google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இனம்-ப்ரிமியர் ஷோ விமர்சனங்கள்...?

Thursday, March 27, 2014

இனம்-ப்ரிமியர் ஷோ விமர்சனங்கள்...?

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பத்திரிகையாளர்கள்  மற்றும் திரையுலக பிரமுகர்களுக்கு ப்ரிமியர் ஷோவில் காண்பிக்கப்பட்ட நாளை வெளிவரும் இனம் படம் பற்றிய விமர்சனங்கள்..........

இறுதிப்போரில் இறந்த தமிழர்களுக்குச் சமர்ப்பணம் என்று சொல்லி வெளியிடப்பட்டிருக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளையும் ஈழப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.......என்று கொதிக்கின்றது தமிழ் உலகம் வலைதளம் 

இது இனமா... ராஜபக்சேவின் பணமா? இப்படித்தான் கேள்வி எழுப்பியுள்ளனர் இனம் படத்தைப் பார்த்த தமிழ் உணர்வாளர்கள் பலரும்....... என்கின்றது ஒன் இந்தியா தமிழ் வலைதளம் 

சிங்களப்பேரினவாதம், தம்மால் இயன்றஅளவு கைக்கூலிகளை வைத்து தமிழினத்துக்கு எதிரான செயல்களைச் செய்துகொண்டேயிருக்கிறது. அரசியல் தளத்தில் மட்டுமின்றி கலை, இலக்கியத் தளங்களிலும் தமிழினத்துக்கு எதிரான போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.. என்று சீறுகின்றது திசைக்காட்டி வலைதளம் 

அதேநேரம்  இனம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் அதுவே அப்படத்திற்கு ஓசி விளம்பரமாக ஆனாலும் ஆகும் என்று தமிழ் இன உணர்வாளர்கள் வருந்துவதாக தெரிவிக்கின்றது...தினமலர் வலைதளம் 


யுக குணா@yuga_guna 
இனம் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழர்களுக்கும் தமிழினத்திற்க்கும் எதிராக எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் 

வேடதாரிகள்! பராக் !!@PandiduraiV 
“இனம் ” ஈழத்தமிழர்களை தூக்கி நிறுத்தவில்லை : தாக்கி மிதிக்கிறது !!!

InduMahan@Indu_Mahan 
மலையாளத்தான் சிங்களங்கிட்ட யும் ,காங்கிரஸ்கிட்டயும் பணம் வாங்கிட்டு *இனம்* படம் தமிழனுக்கு எதிராக எடுத்துட்டான். அத நமக்கே காட்றான்

RAஜேSH!!!!@mylairajesh 
இனம் படத்துக்கு ராஜபக்சே தயாரிப்பாளருன்னு கேள்வி படுறேனே உண்மையா!!??

ஆனால்   சினிமாக்காரர்கள் அனைவரும்....


 

இப்படத்தின் மூலமாக தமிழர் படுகொலை செய்யப்பட்டதை காட்டியதாக தயாரிப்பாளர் லிங்குசாமியையும் இயக்குனர் சந்தோஷ் சிவனையும் டுவிட்டர்,முகநூல் சமுக வலைதளங்களில் பாராட்டுகின்றார்கள்...


ஏதேனும் தீர்வு இல்லாமல் இதுபோன்று உண்மை நிகழ்வுகளை திரையில் படம் காட்டுவதும் முடிந்து போன  துயரத்தை நினைவுபடுத்துவதும்.....  யாருக்கு என்ன பயன்?

படம் காட்டுவோருக்கு தவிர........

******************************************************************
விரைவில்...........
******************************************************************






 



நெடுஞ்சாலை-சினிமா விமர்சனம் 




 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1