google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ராமானுஜன்-சினிமா விமர்சனம்

Friday, July 11, 2014

ராமானுஜன்-சினிமா விமர்சனம்


தேசிய விருதுகள்  பெற்ற பாரதி,பெரியார் போன்ற வாழ்வியல் படங்களை இயக்கிய ஞான ராஜசேகரின் கணிதமேதை பற்றிய வாழ்க்கைப் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு..........ராமானுஜன் 

சிறுவயதிலேயே கணித  அறிவில் ஞானியாக விளங்கும் கும்பக்கோணம் சிறுவன் ராமனுஜன் (அன்மோல்) கணித பாடங்களில் மட்டுமே சிறந்து விளங்குவதும் மற்ற பாடங்களில் பின்தங்கி இருப்பதும் அவனது பள்ளி ஆசிரியர்கள் தந்தை முதற்கொண்டு அனைவராலும் ஒதுக்கப்படுகிறான் 

ஆனால் 

வாலிபர் ராமானுஜன் (அபினய்) மூளையில் ஒளிந்திருக்கும் அசாத்திய கணிதத் திறமையைக் கண்டறிந்த பிரிட்டிஷ் பேராசிரியர் ஹார்டி (கெவின் மெக்காவன்) உதவியால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் தன் திறமையை காண்பித்து உலகம் வியக்க பாராட்டப்படுகிறார் இளம் வயதில் நோய் பாட்டு மரணம் எய்துகிறார் 

இயக்குனர் ஞான ராஜசேகரன் தனக்கே உரிய திறமையால் ராமானுஜம் வாழ்க்கை கதையை செல்லுலாய்ட் கதையாக வெள்ளித்திரையில் காட்டினாலும் இதற்கு முந்தைய பாரதி,பெரியார் படங்களில் தெரிந்த ஓர் ஆழம் இல்லை 

பள்ளிச் செல்லும் சிறுவன் முதல் மனைவியுடன் வாழ்ந்து 32 வயதில் மடியும் ராமானுஜம் வாழ்வில் உள்ள முக்கிய நிகழ்வுகள் மட்டுமே படம் காட்டப்படுவதால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் காட்சிகள் எதுவுமில்லை 

(யோவ்...பதிவரே! அதுக்காக ராமானுஜம் கானா பாலாவுடன் குத்து பாட்டும் ஆட்டமுமா போடமுடியும்?..ஆங்)

அதுக்குச்  சொல்லவில்லை நியாயன்மார்களே! படத்தில் காட்சிக்கு காட்சி சோகம் குடியேறி நெஞ்சை அடைக்குதைய்யா நம்ம அழுவினி டிவி சீரியலை பார்த்தது போல் இருக்குதய்யா.....

ஆனாலும் இயக்குனரின் அட்டகாசமான வசனங்கள் ஆளை மயக்குதைய்யா சில காட்சிகள் நெஞ்சைத் தொடுதையா?
கேம்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஆங்கிலேய மாணவர்கள் பேராசிரியர் ஹார்டியிடம்.......

தன்  கணித வினாக்களுக்கு கடவுள்தான் பதில் தருகிறார் என்று சொல்லும் ராமனுஜனுக்கு ஏன் அய்யா உதவுகிறீர்கள்? என்று கேட்க....

பேராசிரியர் ஹார்டியோ.....அவனுக்குள் இருக்கும் அறிவாளியே கடவுள் என்று நம்பும் அவனது நம்பிக்கையே பதில் அளிக்கிறது என்று சொல்லும் காட்சி......

ஒவ்வொரு மனிதரிடமும் ஒளிந்திருக்கும் நம்பிக்கையின் வெற்றியை காட்டுகிறது 

ராமனுஜனாக  நடித்திருக்கும் அபினய் முகமும் பாவனையும்   அறிவுஜீவியாக கனகச்சிதமாக பொருந்துகிறது ராமானுஜம் மனைவி ஜானகியாக பாமா நல்ல தேர்வு மகனை நினைத்து உருகவைக்கும்  தாயாக சுகாஷினி அருமையான நடிப்புபேராசிரியர் ஹார்டியாக நடித்துள்ள கெவின் மெக்காவன் யதார்த்தமாக நடித்துள்ளார்

நிழல்கள் ரவி,ஒய்.ஜி.மகேந்திரன் மிளிர்கிறார்கள் மற்றும் சரத் பாபு, அப்பாஸ், மனோபாலா, ராதாரவி, டி.பி. கஜேந்திரன் என நட்சத்திர பட்டாளம் வந்துபோகிறார்கள்   

ரமேஷ் விநாயகத்தின் இசையில் அந்த  காலகட்டத்துக்கு ஏற்ப பாராம்பரிய பின்னணி இசையும் பாடல்களும் உயிரோட்டமாக உள்ளது ஆரம்பத்தில் வரும் வாணி ஜெயராமின் பஜன் பாடல் சிறப்பு 

சன்னி ஜோசப் ஒளிப்பதிவு வெள்ளித்திரையில் ஓர் ஓவியமாக பளிச்சிடுகிறது ராமானுஜம் வாழ்ந்த காலகட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது 

‘பூஜ்யத்தை பூஜ்யத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும்? ஏன் பூஜ்யத்தை நீங்கள் மதிப்பதில்லை?" என்று சிறுவன் ஆசிரியரிடம் (டெல்லி கணேஷ்)  கேட்பது போல் தொடங்கும்  கலகலப்பான முதல் பாதி தொடர்ந்து அழுது வடிந்து அதிலும் பின்பகுதி மிக நீளமான அக்கப்போர் ஆக தெரிகிறது ஆங்கிலேயர்கள் எல்லோரும் தமிங்கிலத்தில் பேசுவது ஏதோ டப்பிங் படம் பார்க்கும் உணர்வு.......

ஆனாலும்.......

நம்பிக்கையுடன் வாழ்ந்து  மடிந்த ஓர் அறிவுஜீவி,மாமேதை,இன்றுவரை உலகத்தையே உற்றுப்பார்க்க வைக்கும் கும்பகோணத்து கணித மேதை இராமானுஜம் கதை ராமானுஜன் படமாக வந்துள்ளது குடும்பத்தோடு குழந்தைகளோடு காணத்தவறாதீர்கள்
அந்த அறிவுமேதை  ராமானுஜரை புறக்கணித்தது போல்  இந்த ராமனுஜனையும் புறக்கனித்துவிடாதீர்கள்  மாணவர்களுக்கு ஒருநாள் பள்ளிக்கூடம் ராமானுஜன் ஓடும் திரையரங்குகளில் நடந்தால் தவறில்லை 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1