google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: விஜய் ஆண்டனியின் சலீம் சுட்ட படமா....?

Wednesday, September 03, 2014

விஜய் ஆண்டனியின் சலீம் சுட்ட படமா....?


விஜய் ஆண்டனியின் சலீம் படம் கொரியன் பிக்பாங் (BigBang 2007 ) படத்திலிருந்து சுடப்பட்ட காட்சிகளுடன் அதன் தாக்கத்தில் உருவான கதை என்றும் வலைதளங்களில் பேசப்படுகிறது....

சலீம் படத்தின் கதை..........

மனிதாபிமானமும் தொண்டு உள்ளம் கொண்ட டாக்டர் சலீம்  தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் நிஷாவால் புறக்கணிக்கப்படுகிறார்

அதேநேரம்  பணமே குறிக்கோளாக உள்ள அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையின் பாஸ் அவரை அவமரியாதை செய்து வேலைநீக்கம் செய்கிறார்

மந்திரி தவபுன்னியத்தின் மகன் உட்பட நாலு பேரால் கற்பழிக்கப்பட்ட  ஒரு ஏழை இளம் பெண்ணை சலீம் காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சை அழிக்கும் போது அவள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்....

எல்லாவற்றுக்கும் மேலாக சட்டத்தை மீறிய ஒரு போலிஸ் அதிகாரியால் காவல்நிலையத்தில் வைத்து டார்ச்சர் செய்யப்படுகிறார்

இதனால் மனக்குழப்பம் அடைந்த டாக்டர் சலீம் ஒருநாள் மட்டும் தனது சாந்தக் குணத்தை விடுத்து.........

அவர் வேலை செய்த மருத்துவமனை பாஸை தாக்கிவிட்டு.........
மந்திரி மகனையும் அவனது கூட்டாளிகளையும்  ஒரு நட்சத்திர ஹோட்டலில் துப்பாக்கி முனையில்  பிடித்துவைத்து மீடியாக்களிடம் மந்திரியை  தன் மகனின் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கிறார் 

உச்சகட்டமாக தனது டாக்டர் நண்பர் சாமிநாதனிடம்  சொல்லி தனது வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுத்து அன்னை சாரா அனாதை குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கச் சொல்லிவிட்டு..........

மந்திரியின் மகனுடன் காரில் தப்பிக்கும் சலீம் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டாக அவனுக்கு தண்டனையும் கொடுத்துவிட்டு தனது சமுக சேவையை   தொடர்கிறார்........
பிக்பாங் படத்தின் கதையாக...............

சாதாரண  சம்பளத்தில் வேலை செய்யும் கட்டுக்கோப்பான வாழ்க்கை வாழும் பார்க் மன்-சூ அவன் வீட்டிலும் ஆபீஸிலும் ஏற்படும் குழப்பத்தால் வெறுப்பு நிலையில் இருக்க.........
அவரது மனைவி அவருடன் வாழ மறுத்து விவாகரத்து செய்ய.......
அவரது ஊழல் முதலாளியும் அவரை வேலை நீக்கம் செய்ய.......
ஒரு நாள்மட்டும் நானும் ரவுடி என்ற கணக்கில் மாறிவிடுகிறார் 
தெருவில் குழப்பம் விளைவிக்கும் பார்க் மன்-சூ ஒரு போலிஸ் அதிகாரியால் கைது செய்யப்பட......

காவல் நிலையத்திலிருந்து ஒரு ரவுடியுடன் சேர்ந்து போலிஸ் வாகனத்தில் தப்பிவிடுகிறான் பார்க் மன்-சூ ஒரு சமுக விரோதியாக தண்டிக்கப்படுகிறான் 

விஜய் ஆண்டனியின் சலீம் படம் கொரியன் பிக்பாங் (BigBang 2007 ) படத்தின் கதை சம்பவங்களை முதல் பாதியில் காட்சி படுத்தினாலும்.........

இயக்குனர் நிர்மல் குமார் சலீம் படத்தில் துவக்கத்திலிருந்து கடைசிவரை மதசார்பின்மை, பாலியல் வன்கொடுமை, அரசியல்வாதிகளின் மொள்ளமாரித்தனம்,போலிஸ் அதிகாரிகளின் அதிகார துஸ்பிரயோகம்,தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் வியாபார தந்திரங்கள்....என்று முழு நீள சமுக அக்கறை கொண்ட படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது 

கொரியன் பிக்பாங் படத்தின் தாக்கம் சலீம் படத்தில் ஊறுகாய் போன்று மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளது 


வேறு வெளிநாட்டு படங்களின் தாக்கமே என்றாலும் சலீம் போன்ற சமுக அக்கறைகொண்ட படங்களை வருக வருக என் வாழித்தி....வரவேற்போம்
 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1