google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பண்ணையாரும் பத்மினியும்-சினிமா விமர்சனம்

Friday, February 07, 2014

பண்ணையாரும் பத்மினியும்-சினிமா விமர்சனம்

நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம்,அட்டக்கத்தி  போன்ற படவரிசையில் யதார்த்தமான குடும்ப வாழ்க்கையையும் நளினமான காதலையும்  பகட்டு பந்தா போலி  இல்லாமல் படம் காட்டும்...  பண்ணையாரும் பத்மினியும் 


இதுவரை திரையில் கவர்ச்சி,குத்துப்பாட்டு,அதிரடி,போலி காமெடி...போன்ற சினிமாத்தனங்களே பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு இப்படம் ஆகக்  கொடுமையாக இருக்கும் ஆனால் நாவல்,கதை,கவிதை...நேசிப்பவர்களுக்கு  இது ஒரு புது அனுபவமாக இருக்கும் 

பட்டணத்தில் ஒரு புது ஹுண்டாய் கார் வாங்கும் ஒருவர் (அட்டகத்தி தினேஷ்) தனது சிறு வயது நினைவாக அவரது கிராமத்து பண்ணையார் வைத்திருந்த பத்மினி கார் பற்றி படம் துவங்குகிறது.....

city


1980 காலகட்ட கிராமத்து நல்ல பண்ணையார் (ஜெயபிரகாஷ்) ஒருவர் தனது உறவினர் கொஞ்ச நாளைக்கு கொடுத்து வைத்திருந்த பழைய பத்மினி காரை மிகவும் நேசித்து பாதுகாக்கின்றார் ஆனால் அந்தப் பத்மினி காருக்கு அவ்வப்போது அவரைவிட்டு பறிபோகும் நிலை... அந்தக் கார் கடைசிவரை பண்ணையாரிடம் இருந்ததா...? என்பதே கதை........


பண்ணையாரும் அந்தப் பத்மினி  காரும் அதற்கு டிரைவராக வரும் முருகேசன் (விஜய் சேதுபதி), பண்ணையாரின் மனைவி செல்லம்மாள் (துளசி), முருகேசன் காதலி மலர்விழி (ஐஸ்வர்யா),வீட்டு வேலைக்காரன் பீடை (பாலசரவணன்)...இவர்கள் ஐவர் சுற்றியே படம் நகர்கின்றது

அறிமுக இயக்குனர் அருண்குமார்  காட்சிகளின் நகைச்சுவை துணுக்கு தோரணங்களால் கதம்ப மாலையாக கோர்க்கப்பட்ட படம் இது...தமிழ் சினிமாவை உண்மையில் இன்னொரு கட்டத்துக்கு பழைய கிராமத்து கதையை படம்காட்டி மிகவும் துணிச்சலுடன் படமாக்கிய இயக்குனர் பாராட்டுக்குரியவர் 

படத்தின்  சிறப்பான காட்சிகளாக............விஜய் சேதுபதியின் டிராக்டர் டிரைவராக அறிமுக காட்சி........இறந்து போன சடலத்தை காரின் மீது நாற்காலி போட்டு கட்டி வைத்து ஓட்டிச செல்வது...ஊருக்கு வரும் சிற்றுந்துடன் போட்டிப் போட்டு விஜய் சேதுபதி கார் ஓட்டும் காட்சிகள்....பண்ணையாருக்கு விஜய் சேதுபதி கார் ஓட்ட சொல்லித்தரும் காட்சிகள்... அழகான கிராமம் ஓடு மேய்ந்த வீடுகள் என்று...

vijaysethupathy


விஜய் சேதுபதி-இவர் படத்தில் வரும் பத்மினி கார் ஓட்டுனர் பண்ணையாருக்கும் அவரது மனைவிக்கும் மகன் போன்ற உணர்வையும் காதலியிடம் மென்மையான நளினமும் கோபமும் பிரதிபலிப்பதும்..இப்படி நடிப்பின் பல்வேறு பரிணாமங்கள் காட்டி நடித்துள்ளார் இப்படத்தின் மூலம் எந்த இமேஜும் பார்க்காமல் மீண்டும் விஜய் சேதுபதி-நான் நடிகன்டா...என்று நிருபித்துள்ளார்

பண்ணையார் வைத்திருக்கும் பத்மினி கார் உரிமையாளரின் மகளாக  வரும் சினேகா கொஞ்ச நேரமே தோன்றினாலும் கதையின் திருப்பமாக இருக்கின்றார் பண்ணையாரின் மகளாக வருபவரின் நடிப்பும் பரவாயில்லை பீடையாக வரும் பாலசரவணன் வாயைத் திறந்தாலே சிரிப்பு.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் படத்தின் பாடல்கள் அத்தனையும் காதுக்கு இனிமை........ கவிஞர் வாலியின் வார்த்தைகளில் வரும்..........உனக்காக பிறந்தேனே....எனக்காக பிறந்தாயே...இரண்டும் நெஞ்சில் நிற்பவை 

உங்களுக்கு நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்,அட்டக்கத்தி...போன்ற படங்கள் பிடிக்கும் என்றால்.....பண்ணையாரும் பத்மினியும் படமும் பிடிக்கும்..

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1