google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தெகிடி-பிட்சா நெடி....செம கடி

Wednesday, March 05, 2014

தெகிடி-பிட்சா நெடி....செம கடி

இப்படி ஒரே மாதிரி பிட்சா-புட்டியில் விதவிதமாக சரக்குகளை அடைத்ததால் எதுவும் புதுமையாக தெரியவில்லை....  தெகிடி
thegidi

தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு டிடக்டிவ் ஏஜென்ட் வேலைக்கு வருகின்ற வெற்றி (அசோக் செல்வன்) க்கு கொடுக்கப்படும் குறிப்பிட்ட நபரைப் பற்றிய ரகசிய நடவடிக்கைகளை சேகரிக்கும் வேலை.......அப்படி மதுஸ்ரீ (ஜனனி) பற்றி தகவல் சேகரிக்கப் போகும் வெற்றிக்கு அவள் மீது காதல்....

திடீரென்று இவர்  தகவல் சேகரித்து கொடுத்தவர்கள் வரிசையாக ஒரே மாதிரி விபத்தில் சாகின்றார்கள்.....அதனால் வெற்றி மதுஸ்ரீயை காக்க போராடுகின்றார்.ஏன் அவர்கள் சாகிறார்கள்? என்று வெற்றி கண்டுபிடித்தாரா...? தன் காதலியைக்  காப்பாற்றினாரா...?    என்பதே கதை..

அசோக் செல்வன் நடிப்பில் எந்த மெருகும் இல்லை ஆரம்பத்திலிருந்தே எதையோ இழந்து விட்டவராக ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு இருக்க.... ஜனனியும் கிடைத்த பாத்திரத்தில் முடிந்தவரை நடிக்க முயற்சி செய்ய......ஜெயபிரகாஷ் மட்டுமே இடைவேளைக்குப் பிறகு காவல் அதிகாரியாக வந்து படத்தை விருவிருப்பாக நகர்த்துகின்றார்.......

இயக்குனர் ரமேஷ்.......பாராட்டப் படவேண்டியவர்தான் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் ஒரு திகில் கதையை  படம் காட்ட........நல்ல முயற்சி ஆனால் அந்த கோடி ரூபாய் இன்சூரன்ஸ் மேட்டர்... சுத்தமாக லாஜிக் இல்லாமல் காட்டிவிட்டு அதற்கு விளக்கம் கொடுக்க முயல்வது போர்........கதாப்பாத்திரங்களின் அறிமுகம் நமக்கு படத்தின் தன்மையை ஊகிக்க வைக்கின்றது...

இப்பலாம் தமிழ் சினிமானா எங்கேயாவது ஒரு கிராமத்தில போய் இரண்டுமாசம் டென்ட் போட்டு தங்கி நாலு பாட்டு இரண்டு சண்டை கவர்ச்சியா ஒரு குத்தாட்டம், வெளிநாட்டுல இரண்டு பாட்டு, விரசமா கொஞ்சம் காமெடி,அப்படியே டாஸ்மாக் நெடி வீச....அப்பாடா மாஸ் படம் ரெடி இனி தியேட்டர்ல படம் காட்டி ஆகா ஓகோன்னு கூப்பாடு போட்டு படம் வெற்றின்னு கேக் வெட்டி திங்கவேண்டியதுதான்.....

ஆனாலும்.........

இப்படிப்பட்ட தமிழ் சினிமாவில்  ரொம்ப அறிவாளிகளுக்கு எடுக்கப்படும் அறிவுஜீவி படமாக வரும் தெகிடிகள் படம் பார்ப்போரின் தலையில் கொட்டப்படும் குப்பைகள்........

படம் ஆரம்பிக்கும் போது முதலில்  அப்பாவியாக....நல்லவராக...பாசம் உள்ளவராக....ஒருவரை காட்டுவாயிங்க....அப்புறம் நிறைய பேர சாகடிச்சு.... யார் கொலைகாரன்...? என்பாயிங்க....கடைசியில்  முதலில் காட்டிய நல்லவர்தான் கொலைகாரர் என்பாயிங்க...ப்ப்ப்பா.... 

இப்படி ஒரே மாதிரி பிட்சா-புட்டியில் விதவிதமாக சரக்குகளை அடைத்ததால் எதுவும் புதுமையாக தெரியவில்லை....  தெகிடி


நீங்கள்  படம் பார்த்தவர்களாக இருந்தால் உங்கள் பார்வையில்.........
தெகிடி....திரைப்படம் எப்படியிருக்கு...?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி.....முடிவு-12/3/2014
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1