google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மணிரத்னம் ஒரு வெற்றிப்பட இயக்குனரா?

Monday, June 02, 2014

மணிரத்னம் ஒரு வெற்றிப்பட இயக்குனரா?



இந்திய திரைவானில் ஒரு முன்னணி இயக்குனராக போற்றப்படும் மணிரத்தினம் படங்களில் ஒரிஜினாலிட்டி இருக்கின்றதா? ஒரு தலைமுறையே போற்றிய கலைஞர் மணிரத்னம் உண்மையில் ஒரு வெற்றிப்பட இயக்குனரா?

யாரிடமும்  உதவியாளராக இல்லாமல் அறிமுக இயக்குனராக அவர் இயக்கிய பல்லவி அனு பல்லவி கன்னட படமும் உணரு மலையாள படமும் பகல் நிலவு தமிழ் படமும் மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது

ஆயினும் தோல்விகள் தந்த பாடத்தை கற்றுக்கொண்ட இயக்குனர் மணிரத்தினத்தின் பின்னர் வந்த அனைத்துப் படங்களும் அவருக்கு பல வெற்றிகளை கொடுத்தது....

அவரது  மௌன ராகம் அவரை திரைவானில் ஓர் உன்னத இடத்தில் வைத்தது அவரது கீதாஞ்சலி அவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது.அவரது ரோஜா,பம்பாய்,தில் சே..படங்கள் அவரை வெற்றிப்பட இயக்குனர் வரிசையில் உயர்த்தியது.

மணிரத்தினம் தமிழ் வெள்ளித்திரையில் வரைந்த சினிமா ஓவியங்கள அவரை இந்தி(ய) திரைவானிலும் வெற்றி இயக்குனராக உலா வரச்செயதது.அவரது நாயகன்,அஞ்சலி திரைப்படங்கள் வேற்று மொழிக்கான ஆஸ்கார்  விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பெருமையை பெற்றது

டைம் இதழின் உலகின் சிறந்த 100 படங்கள் வரிசையில் இடம்பிடித்த ஒரே தமிழ் படம் அவரது நாயகன் என்பது தமிழ் திரையுலகுக்கு பெருமை

யாரிடமும் உதவியாளராக இருந்திடாத பத்மஸ்ரீ விருது பெற்ற இயக்குனர் மணிரத்தினம் பல சிறந்த ஒளிப்பதிவாளர்கள், பல சிறந்த இசையமைப்பாளர்கள், பல கதை-வசனகர்த்தாக்கள், பல சினிமா தொழில்நுட்ப வல்லுனர்கள் உருவாக காரணமாக இருந்தார்...இருக்கிறார்

ஆயினும் 

மணிரத்தினத்தின் படைப்புகளில் ஒரிஜினாலிட்டி இல்லை என்போர் உண்டு
அவரது நாயகன் படம் மும்பை தாதா வரதராஜா முதலியார் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மும்பையில் நடந்த இனக்கலவரத்தை அடிப்படையாக கொண்டது அவரது பம்பாய் திரைப்படம்

இருவர் திரைப்படத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி-எம்ஜிஆர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் பற்றியது.

ஸ்ரீலங்கா சிவில் வார் பற்றிய அவரது கண்ணத்தில் முத்தமிட்டால்...படமும் மாணவர் புரட்சி பற்றிய நிகழ்வுகள் சார்ந்த ஆயித எழுத்து படமும் என்றால் அவரது குரு படம் திருபாய் அம்பானி வாழ்க்கை பற்றியும் படம்காட்டியது

இதிகாச கதைகளையும் அவர் விட்டுவைக்கவில்லை அவரது தளபதி படம் மகாபாரதத்தில் வரும்  கதையையும் ராவணன் படம் ராமாயண உல்டாவாகவும் இருந்தது ஆனாலும் அதில் உள்ள நட்பு உறவு முறைகளை மட்டுமே பிரதிபலித்தது அவரது கடல் படத்திற்கு விமர்சனம் எழுதிய விமர்சகர்கள் அவர் ஒய்வு பெற வலியுறுத்தினர் 

அவரது சமீபத்திய படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவுகின்றன
ஒரு தலைமுறை ரசிகர்களை புரட்டிப் போட்ட கலைஞனால் இன்றைய தலைமுறை அதீத நாகரீக சினிமா ரசிகர்களை புரிந்துகொள்ள முடியவில்லையோ...?

இன்று பிறந்தநாள் கொண்டாடும்இயக்குனர் மணிரத்தினத்திற்கு நமது வலைப்பூ வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்கிறது......

************************************************************************

நாளைய சிறப்பு பதிவு...........
இன்றைய  முன்னோட்டம்......(வாக்கெடுப்பு)


இளையராஜா  Vs ஏ.ஆர்.ரகுமான்-
ஜெயித்தது யாரு?
கருத்துக்கணிப்புடன் கலக்கல் பதிவு .......வாசிக்க தவறாதீர்கள் 
இன்றே வாக்கெடுப்பில்  கலந்து கொள்ளுங்கள்........




வாக்களிக்கும் நைவருக்கும் நன்றி.....முடிவு-07-06-2014
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1