google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: God’s Own Country (மலையாளம்)-சினிமா விமர்சனம்

Wednesday, May 14, 2014

God’s Own Country (மலையாளம்)-சினிமா விமர்சனம்


மாலிவுட்டில் Traffic படத்தின் வெற்றிக்குப் பிறகு பல குட்டிக் கதைகளின் தொகுப்பாக வந்து வெற்றிப் பெற்ற படங்கள்  Babel, Amores Perros, Crash வரிசையில் வாசுதேவ் சானல் இயக்கத்தில் வந்துள்ள படம்  God’s Own Country 

ஓர் அரிய உணர்ச்சியான நாள் என்று டேக் லைன்வுடன் வந்துள்ள  God’s Own Countryபடம் ஓர் அரசு வழக்கறிஞர், ஒரு துபாய் NRI, ஒரு டாக்ஸி ஓட்டுனர் இவர்கள் மூவரும் தங்கள்  வாழ்வில் ஒரு நாள் சந்திக்கும் சிக்கலான, ஆபத்தான  நிகழ்வை படம் காட்டுகிறது 

கேரளாவில் பயங்கரமான கேங்-ரேப் வழக்கில் சம்பந்தப்பட்ட  சக்திவாய்ந்த  வில்லன் அரசியல்வாதி வக்கச்சன் (நந்து) னுக்கு எதிராக அவரது மனைவியை சாட்சியாக அன்று 3 மணிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டிய நிர்பந்தத்தில்  அரசு வழக்கறிஞர்  மதன் தரகன் (சீனிவாசன்) காரில் அழைத்துச் செல்வதும் வழியில் வக்கச்சன் ஆட்களால் உண்டாகும் தடைகளை சந்தித்து வெற்றி பெறுகிறாரா...? என்று ஒரு கதை.........

அன்றைய தினத்திலேயே...ஓர்  அபாயகரமான கார் விபத்தை தொடர்ந்து சிறையில் வாடும் தன் மனைவி ஆஷா (ஈஷா தல்வார்) வை காப்பற்ற மனு கிருஷ்ணா (பஹத் பாசில்) ஒரு பெண் எழுத்தாளர் உதவியுடன்  வரும் வழியில்  ரூ.75 லட்சம் பணத்தை தொலைத்துவிட அவருக்கு எப்படி மீண்டும்  பணம் கிடைகிறது...? என்பது இரண்டாவது கதையாகவும்...............

அன்றைய தினத்திலேயே... முகமது (லால்)  டாக்சி ஓட்டுனர் தன் மகள் அவசர சிகிச்சைக்காக தனது சக்திக்கு மீறிய பணம் ரூ.6 லட்சத்தை எப்படி புரட்டுகிறான்...? என்பதை மூன்றாவது கதையாக.......

இப்படி  மூன்று பேர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை முற்பாதியில் ஸ்லோவாக காட்டினாலும் பிற பாதியில் மின்னல் வேகத்தில் விறுவிறுப்பாகவும் த்திரிலாகவும் நிறைய காட்சிகளாளும் .இன்னும் நிறைய சின்ன சின்னக் கதாப்பாத்திரங்களாலும்  படம் காட்டுகிறார் இயக்குனர் 

நடிகர்கள்  சிறப்பாக நடித்திருந்தாலும் ஒரு த்திரிலர் படத்துக்கு உரிய சஸ்பென்ஸ் இடைவேளை வரை இழுத்துச் செல்வதால்....பார்வையாளர்கள் (என்னோடு சேர்த்து பத்து பேர்) பரிதாபமாக அரங்கில் மோட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிலை.........

அப்புறம் இது அரதப் பழசான கதை என்பதாலும் நாம் ஊகிக்க முடியும் சஸ்பென்ஸ் (டாக்ஸி ஓட்டுனர்  சாலையில் மயங்கி விழுவரை காப்பது,  விபச்சாரி+ ஆட்டோ ஓட்டுனர் கையில் கிடைக்கும் மனுவின் பணத்தை பாஸ்போர்ட் பார்த்து ஒப்படைப்பது) இப்படி நிறைய கொசுக்கடி தாங்க முடியவில்லை படம்  விட்டதும் முதல் ஆளாக வெளியே ஓடிவந்தேன் வலைதளங்கள் ஆகா...ஓகோ...என்று பாராட்டியதால் படம் பார்க்கப் போன எனக்கு இந்த வாரம்  கிடைத்த  அரை நாள் விடுமுறையும் அம்போ ஆனது 

அவியிங்களுக்கு God’s Own Country அரிய உணர்ச்சியான நாள்...ஆனால் எனக்கு God’s Own Country படம் ஓர் அறுவையான நாள்.
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1