ஜெகன் அவ்வப்போது சிரிக்க வைக்க... கவர்ச்சிக்கும் காதலுக்கும் இஷாரா நாயர்....கண்டிப்பானா தாய் ரோஹினி... கொடுமையான வில்லியாக மஞ்சரி...என்று  



ஓர்  உண்மை சம்பவத்தின் அடிப்படையில்உருவான கதை என்று சொல்லப்படும் வெண்மேகம்....அது உண்மையா? என்று தெரியவில்லை ஆனாலும்...எப்பவாவதுதான் இப்படி வெண்மேகம் போன்ற படங்கள்  தமிழ் திரைவானில் தோன்றுகின்றன அவைகளும் ஆஹா கல்யாணம்,பிரம்மன்...போன்ற அலப்பறை படங்களால் கலைந்து போகின்றன 
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1