google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நான்தான் பாலா-சினிமா விமர்சனம்

Saturday, June 14, 2014

நான்தான் பாலா-சினிமா விமர்சனம்



கதாநாயக நடிகராக விவேக் சிறப்பாக நடித்திருந்தாலும் சரியான துணை நடிகர்கள் இல்லாமல்.... நான்தான் பாலா 
எந்தப் பிரமாண்டமும் காட்டாமல் சாதாரணமான சினிமாவானது

naanthaanbala

கும்பக்கோணத்தில்  பெருமாள் கோயில் பிராமண பூஜாரியான பாலா (விவேக்) கண்ணியமானவன் மனிதாபிமானம் மிக்கவன் சந்தர்ப்ப வசத்தால் திருட்டு பழியுடன் சிறைக்கு சென்ற  தன் வயதான தந்தையை வெளியில் கொண்டுவர தேவைப்படும் பணத்தை காஞ்சிபுரம்  ரவுடி  பூச்சி (வெங்கட் ராஜ் ) யிடம் வாங்குகிறான்

அவமானத்தால் பாலாவின் தாய்-தந்தை தற்கொலை செய்துகொள்ள... பாலாவும்  தன் சமுகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறான் அதனால் தனக்கு உதவிய பூச்சியுடன்  காஞ்சிபுரத்தில் பாலா  நட்பாக சேர்ந்து வாழ்கிறான்

அங்கே  அவனுக்கு பூச்சியின் நட்பும் செல்முருகன் பழக்கமும்  வைசாலி (ஸ்வேதா) யின் காதலும் என்று வாழ்க்கை நகரும் போது..........பூச்சி ஒரு கூலிப்படை கொலைகாரன் என்றும் கை தென்னவன் என்ற கொலைகாரனின் கையாள் என்றும் தெரிய வருகிறது தன் நண்பன் பூச்சியை திருத்தி அவனை போலீசில் சரணடைய செய்ய முயற்சிக்கிறான் பாலா.......



பாலா தன் நண்பன் பூச்சியை திருத்தினானா? ஆச்சாரமான பாலாவின் தெருவில் தின்பண்டங்கள் விற்கும் வைசாலியுடன் உண்டான காதல் என்ன ஆனது? என்பதே கதை



விவேக்.......சாமி படத்தில் இதே போன்று காமெடி வேடத்தில்  ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை கேலியும் கிண்டலும் செய்து காமெடியனாக நடித்த விவேக் இப்படத்தில் முழு கதாநாயகராக...அதேநேரம் யார் மனதும் புண்படாத வண்ணம் நடித்துள்ளார் அவரது அனுபவம் வசன உச்சரிப்பில் அவருக்கு கைகொடுக்கிறது

செல் முருகன் காமெடி நடிகராகவும்  மற்றபடி ஸ்வேதா,வெங்கட் ராஜ்,கை தென்னவன்..அவரவர் பாத்திரங்களில்  நடித்திருந்தாலும் திரைக்கதையில் கதாநாயகனுக்கு நிகரான வில்லன் பாத்திரம் இல்லாததும் விவேக்கின் ஒன் மேன் ஷோ படமாகப் போனது

கண்ணனின்  சிறப்பான இயக்கம் வெங்கட் கிரிஷியின் இனிமையான இசை... எல்லாமிருந்தும்   சறுக்கலான திரைக்கதை, யதார்த்தமில்லாத  வசனங்கள்,தொலைகாட்சி அழுவினி நாடகத் தன்மை, அடிக்கடி உபயோகிக்கப்படும் யாருக்கும் புரியாத சமஸ்கிருத ஸ்லோகங்கள் , திரைக்கதைக்கு ஓட்டத்துக்கு பின்தங்கிய மகாபாரத குட்டிக்கதை..... பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது............நான்தான் பாலா

எவ்வளவுதான்  விவேக் நான்தான் பாலா-வை தன் சிறப்பான நடிப்பால் தோளில் தூக்கி  சுமந்தாலும் மற்ற நடிகர்களின் நடுத்தரமான நடிப்பும் மந்தமான கதையும் பிரமாண்டமாக வரவேண்டிய படத்தை சாதாரணமாக ஆக்கிவிட்டது 

என்  பார்வையில்..........
நான்தான் பாலா சாதாரனமானவன்தான் படம்-பரவாயில்லை ரகம் 
விவேக்கின்  விவேகமான அனுபவ நடிப்புக்காக படம் பார்க்கலாம்

நீங்கள் படம் பார்த்தவராக இருந்தால் உங்கள் மதிப்பீட்டை தெரியப்படுத்தவும் 

பார்வையாளர்களின் மதிப்பீடு..............




படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1