google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அது வேற இது வேற-சினிமா விமர்சனம்

Friday, May 30, 2014

அது வேற இது வேற-சினிமா விமர்சனம்

டார்க் காமெடி அப்படி இப்படி என்று எத்தனையோ காமெடி படம் பார்த்திருப்பீங்க அது வேற இது வேற........
இது முன்பாதி அய்யோ கொல்லுறாயிங்களே ரகம் பின்பாதி அய்யயோ சிரிக்க வச்சு கொல்லுறாயிங்களே ரகம்...பேக் (FAKE) காமெடி

கிராமத்திலிருந்து சமுக போராளி தாதாவாக மாறவேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வரும் ஒரு தத்தி வாலிபன் செய்யும் கோமாளித்தனங்களை சில நேரம் நம்மை சிரிக்க வைத்தும் நிறைய  நேரம் அவர்களே சிரித்தும் நமக்கு படம் காட்டுகிறார் இயக்குனர் திலகராஜன் 

நாயகன்,பாட்ஷா படங்கள் பார்த்து தாதா பைத்தியமான குருசாமி (வர்ஷன்) சென்னையில் உள்ள சித்தப்பா காமெடி போலிஸ் இமான் அண்ணாச்சியின் ஐடியாபடி.....

ஒரு பைனான்ஸ் கம்பெனி அதிபர் யானை ஈஸ்வரன் கொலையை தான்தான் செய்ததாக குருசாமி ஒப்புக்கொண்டு பெரிய தாதாவாக சிறைக்கு செல்கிறான் 

கொஞ்சம் அறிவாளியான குருவின்  காதலி சானியா தாரா சிறையில் குருவை சந்தித்து அவனது முட்டாள்தனத்தை எடுத்துரைத்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விடுதலை ஆக வலியுறுத்துகிறாள்

குரு சிறையிலிருந்து தப்பித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தானா....? என்பதை ஒரு காமெடி ட்விஸ்ட் வைத்து கலகலப்பு ஊட்டுகிறார் 

வடிவேலு,சந்தானம்,விவேக்,சூரி...போன்ற பெரிய காமெடி நடிகர்கள் யாரும் இல்லாமல் இமான் அண்ணாச்சி,கஞ்சா கறுப்பு,பொன்னம்பலம்,சிங்கமுத்து..உட்பட இன்னும் இருக்கும் நண்டு சிண்டு காமெடி நடிகர்கள் அனைவரையும் வைத்து துணுக்கு காட்சிகளாக நம்மை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள் 

படத்தின் சிரிக்க வைக்கும் அல்லது சிரிக்க வைக்க முயலும் காட்சிகளாக.....

-நாயகன் வர்ஷன் சானியாதாராவை விளம்பர ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆலமர விழுதில் தொங்கி காப்பாற்றும் காட்சி..அவ்வப்போது அது வேற இது வேற என்று நாயகன் போடும் ஆட்டம்.....ம்..

-தோசை மாஸ்டராக வரும் மொக்கை ராசு (கஞ்சா கருப்பு) குருவுக்கு ஐடியா கொடுத்து அரசியல்வாதி சிங்கமுத்து அலப்பறைக்கு முடிவு கட்டும் காட்சி...

-போலிஸ் இமான் அண்ணாச்சி திருநெல்வேலி ஓட்டலில் தோசை வாங்கிவர பிக்பாக்கெட் குற்றவாளியிடம் பணம் கொடுத்து அனுப்பும் காட்சி....

-துப்பறியும் ஏஜெண்டாக வரும் தளபதி தினேஷ் அவரது அடியாள் கூட்டமும் குருவை விரட்டிப் பிடிக்கும் மொக்கை காட்சிகள் 

-கவர்ச்சி நாயகி ஷகிலா புதுப்பொழிவுடன் திரையில் கற்புக்கரசிகள் அமைப்பு தலைவியாக தோன்றும் ஜொள்ளு காட்சிகள் 

-அய்யப்பசாமியாக வரும் ஜெயிலர் பொன்னம்பலம் ஜெயிலில் செய்யும் காமெடி கலாட்டாக்கள்

-கிளைமாக்சில் யானைஈஸ்வரன் ட்விஸ்ட்டும் வயாகரா பாம் வெடித்து அனைவரும் காம ஆட்டம் போடும் ஜொள்ளு பாடல் காட்சிகள்...

இப்படி நிறைய காட்சிகள் ஜொள்ளு வடிந்தாலும்  ஆபாசம் இல்லாமல்  படம் காட்டப்படுகிறது 

தாஜ்நூர் இசையில் நா.முத்துகுமார் வார்த்தைகளில் பாடல்கள் வேறு மாதிரி...ரசிக்கவும் முடியவில்லை வெறுக்கவும் முடியவில்லை ஆனால் இம்சை அதேநேரம் ஐயப்பன் பாடல் அருமை 

ரவிசங்கர் ஒளிப்பதிவில் பாடல்கள் பார்க்க நன்றாக உள்ளது கிளைமாக்ஸ் காட்சில் வரும் தும்மல் பாம்,கிச்சு கிச்சு மூட்டும் பாம்,வயாகரா பாம் அனிமேஷன் காட்சிகள் அட்டகாசம் 

முழுக்க முழுக்க படம் பார்ப்பவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற லட்சிய வெறியுடன் இயக்குனர் திலகராஜன் எழுதி இயக்கியுள்ள படம்
நீங்க டார்க் காமெடி அப்படி இப்படி என்று எத்தனையோ காமெடி படம் பார்த்திருப்பீங்க ஆனால் அது வேற இது வேற........உண்மையிலே இது வேற 


adhuvera

உங்களுக்கு நேரம்,சூது கவ்வும், யாமிருக்க பயமே...போன்ற பைத்தியக்காரத்தனமான (senseless) அறிவற்ற காமெடி படங்கள் பிடிக்கும் என்றால் இதுவும் பிடிக்கலாம்........ஆனாலும்  அது வேற இது வேற  அத மறந்திடாதீங்க........இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1