google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரபாஷா(தெலுங்கு)-சினிமா விமர்சனம்

Tuesday, September 09, 2014

ரபாஷா(தெலுங்கு)-சினிமா விமர்சனம்

எந்த புதுமையான பரிமாணமமும் இல்லாத  வழக்கமான டோலிவுட் ஸ்கிரிப்ட்வுடன் பொழுது போக்கு சூத்திரமான நகைச்சுவை,குடும்ப சென்டிமென்ட்,ஹீரோயிசத்துடன் வந்துள்ள ஜூனியர் என்.டி.ஆரின் படமே...ரபாஷா   


rabhasa
படத்தின் கதையாக...........
அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்ப வரும் இளைஞன் கார்த்திக் (ஜூனியர் என்டிஆர்) தனது தாய் (ஜெயசுதா) வுக்கு கொடுத்த வாக்குப்படி தனது மாமன் தனஞ்செய் (சாயாஜி ஷிண்டே) மகள் மரடலு இந்துவை (சமந்தா) சந்தித்து திருமணம் செய்ய நினைக்கிறான்

கார்த்திக் தவறுதலாக இந்துவின் தோழி பாக்கியத்தை (ப்ரனிதா) தன் மாமா மகள் என்று நினைத்து சந்திப்பதும் ஆனால் இந்துவோ முகம் தெரியாத தன் தோழிக்கு உதவிய ஒரு கனவு மனிதனை திருமணம் செய்ய தேடிக் கொண்டிருப்பதும்.........

இதற்கிடையில் இன்னொரு கதையாக...... 

ஒரு கிராமத்தில் நீ பெரிசா? நான் பெரிசா? என்று பெட்டி ரெட்டி (ஜெயப்பிரகாஷ் ரெட்டி) மற்றும் காங்கி ரெட்டி (நாகிநீடு) தலைமையில் போராடும் இரண்டு குடும்பங்களின் சண்டைகளும்  கார்த்திக் அவர்கள் சண்டையை தீர்த்துவைக்க முயலுவதும்......

கார்த்திக் தன் தாயின் ஆசையாக தன் மாமன் மகளை மணந்தாரா...? 
இந்து தன் கனவு மனிதனை கண்டுபிடித்தாளா....? 
கார்த்திக் அந்தக் கிராமத்து பெரிசுகளின் பரம்பரைச் சண்டையை  தீர்த்து வைத்தாரா...? 
........என்பதை கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் என்று படம் காட்டுகிறார் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் 
rabhasa

பைக்கில் பறந்து பறந்து கார்களை அப்பளமாய் அடித்து நொறுக்கும்  அதிரடிச் சண்டையுடன்  வழக்கம் போல் இரண்டு நாயகிகளுடன் ஆட்டம் பாட்டம் என்றும் ரபாஷா படத்தில் காமெடியிலும் கலக்குகிறார் ஜூனியர் என்.டி.ஆர் 

சமந்தாவின் கவர்ச்சி வேட்டை இந்தப் படத்திலும் ஜொள்ளுகிறது...ச்சே.. தொடர்கிறது  ப்ரனிதா........ஒரு சிறிய பாத்திரத்தில் வந்து அரைகுறை ஆடையில் வரும் அம்மணி ஒரு கனவு பாட்டில் ஆட்டம் போட்டு காணாமல் போய்விடுது

rabhasa

இரண்டாவது பாதியில் வரும் பிரமானந்தம்.......  கில் பில் பாண்டே போல் இப்படத்திலும் பார்வையாளர்களை துள்ளி துள்ளி சிரிக்க வைக்கிறார் 

எஸ்.தமனின் பின்னணி இசையும் பாடல்களும் மனதைத் தைக்கவில்லை படத்திற்கு மிகப் பெரிய பலவீனம் 

சில அதிரடி சண்டைக்காட்சிகள், சிரிப்பூட்டும் நகைச்சுவை காட்சிகள் தவிர சிறப்பாக எதுவுமில்லை என்றாலும்.....


நீங்கள் ஒரு ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர் எனில் ரபாஷா படத்தை பார்க்கவில்லை என்றால் நீங்கள் எதையோ இழந்து விட்டதைப் போல் உணர்வீர்கள்

************************************************************
விரைவில்..............


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1