google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜேம்ஸ் கேமரூன் கோச்சடையானைப் பார்த்தால்...?

Thursday, March 13, 2014

ஜேம்ஸ் கேமரூன் கோச்சடையானைப் பார்த்தால்...?


எல்லோரும் கோச்சடையான் படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டு ஆகா..ஓகோ என்று பாராட்டும் போது........ஒரு  வலைதளத்தில்  வச்சான் பாரு ஆப்பு-கோச்சடையான் தேறுமா? என்று.........

கோச்சடையான்  டிரெய்லர் இரண்டே நாட்களில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தாண்டி வெற்றிகரமாக... அதேநேரம் அந்த டிரெய்லர் படக்காட்சியை வைத்து ஏழு காரணங்கள் கணித்து சொல்லப்படுகின்றன கோச்சடையான் படம் தேறாது... ஏன்? எதற்கு? எப்படி?  என்று....
1-ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்கள் ரஜினிகாந்த்,தீபிகா படுகோன்,சரத்குமார்,நாசர்..போன்றவர்களை  3-D மாடல்களில் காண்பதற்கு மிகவும் ஆவலுடன் இருப்பார்கள் ஆனால் ஒரு 3-D மாடல் அனிமேஷன் படத்திற்கான அடிப்படை அம்சமான உருவ ஒற்றுமை எதுவும் இல்லை (அவதாரில் கற்பனை கதாப்பாத்திரங்கள் மட்டுமே இந்த தொழில் நுட்பத்தில் படம் காட்டப்பட்டது)

2-மாபெரும் இராணுவ போர் காட்சிகளை பிரமாண்டமான பின்னணி இசையுடன் காட்டும் இந்த கொஞ்ச நேர டிரெய்லர் காட்சி ரசிகர்களை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை அதேநேரம் மிக நெருக்கமாக காணும்போது வலது-இடது பக்க ராணுவ வீரர்கள் ஒரே மாதிரி உருவத்துடன் நிறைய பேர் இருப்பது  ஒரே உருவத்தை காப்பி & பேஸ்ட் செய்து பல உருவன்களாய் காண்பித்து  நாம்  3-D யில் தொடர்ந்து பார்க்கும் போது நமக்கு எரிச்சலை உருவாக்கும் காட்சிகளாய் தெரியும்......(அவதாரில் வேற்று கிரகவாசிகள் எல்லோரும் ஒரே உருவத்தில் இருந்தது ஆச்சரியமில்லை....) 

3-பார்வையாளர்கள் ரஜினிகாந்தின் பேச்சு-செயல்களில் மணம் மயங்கினாலும் அவரது செயல்-இயக்கப்   பாணி (style)  ஏதோ எலும்பில்லாத ரப்பர் பொம்மை போல் உள்ளதாகவும்  மோஷன் கேப்சர்  தொழில் நுட்பத்தின் முக்கிய அம்சமான (Bones of the 3D character) இதை  கொஞ்சமும் கடைபிடிக்கப் படவில்லை என்பதை இது காட்டுகிறது....

4-எளிதாக அனிமேஷன் செய்ய இயலாத இடங்களில் மட்டுமே மோஷன் கேப்சர்  தொழில் நுட்பம் சிறப்பாக பயன்படும் அந்தவகையில் உருவங்களின் முக தசை அசைவுகள் எதுவும் இங்கே கேப்சர் செய்யப்படவில்லை எல்லா கதாப்பாத்திரங்களும் தட்டையான தோற்றத்தில் எந்த உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் காட்டப்படுகின்றன 
5-மோஷன் கேப்சர்  தொழில் நுட்பத்தின் முக்கிய 12 விதிகளில் ஒன்றான (Squash and stretch) மிகைப்படுத்தப்பட்ட அனிமேஷன் இயக்கம் சரியாக பயன்படுத்தவில்லை கதாப்பாத்திர இயக்கங்களின் வேகத்திற்கு இணையாக அதன் வடிவம் எவ்வித யதார்த்தமான சிதைவும் ஆகாமல் காட்டப்படவில்லை

6-ஒரு சாதாரண மனிதன் ஒரு நிமிடத்தில் 20 முதல் 30 தடவைகள் கண்ணிமைப்பது இயல்பு ஆனால் ரஜினிகாந்த் பஞ்ச் வசனம் பேசும் போது ஒரு முறையும் கண்ணிமைக்கவில்லை இது 4 செகன்ட்  டிரெய்லர் என்று சமாதானம் கொண்டாலும் முழு படத்திலும் கண்ணிமைத்தல் சரியான அளவு பின்பற்றப்படவில்லை எனில் படம் கேளிக்கைக்குரியதாகும் 

7-முன்னோட்ட காணொளியில் ஒரு காட்சியில் கோச்சடையான் தன் முதுகில் ஐந்து தலை நாகம் படத்தை பச்சை குத்தியுள்ளது போல் காட்டப்படுகின்றது அதுவும் எவ்வித தெளிவு இல்லாமல் சிறு பிள்ளை கிறுக்கலாக உள்ளது...அந்த காலத்தில் ஒரு மன்னர் தன் முதுகில் இந்த காலத்து வாலிபர்கள் போல் பச்சை குத்தும் வழக்கம் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை கெடுக்கின்றது.....

இதைப் படிக்கும் போது....... எப்படியெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு விமர்சகர்கள் ஆராய்ச்சி செய்கின்றார்கள் அய்யோ...பாவம் கோச்சடையான் என்ன ஆகப்போகிறதோ...? 

இந்த அளவுக்கு நம்ம தமிழ் ரசிகர்கள் தங்கள் சூப்பர் ஸ்டார் படத்தை ஆராய்ச்சி செய்யமாட்டார்கள் அதனால் இங்கே கோச்சடையான் வெற்றி உறுதி...ஆனால் 12 மொழிகளில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் படம் காட்டப் போகின்றார்களே அதை நினைக்கும் போதுதான் அய்யோ...பாவம் உலக சினிமா ரசிகர்கள் 

இதே தொழில் நுட்பத்தில் 1500 கோடி செலவில் வந்த அவதார்  பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த 125 கோடி மலிவு விலை அவதார் கோச்சடையானை பிரத்தியேகமாக பார்க்கப் போகிறார்...அய்யோ பாவம் என்ன ஆகப்போகிராரோ? 

இனிமேல் படம் நடிக்க மாட்டேன் என்று நம்ம சூப்பர் ஸ்டார் சொன்னதுபோல் இனிமேல் ஹாலிவுட்டில் சினிமாவே எடுக்கமாட்டேன்....கோலிவுட்டுக்கு வந்துவிடுவேன் என்று அவர் சொன்னாலும் ஆச்சரியமில்லை.........


போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் இந்தியாவின் முதல் புதுமைப் படைப்பான கோச்சடையான் மூலம்  புரட்சி பெண் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் வெற்றி பெற வாழ்த்துவோம்.................

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1