பாசம்,காதல்,நட்பு,துரோகம்...போன்றவைகளை பிரமிப்பூட்டும் காட்சிகளாக காட்டி படம் பார்ப்போருக்கு புல்லரிக்கும் ஒரு வித்தியாசமான த்திரிலிங் அனுபவத்தை தருகின்றது....இயக்குனர் கிருஷ்ணாவின் நெடுஞ்சாலை திரைப் படம்
நெடுஞ்சாலையில் பயணிக்கும் டில்லி செல்லும் லோடு லாரியில் ஒரு முதியவர் தன் கூட்டாளி தார்ப்பாய் முருகன் என்ற ரோடு கொள்ளையனின் வாழ்க்கை .பற்றிய பிளாஷ்-பேக் காட்சிகளாக படம் நகர்கின்றது....
தார்ப்பாய் முருகன் (ஆரி) தன் கூட்டாளிகள் கோழி,குரு,சேட்டு மூவருடன் நெடுஞ்சாலையில் வரும் லாரிகளில் உள்ள சரக்குகளை கொள்ளையடித்து வாழ்கின்றான் அவர்களுக்கு ஒரு மலையாள சேட்டன் (சலீம் குமார்) முதலாளி
அதே நெடுஞ்சாலையில் ரோட்டோர தாபா ஓட்டல் நடத்தும் மலையாளி பெண் மங்கா (ஷிவிதா) வுக்கும் அவனுக்கும் சிறு சிறு மோதலுடன் பிறகு தீவிர காதல் வருகின்றது
ஆனால் அவர்கள் காதலுக்கு வில்லனாகவும் மங்காவை தந்திரமாக அடைய நினைக்கின்றான் நெடுஞ்சாலையில் உள்ள காவல்நிலைய கஞ்சா இன்ஸ்பெக்டர் மாசாணமுத்து (பிரசாந்த் நாராயணன்)
அதனால் மாசாணத்துக்கும் முருகனுக்கும் பயங்கர மோதல் உண்டாகின்றது இன்ஸ்பெக்டர் மாசாணமோ முருகனை கொள்ளையனாக சித்தரித்து பழிவாங்க நினைக்க....முருகனோ கலெக்டர் உதவியுடன் மணம் திருந்தி வாழ நினைக்கின்றான்
மணம் திருந்திய கொள்ளையன் தார்ப்பாய் முருகன்-தாபா மங்கா காதல் என்ன ஆனது....? என்பதை படம் நெடுஞ்சாலையில் நடப்பதால்... பல எதிர்பாராத நிறைய திருப்பங்களுடன் திரிலிங்காக படம் காட்டுகின்றார் இயக்குனர் கிருஷ்ணா
படத்தின் ஆரம்பம் முதலே கடைசி வரை தார்ப்பாய் முருகன் பற்றிய கதை மின்னல் வேகத்தில் பயணிக்கின்றது.....புதுவிதமான கதைக்களம் என்பதால் நம்மையும் படத்தோடு முழு வேகத்தில் பயணிக்க வைக்கின்றது படத்தில் நெடுஞ்சாலையில் வரும் கர்னாடக ராயரின் சந்தனக்கட்டைகள் மற்றும் கள்ளப்பணம் நாலு கோடியை தார்ப்பாய் முருகன் கொள்ளையடிக்கும் காட்சிகள் படு பயங்கரமாக பிரமிப்பூட்டுகின்றது.
படத்தின் நாயகனாக வரும் ஆரி... முழுப்படத்தையும் ஆக்கிரமித்து தன் இயல்பான நடிப்பால் அசத்துகிறார். நாயகி ஷிவிதா உடையிலும் நடையிலும் மலையாள அழகு...நம் கண்ணைப் பறிக்கின்றாள்....
தாபா மாஸ்டர் தம்பி ராமையா காமெடி ஒருபக்கம் குணச்சித்திரம் ஒருபக்கம் என்று பின்னுகின்றார் முதலாளி சேட்டன் நடிகரின் விரசமான மலையாள காம குட்டி காமெடியை இயக்குனர் தவிர்த்திருக்கலாம் கஞ்சா இன்ஸ்பெக்டராக வரும் பிரசாந்த் நாராயணன்....பாராட்டப்படவேண்டிய கொடூரமான நடிப்பு
சத்யாவின் பின்னணி இசை தத்ரூபமாக ஒரு நெடுஞ்சாலையின் ஓசையை நமக்கு ஊட்டுகின்றதுபாடல்களில் நண்டூருது...குத்துப்பாடலும் இவன் யாரோ...பேண்டஸி பாடலும் தாமிரபரணி...காதல் மெலோடியும் மனதில் நிற்கின்றது
ராஜவேலுவின் ஒளிப்பதிவில் பாடல்கள் கண்ணுக்கு குளுமை என்றால் நெடுஞ்சாலையில் நடக்கும் நள்ளிரவு கொள்ளைக் காட்சிகள், தாஜ்மகால் பின்னையில் ஆக்ரா காட்சி,இன்னும் பல நம் மனதையும் கொள்ளைக் கொள்கின்றன...
மொத்தத்தில் இயக்குனர் கிருஷ்ணா நெடுஞ்சாலை படத்தின் மூலம் நெடுஞ்சாலையில் 1980 காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் யதார்த்தமான வாழ்வை நம் கண்முன் காட்சிகளாகக் காட்டி புதுவித பயண அனுபவத்தை படைக்கின்றார்.........
விபத்தில்லாத திரைக்கதை,இயக்கம், பாடல்கள்..என்று சீராக உள்ள நெடுஞ்சாலை-யில் ஒரு வெற்றிப் பயணம் போய்வாருங்கள்
நெடுஞ்சாலை- இதுவரைநம் தமிழ் சினிமா பயணிக்காத புதிய சாலை
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....நெடுஞ்சாலையில் பயணிக்கும் டில்லி செல்லும் லோடு லாரியில் ஒரு முதியவர் தன் கூட்டாளி தார்ப்பாய் முருகன் என்ற ரோடு கொள்ளையனின் வாழ்க்கை .பற்றிய பிளாஷ்-பேக் காட்சிகளாக படம் நகர்கின்றது....

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |