google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆதியும் அந்தமும்-சினிமா விமர்சனம்

Friday, March 14, 2014

ஆதியும் அந்தமும்-சினிமா விமர்சனம்


வாவ்...ஹாலிவுட் திகில் திரைப்படங்களை மிஞ்சும்  சிறந்த திரைக்கதை, இயக்கம்,ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு... என்று பிச்சா பட வரிசையில் இன்னுமொரு அட்டகாசமான உளவியல் திகில் திரைப்படம்......ஆதியும் அந்தமும் 

 ஊட்டி ரயில் நிலையத்திற்கு வரும்   டாக்டர் கரன் (கோலங்கள் அஜய்) என்ற உளவியல் பேராசிரியர் -மனநல மருத்துவர்  அங்குள்ள   ஒரு மனநல மருத்துவக் கல்லூரியில் வேலைக்கு சேர்வதுபோல் படம் துவங்குகின்றது...

கல்லூரியில் தொலைகாட்சி ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக வரும் ஷாலினியிடம்   டாக்டர் கரன்  தான் ஒரு ஆவியை தினமும் இரவில் சந்திப்பதாகவும் இங்கே கல்லூரி டீன் மற்றும் வேலையாட்களின்  நடவடிக்கைகள் மர்மமாக இருப்பதாகச்   சொல்வதும் என்றும் இன்னும் பாழடைந்த கல்லூரி லேப்,மெமோரியல் ஹால்... என்று நிறைய திகில் காட்சிகளுடன் படம் காட்டப்பட்டு......ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போய்விடுகின்றார்... 

அதனால் ஷாலினி கல்லூரி டீனுடன் விவாதம் செய்வதுடன் இடைவேளை....... பார்வையாளர்களுக்கு  பயங்கரமான எதிர்பார்ப்பு. இடைவேளைக்குப் பிறகு உண்மையில் டாக்டர் கரன் யார்..? ஆவியாக வரும் பெண் பிரியா யார்...? அவளுக்கும் டாக்டருக்கும் என்ன தொடர்பு...? காணாமல் போன டாக்டர் மீண்டும் வந்தாரா...? என்ற ஆதியும் அந்தமுமான மர்மத்தை காதல் காட்சிகளுடன் உணர்வுப்பூர்வமாகவும் யதார்த்தமாகவும் விவரிக்கின்றது.......ஆதியும் அந்தமும் திரைப்படம் 

சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்திருக்கும் அஜய்....முகத்தில் பயம், சோகம்,விவேகம்...என்று பலவித அபாரமான நடிப்பு பரிமாணங்கள் சைக்கியாரிஸ்ட் டாக்டராக கச்சிதமாகப் பொருந்துகின்றார்...அவருக்கு நாயகிகளாக வரும் மிட்டாலி அகர்வால்,கவிதா ஸ்ரீனிவாஸ்  இரண்டு நடிகைகளும் கதாப்பாத்திரங்களாக  ஜீவிக்கின்றார்கள் 

படத்தின்  மிகப்பெரிய சிறப்பு டி.எஸ்.வாசனின் போட்டோகிராபி... காட்சிக்கு காட்சி ஊட்டியை  அற்புதமாகவும் அழகாகவும் அதே நேரம் இரவு நேர திகிலூட்டும் காட்சிகளின் ஒளிப்பதிவும் அருமை  பாடல் காட்சிகள் ஊட்டி இயற்கையின் குளுமையை  படம் காட்டுகின்றது

அப்படித்தான் எல்.வி.கணேசனின் துல்லியமான ஒலிப்பதிவு.... திகிலூட்டும் பின்னணி இசை.....பாடல்களும் அருமை  அதிலும் டாக்டர் கரன்-பிரியா காதல் பாடல் பெண்ணே...பெண்ணே.... காதுக்கு இனிமையான மெலோடி 

தமிழ்  திரையுலகுக்கு நல்ல வரவு இயக்குனர் கௌஷிக்.....படத்தின் முதல்பாதி முழுவதும் காட்சிக்கு காட்சி ட்விஸ்ட்வுடன்  திகிலூட்டும் மர்ம முடிச்சுக்கள்  பின் பாதி  தெளிவாகவும் குழப்பமில்லாமலும் அந்த மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதும் ....கிளைமாக்ஸில்   பிரியாவின் கருணைக்கொலை மரணக்காட்சி அதனால் டாக்டர் கரனுக்கு உண்டாகும் புத்தி பேதலிப்பு......கடைசியில் டீன் ஷாலினியுடன் பேசும் நெஞ்ச தொடும் வார்த்தைகள் (என் மகனைப் பற்றி உங்க ரியாலிட்டி ஷோவில் எதையும் காட்டாதீங்க...) மிகவும்   அருமையான முடிவு

ஆதியும் அந்தமும்-திகில்  திரைப்பட ரசிகர்களுக்கு நல்ல 
விருந்து....காணத்தவறாதீர்கள் (இதய நோயாளிகள் தவிர்க்கவும்..)


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1