google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அமர காவியம்-சினிமா விமர்சனம்

Friday, September 05, 2014

அமர காவியம்-சினிமா விமர்சனம்நான் வெற்றிப்பட இயக்குனர் ஜீவா சங்கர்,நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா, கேரள மாடல் அழகி (Kerala Miss Fitness) மியா ஜார்ஜ்... இவர்களால் மட்டுமின்றி  ஆர்யா-நயன்தாராவை அழவைத்த 1982-ல் நடந்த ஓர் உண்மை சம்பவத்தின் கதை என்பதாலும் கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட  திரைப்படம்.... 

அமர காவியம் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா...?

amarakaaviyam


அமர காவியம் படத்தின் கதையாக...........

ஊட்டியில் ஒரு  பள்ளிகூடத்தில்  படிக்கும்  ஜீவா (சத்யா) தன் நண்பன் பாலாஜி (Ananth Nag) க்காக கார்த்திகா (மியா ஜார்ஜ்) விடம் காதல் தூது செல்ல....

கார்த்திகாவோ ஜீவாவைத்தான் அவள்  உயிருக்கு உயிராக காதலிப்பதாக ஜீவாவிடம் சொல்ல.....

ஜீவா-கார்த்திகா ......இருவருக்குள்ளும் காதல் தீ பற்றி எரிகிறது 

ஒருநாள் இவர்களின் காதல் கிளுகிளுப்பு போலிஸ் மூலமாக பெற்றோர்களுக்கு தெரியவருகிறது

கார்த்திகாவின் பெற்றோர்  ஜீவாவை எதிர்க்க... 

அதனால் உண்டாகும் வாக்குவாதத்தில்  கார்த்திகாவின் அப்பா ஜீவாவை  அடிப்பதும்  ஜீவா ஆத்திரத்தில் கார்த்திகாவின் வீட்டில் பைக்குக்கு தீ வைப்பதுமாக தொடர்கிறது.......

மீண்டும் போலிஸ் தலையிட்டு கோர்ட் மூலம் ஜீவாவின் மனநிலையை மருத்துவரிடம் பரிசோதிக்கச் சொல்கிறது 

கார்த்திகா பெற்றோருடன் கோயம்புத்தூருக்கு மாற்றலாகிச் சென்று அங்கே உள்ள ஒரு பொறியல் கல்லூரியில் படிக்க.......

நண்பன் பாலாஜியின் தந்திரத்தால் ஜீவா கார்த்திகாவைத் தேடி சென்னையில் அலைய...

ஜீவா-கார்த்திகா  மீண்டும் சந்தித்தார்களா....? அவர்கள் காதல் வெற்றி பெற்றதா....? என்பதை திரையரங்கில் காணுங்கள் ஜெயில் லாக்கப்பிலிருந்து ஜீவாவை போலிஸ் கோர்ட்டுக்கு வேனில் அழைத்துச் செல்ல்லும் போது ஜீவா நினைத்துப் பார்ப்பதாக  அமர காவியம் படம்  ஆரம்பிக்கின்றது...........அதுவே இது ஒரு வில்லங்கமான காதல் என்பதைச் சொல்கிறது 

இடைவேளைக்கு முன்பு போலிசாரிடமிருந்து தப்பித்த ஜீவா ஒரு சுடு காட்டில்........அங்கே கார்த்திகாவின் அப்பா ஒரு சமாதிக்கு மலர் தூவுவதை ஒளிந்திருந்து   பார்ப்பதுபோல் காட்சி 


ஒரு காதல் படத்தில் திகில் ஊட்டவேண்டும் என்று திணிக்கப்பட்ட இந்தக் காட்சிகள்  அமர காவியத்தை சிதைந்த காவியமாக ஆக்கிவிட்டது

இயக்குனர் ஜீவா சங்கரே இப்படத்தின் ஒளிப்பதிவாளர் என்பதால் அவர் மனதில் நினைத்தவைகளை குளுகுளு காட்சிகளாக ஒரு கவிதை போல் திரையில் படம்காட்டியுள்ளார்  ஆனால் திரைக்கதையில் சறுக்கலாக.........படத்தின் சஸ்பென்ஸ் இடைவேளையில் இயக்குனராலேயே உடைக்கப்படுவது நமக்கு கிளைமாக்ஸ் புஸ்வானம் போல்  ஆகிவிடுகிறது

 முதலில் கார்த்திகாவுக்கு ஜீவா மீது ஏன்  காதல் வந்தது...?
கடைசியில் ஜீவாவுக்கு கார்த்திகா மீது ஏன் சந்தேகம் வந்தது....? என்பதையும் அழுத்தமாக சொல்ல மறந்த கதையாக............ வேகமும் விறுவிறுப்பும் இல்லாத அமர காவியத்தில் காவியத்தை காணவில்லை

அமர காவியம்  படம் பார்க்கும் போது...கிளிஞ்சல்கள், பன்னீர் புஷ்பங்கள்,7G-ரெயின்போ காலனி, காதல் கொண்டேன்....போன்ற நிறைய படங்கள் நினைவுக்கு வந்தது எனக்கு மட்டும்தானா...? 

நடிகர் சத்யா......கதைக்கு ஏற்ற வயது,உருவம் தவிர  முகத்தில் உணர்வுகளை காட்டுவதில் நடிப்பு ரொம்ப தூரம்   இன்னும் வளரனும் தம்பி

கேரளா இறக்குமதி மியா ஜார்ஜ்.... அழகிலும் கவர்ச்சியிலும் அப்படியே இன்னொரு  லட்சுமி மேனன்  ஆனால் கோலிவுட்  பட்சிகள் கொண்டாடும் அதிஷ்டம் உள்ளதா...? தெரியவில்லை 

கொஞ்ச நேரம் டீக்கடை மாஸ்டராக வரும் தம்பி ராமையா படத்திலும் கதையிலும் சும்மா மற்றபடி பாலாஜியாகவும் கவுதமுமாக வில்லன்களாக நடித்தவர்கள் கதாபாத்திரம் பெரிதாக இல்லை ஜீவாவின் அப்பா கதாபாத்திரமும் நடிகரும்  நல்ல நடிப்பு

ஜிப்ரான் இசையில் பாடல்களைவிட பின்னணி இசை மனத்தைக் கவர்கிறது அதிலும் படம் முடிவில்  பின்னணி இசையில் ஒரு காவியமே படைத்துள்ளார் 

ஜீவா சங்கர் ஒளிப்பதிவில் ஊட்டியின் அழகை திரையில் பனிபடர்ந்த ஓவியமாக இதுவரை எந்த திரைப்படத்திலும் பார்த்திருக்க முடியாத  மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகு.......

amarakaaviyam


அமர காவியம் படத்தில் வரும் இழுவையான நீளமான கிளைமாக்ஸ் காட்சியும் (எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்பதைத் தவிர....) முடிவும்  இதற்கு முன்பு நாம் பல காதல் படங்களில் பார்த்ததுதான் ஆனால் அதைப் பார்த்து ஆர்யாவும் நயன்தாராவும் ஏன் அழுதார்கள்....? என்பது மட்டும் புதிர்

ஆக மொத்தத்தில்...........அமரகாவியம் திரைப்படம் ஒருமுறை பார்க்கலாம் அதிலும் காதலர்களுக்கு இது ஒரு காதல் விருந்து 

படம் பார்த்தவர்களின் மதிப்பீடாக.............

அமர காவியம்-படம் எப்படியிருக்கு.......?
படம் பார்த்துவிட்டு வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி...........இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1